Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்செட்டான பாரதிராஜா! முதல் மரியாதையால் வருந்திய சிவாஜி! படமாய்யா இதுனு கொந்தளித்த இளையராஜா

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல் மரியாதை படத்தில் நடித்த போது சிவாஜி கணேசனுக்கு திருப்தியே இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? அது போல் சிவாஜி படத்துடன் போட்டி போட்டு தோற்று போன மற்றொரு சிவாஜி கணேசன் படத்தை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கங்குவா என்கிற படம் ரிலீஸ் தேதி அறிவித்து வேட்டையன் படம் ரிலீஸ் அதே தேதி என்றதும் ரிலீஸ் தேதியில் பின் வாங்கியதாக செய்தி.

television sivaji ganesan

காலம் தான் எப்படி மாறிவிட்டது. இத்தனைக்கும் வேறு வேறு நடிகர் நடித்த படங்கள். ஒன்றாக வெளி வர பயப்படுகிறது. தயாரிப்பு நிறுவனங்கள் நாற்பது ஆண்டுகளுக்கு முன் இப்படியா இருந்தது.

சிவாஜியின் படங்கள் ஒரே நாளில் இரண்டு படங்கள் வந்திருக்கின்றன. சத்யராஜ் என்கிற சாதாரண நடிகரின் படம் அன்று ஒரே நாளில் மூன்று படங்கள் வெளிவந்திருக்கின்றன.

85ல் சிவாஜியை வைத்து இரண்டு பேர் படம் எடுக்கிறார்கள். ஒருவர் கதை மன்னன் கலைஞானம். மற்றவர் இமயம் பாரதிராஜா. கலைஞானம் அப்போது சிறு சிறு படங்கள் எடுத்து ஒரு தயாரிப்பாளராக நிற்கும் நேரம். நன்றாக கதை சொல்லுவார். அவருக்கு சிவாஜியை வைத்து படம் எடுக்க ரொம்ப நாள் ஆசை. சிவாஜியை வைத்து எடுக்க தயாரிப்பாளர், இயக்குனர்களுக்கு பெரிய ஆசை. அப்படி நாதஸ்வரக் கலைஞர் பற்றிய ஒரு கதையை சொல்லி சிவாஜி ஓகே சொல்ல 'மிருதங்க சக்ரவர்த்தி' தயாராகிறது. படம் வெற்றி.

ஏ.எஸ்.பிரகாசம் எழுதிய நாடகம் விஸ்வாமித்திரர். அதையே படமாக்கலாம் என சிவாஜியிடம் சொல்கிறார் கலைஞானம். இரண்டாவது படம் மிருதங்க சக்ரவர்த்தியை விட அசத்தலாக இருக்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் சிவாஜியோ 'அது புராணக் கதை. நிறைய செலவாகும். மேலும் இப்போது அந்தப் படங்கள் ஓடுவதில்லை... வேண்டாம்" எனச் சொல்லியும் கேட்காமல் படப்பிடிப்புக்கு இறங்குகிறார் கலைஞானம். சிவாஜியோடு, பிரபு, லக்ஷ்மி, கே.ஆர்.விஜயா, நளினி, ராதிகா, தீபா, நம்பியார், விஜயகுமார், ஸ்ரீகாந்த், மகேந்திரன் என பெரிய பட்டாளம். சிவாஜி தான் ராஜரிஷி 'விஸ்வாமித்திரர்'. முனிவர் வேடத்தில் கணீர், கணீரென சிம்மக்குரலில் சிவாஜி பேசும் படங்களோடு படம் தயாராகிறது.

அதே நேரத்தில் பாரதிராஜா, சிவாஜியை வைத்து 'முதல் மரியாதை' எடுக்க சிவாஜியை படப்பிடிப்புக்கு அழைக்கிறார். முதல்நாள் படப்பிடிப்பில் சிவாஜி ஃபுல் மேக்கப்பில், விக்கெல்லாம் வைத்து ரெடியாகி வந்து நிற்க பாரதிராஜா அப்செட்டாகிறார். இவரிடம் எப்படி சொல்வது என தயங்கி சில ஷாட்கள் நடக்க வைத்து எடுத்து அனுப்பி விடுகிறார். அன்று இரவு சிவாஜியோடு சாப்பிட அமர்ந்த பாரதிராஜா "இந்தப் படத்தில் உங்களுக்கு மேக்கப் கிடையாது, விக் கிடையாது, ஒரிஜினல் தலைமுடி, வேட்டி சட்டை மட்டுமே" என கிராமத்து பெரியவரின் இயல்பை சொல்லி விளக்கி விடுகிறார். சிவாஜியும் பாரதிராஜா சொன்னபடி செய்துவிட்டு வந்துவிடுகிறார். வீட்டில் வந்து "இந்தப் படத்தில் நடித்த நடிப்பில் எனக்கு திருப்தியே இல்லை...." என வருத்தப்படுகிறாறார் சிவாஜி.

படம் இரண்டும் ரெடியாகி விட்டது. இரண்டுக்கும் இசை ராஜா. 'மான் கண்டேன்...மான் கண்டேன்' பாடல் ராஜரிஷியில். 'அடி நீ தானா அந்தக்குயில்..'முதல் மரியாதையில். ராஜா முதல்மரியாதை பார்த்துவிட்டு 'என்னடா எடுத்து வச்சிருக்க....?' என புலம்புகிறார். இந்தப்படம் ஓடாது.. எனக்கு சம்பளமே வேண்டாம் என்கிறார் ராஜா.

ராஜரிஷி பார்க்க பாரதிராஜாவும், இளையராஜாவும் வருகிறார்கள். பார்க்கிறார்கள். அப்போ எவ்ளோ செலவு... என மலைக்கிறார் பாரதிராஜா. ராஜாவோ 'படம் அருமையாக வந்திருக்கிறது. வெற்றிப் படம் இது தான்..." என அப்போதே சான்றிதழ் கொடுக்கிறார்.

முதல்மரியாதை முதலில் ரிலீசாகிறது. படம் கூட்டம் அள்ளுகிறது. அடுத்த சில நாட்களில் 'ராஜரிஷி' வெளிவரவேண்டும். சிவாஜியின் தம்பி சண்முகம் கலைஞானத்தை அழைக்கிறார். "முதல் மரியாதை பிச்சுக்கிட்டு போவுது. இப்போ உங்க படத்தை வெளியிட்டா அடி வாங்கிடும். ரெண்டு வாரம் விட்டு வெளியிடுங்க" என 'அட்வைஸ்' சொல்கிறார். கலைஞானமும் பகைத்துக் கொள்ள விரும்பாமல் காக்கிறார்.

ஒரு மாதம் கழித்தும் மு.மரியாதைக்கு கூட்டம் குறையவில்லை. கலைஞானமோ வட்டி ஏறுவதால் படத்தை வெளியிடுகிறார். முதல் மரியாதைக்கு முன்னால் ராஜரிஷி தோல்வியடைகிறது. ஒருவர் தேவர்களை நடுங்க வைத்த மலைகளில் தவமிருக்கும் மலைச் சாமியார். மற்றவர் வீச்சரிவாள் தூக்கும் மலைச்சாமி தேவர்.

ஒருவர் ஆங்கார வசனம். அழகான மேக்கப். அட்டகாசமான செட் வேலைப்பாடுகள். மற்றவர் சலக்கும் ஆற்றங்கரை, குடிசை வீடு, ஆட்டுமந்தை, கண்டாங்கி சேலை, மீன்குழம்பு... ராஜரிஷி முதல் மரியாதையிடம் பெரிய அடி வாங்கி பெரும் தோல்வியை தழுவியது. ஏறக்குறைய 25 லட்சம் அன்று கலைஞானத்துக்கு நஷ்டம்.

ஒரு சிவாஜி படமே மற்றொரு சிவாஜி படத்தோடு போட்டி போடும். ஆனால் வெற்றியோ, தோல்வியோ நடிகனுக்கு என்பதை விட... கதைக்கும், உருவாக்கத்துக்கும் தான் வெற்றி. சிவாஜி என்கிற நடிகனையே வெற்றி பெறும் நடிப்பென்றால் என்ன என யோசிக்க வைத்த தருணம்... இதே செப்டம்பர் 1985. இவ்வாறு செல்வன் அன்பு தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+