நாலு எழுத்து நடிகைக்கு, 5 ஏக்கர் நிலம் தந்த அரசியல்வாதி? ஆக்கிரமிப்பில் சென்னை ஏரி.. பிரபலம் பளிச்
சென்னை: அரசு அதிகாரிகளை பொறுத்தவரை நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பற்றி கவலைப்படுவதே இல்லை.. அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்வதை பற்றியும் நடவடிக்கை எடுப்பதில்லை என்று மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் ஒரு பேட்டியில் வேதனை தெரிவித்துள்ளார்.
Third Eye Talkies என்ற யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் சமீபத்தில் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அந்த பேட்டியில், அம்பிகா, ராதாவின் ஏஆர்எஸ் கார்டன் உருவான விதம் குறித்தும், ஆக்கிரமிப்பு நிலங்களில் அதிகாரிகளின் அலட்சியம் குறித்தும் விரிவாக பேசியிருந்தார்.

அம்பிகா ராதா: "ஏஆர்எஸ் - அம்பிகா, ராதா, சரஸம்மா இவங்கதான் ஏஆர்எஸ்.. எம்ஜிஆர் மரணத்தருவாயில் இருந்தபோது, அம்பிகா, ராதா, சரஸம்மா இவர்கள் 3 பேருமே எம்ஜிஆர் காலை கட்டிப்பிடிச்சிட்டு அழறாங்க.. எங்களுக்கு சென்னையில் ஏவிஎம் ஸ்டுடியோ போல ஒரு ஸ்டுடியோ கட்டணும்னு நீண்ட நாள் ஆசை.. அதனால் ஒரு இடம் வேணும் என்று கேட்கிறார்கள்.
அப்போது திருநாவுக்கரசுதான் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்தார். எம்ஜிஆரிடம் இப்படி போய் காலில் அழுது இடம் கேட்க சொன்னதே திருநாவுக்கரசுதான்... அப்போது வளசரவாக்கம் பகுதியில் வீடுகளை கட்டித்தருவதற்காக நிலம் கையகப்படுத்தி வைத்திருக்கிறார்கள். இவர்கள் 3 பேருமே எம்ஜிஆரிடம் நிலம் கேட்டதும், எம்ஜிஆர் திருநாவுக்கரசை அழைத்து, 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி தருமாறு கூறுகிறார்.
பாரதிராஜா: இந்த விஷயம் தெரிந்ததும் பாரதிராஜா வர்றார்.. நான்தானே எம்ஜிஆரிடம் இவர்களை அறிமுகப்படுத்தினேன்.. எனக்கு இடமில்லையா? என்று கேட்கிறார். உடனே ஏஆர்எஸ் கார்டனுக்காக ஒதுக்கப்பட்ட இடத்திலேயே பாரதிராஜாவுக்கும் நிலம் வழங்கப்பட்டது. ஆனால், தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை பாரதிராஜா விற்றுவிட்டார்.
எம்ஜிஆர் ஒதுக்கி தந்த அந்த இடத்தில்தான் ஏஆர்எஸ் ஸ்டுடியோ கட்டப்பட்டது. அரசு நிலம் 99 வருஷத்துக்கு இலவசமாக இவர்களுக்கு தரப்பட்டது. திரைப்பட சேவைக்காக இந்த இடம் தரப்பட்டது. இந்த ஸ்டுடியோவை செங்கல், சிமெண்ட், கம்பி வைத்து கட்டித்தந்தது, திருநாவுக்கரசும், மூப்பனாரும்தான்..
குளம், குட்டைகள்: அன்று ஏசி சண்முகம், ராமசாமி உடையார், அபபல்லோ ரெட்டி இவர்கள்தான் அன்று அரசியலை தீர்மானித்தார்கள்.. அப்போதெல்லாம் ஏரி, குளம், குட்டைகள் ஒருபொருட்டே இல்லை. பச்சமுத்து, காட்டொங்கொளத்தூரில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருக்கிறார். ஆனால், அரசு ஏன் அங்கே இன்னும் போகவில்லை? அங்கே ஒரு பெரிய ஏரி இருக்கிறது. பஸ்ஸில் போகும்போதே அந்த ஏரியை பார்கக முடியும். இன்று காட்டாங்கொளத்தூர் ஏரியா, எஸ்ஆர்எம் நகராக மாறிவிட்டது.
வேலூர் விஸ்வநாதன்: இதில் வேலூர் விஸ்வநாதனையும் சொல்லியாகணும்.. எம்ஜிஆர் காலத்தில் வேலூர் பூரா விலைக்கு வாங்கிட்டார். அரசு இயங்குகிறதா என்பதே சந்தேகமாக உள்ளது. இப்படித்தான் ஒரு டிஆர்ஓ, 5 கோடி ரூபாய் வாங்கிட்டு வேலையே வேணாம்னு கிளம்பி போயிட்டாரு.. அதிகாரிகளை பொறுத்தவரை, நீர்நிலை ஆக்கிரமிப்பு ஒரு பொருட்டே இல்லை.. அரசு அதிகாரிகளே ஏமாற்றும்போது, மக்கள் யாரிடம் செல்வது?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அதேபோல, கடந்த மாதம் Kingwoods News யூடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் பேட்டி தந்தபோதும், நடிகைகள் அம்பிகா, ராதா பற்றி கூறியிருந்தார். அதில், ஒரு பெரிய அரசியல் தலைவருக்கு ராதாவை அறிமுகப்படுத்தியது பாரதிராஜாதான்.. அதற்கு விலையாகவே ஏஆர்எஸ் கார்டன் தரப்பட்டது" என்றெல்லாம் அந்த பேட்டியில் சொல்லியிருந்தார்..
தமிழ் ஹீரோயின்: கடந்த வாரம் BBT யுடியூப் சேனலுக்கு தமிழா தமிழா பாண்டியன் அளித்த பேட்டியிலும், "என் இனிய தமிழ் மக்களே என்றுசொல்லிவிட்டு, ஒரு தமிழச்சியை கூட இவர் கதாநாயாகியாக்கியது இல்லை.. ராதா, ராதிகா, ரேவதி, ரஞ்சிதா, இவங்கெல்லாம் வெளிமாநிலத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவர்கள்தான். ஏன்? தமிழ் பெண்களிடம் அழகு, அறிவு இல்லையா? அவர்களுக்கு நடிக்க தெரியாதா?" என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications