Toxic Box Office: யஷ்ஷின் டாக்ஸிக் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? நினைத்தே பார்க்காத ரெக்கார்டு!
சென்னை: யஸ் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் நேற்று தியேட்டரில் வெளியான டாக்ஸிக் திரைப்படம் முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸில் பெரிய அளவில் மாஸ் காட்டி இருக்கிறது. படம் குறித்து ரசிகர்கள் வருத்தத்தோடு ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்க, வசூல் மட்டும் தனது வேலையை பார்த்துக்கொண்டு போயிருக்கிறது. அதாவது படம் எப்படி இருந்தாலும் பரவாயில்லை கல்லா பெட்டி வசூல் எவ்வளவு என்று கேட்பவர்களுக்கு தற்போது வந்திருக்கும் பதில் 100 கோடியே தாண்டி இருக்கிறது என்பதுதான்.
டாக்ஸிக் பட முதல் நாள் வசூல் நிலவரம்
கிடைத்துள்ள தகவலின் படி, டாக்ஸிக் முதல் நாளில் இந்தியாவில் சுமார் 101.10 கோடி நெட் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. உலக அளவில் 140.75 கோடி வசூலை தொட்டதாகவும் மற்றொரு அறிக்கை தெரிவிக்கிறது. இது இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் தயாரிப்பாளர் வெளியிடும் அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
சாமி பேரு வந்தாலே வசூல் வேற லெவலா? 4 நாளில் ரவி தேஜாவின்
டாக்ஸிக் படம் வெளியாவதற்கு முன்பே உருவாக்கப்பட்ட ஹைப் கொஞ்சம் நஞ்சம் அல்ல. யஷ் என்றாலே கேஜிஎஃப் நினைவுக்கு வரும். அதனால் ராக்கி பாய் அடுத்து என்ன? என்ற கேள்வியோடு ரசிகர்கள் பல வருஷங்களாக காத்திருந்தனர். அந்த காத்திருப்புக்கு முதல் நாள் வசூல் நல்ல பதிலை கொடுத்திருக்கிறது. 100 கோடி என்பது இப்போது சாதாரணமாகிவிட்டது என்று சிலர் சொன்னாலும் ஒரு படம் வெளியான முதல் நாளிலேயே அந்த வசூலை தொடுவது என்பது இன்னும் பெரிய விஷயம் தான்.

கலவையான விமர்சனம்
அதுவும் ஒரே மொழியில் மட்டும் வெளியாகும் படமாக இல்லாமல் பல மொழிகளில் வெளியாகி இந்த அளவுக்கு வசூல் செய்திருப்பது யஷ்ஷின் பான் இந்தியா மார்க்கெட்டை காட்டுகிறது. ஆனால் இங்குதான் டாக்ஸிக் படத்தின் கதை கொஞ்சம் சுவாரசியம் ஆகிறது. ஒரு புறம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி தாண்டி இருக்கிறது. மறுபக்கம் படத்தை பார்த்து ரசிகர்கள் என்னப்பா படம் இது என்று கேட்கும் குரல்களும் இருக்கின்றன.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
அதாவது பாக்ஸ் ஆபீஸ் வசூல் பார்த்தால் படம் சூப்பர் ஹிட் மூவியாக ஓடுவது போல தெரிகிறது. ஆனால் ரிவ்யூ சில இடங்களில் அவ்வளவு எதிர்பார்ப்பு வேண்டாமே என்று சொல்ல வைக்கிறது. இதுதான் தற்போது டாக்ஸிக்கான காமெடி. பெரிதாக எதிர்பார்ப்போடு போன ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் கொடுத்து இருந்தாலும் கதையில் யஷ் நடிப்பு மற்றும் அவருடைய கேரக்டருக்கான மாஸ் மட்டும் படத்தில் மிகப் பரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
டாக்ஸிக் பட ப்ரொமோஷனில் ஏற்பட்ட பெரிய விபத்து.. 2 மாணவர்களுக்கு காயம்! யஷ் முன்பு என்ன நடந்தது?
இப்போது வந்து கொண்டிருக்கும் கலவையான ரியாக்ஷனை வைத்து பார்க்கும் போது இந்த 100 கோடியே 200 கோடியாக மாற்றப் போகிறாரா? இல்லை முதல் நாள் கொண்டாட்டத்தோடு வசூல் வேகம் குறையப்போகிறதா? என்பதுதான் அனைவரும் எதிர்பார்ப்பது.


Click it and Unblock the Notifications
