60 வருஷத்துக்கு முன்னாடி இப்படி ஒரு படமா? நம்பியாருக்கு மேக்கப் போட எத்தனை மணி நேரம் ?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடிகர் நம்பியார் மேக்கப் போட 3 மணி நேரம் ஆகும் என சொல்லப்பட்டுள்ளது. மிக சிறந்த கேரக்டர் நம்பியாருக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றே சொல்லலாம்.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: "நெஞ்சம் மறப்பதில்லை"... திடீர்னு அந்தப் பாட்டுக் கேட்கத் தோன்றி படத்தோட சில காட்சிகளையும் பார்க்கத் தொடங்கினேன். இந்த படத்தை முதன் முதலாக ரிலீசில் பார்த்த போது பயந்திருக்கிறேன்.

television nambiyar

இயக்குனர் ஸ்ரீதரை இப்போ நினைச்சாலும் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. 60 வருடங்களுக்கு முன் இப்படி ஒரு கருவை யோசிச்சு, அது வெற்றி பெறும்னு நினைத்தது தான் ஆச்சர்யம். மறுபிறவி கான்செப்டை எடுத்து முதல் காட்சிகளில் அது ஒரு பேய்ப்படம் போலவே போகிறது.

தேவிகா சலங்கை சத்தத்தோடு வெள்ளை உடையுடுத்தி, ஹம் பண்ணிட்டே போகும் போது சிறு வயதில் பயந்திருக்கேன்.
படத்தில் என்னை ஆச்சர்யப்படுத்தின கேரக்டர் வில்லனாக வரும் ஜமீன்தார். பெயரே இல்லாமல் ஜமீன்தார் என்றே சொல்லப்படும் அந்த வேடத்தை செய்தது நம்பியார். படத்தின் நாயகனுக்கு அப்பாவானா ஜமீன்தார் முதல் காட்சியிலேயே இரண்டாவது திருமணம் செய்து கொண்டு மாலையும், கழுத்துமாக வருகிறார்.

வந்தவுடன் "எங்கே ராஜா?" எனக்கேட்க, கல்யாண்குமார் அவரை அலட்சியப்படுத்தி விட்டு உள்ளே போகிறார். அவரை தனியாக சந்தித்த ஜமீன்தார் "உங்கம்மா இறந்த பிறகு ஆறு வருடம் தனியாக தான் இருந்தேன். என் எதிர்காலத்தில் என்னை பார்த்துக் கொள்ள ஒரு பெண் தேவைப்படுவதால் திருமணம் செய்து கொண்டேன்" என ஒரு பெரிய விஷயத்தை கேஷுவலாக சொல்கிறார்.

அப்படியும் ராஜா என்கிற கல்யாண்குமார் ஏற்றுக்கொள்வதில்லை. தந்தையின் மறுமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத மகன் பின்னாளில் கண்ணம்மா என்கிற பெண்ணை காதலிக்கிறான். அந்தஸ்து பேதத்தில் ஜமீன்தார் இருவரையும் சுட்டுக் கொல்கிறார்.
மறுபிறவியில் ஆனந்தாக வரும் கல்யாண்குமாருக்கு இதெல்லாம் நினைவுக்கு வர கண்ணம்மாவாக தன் சினேகிதனின் தங்கை விஜயா தான் பிறந்திருக்கிறார் என அறிந்து நினைவுகளை மீட்கிறான்.

அப்போது அந்த அரண்மனையில் ஒரு 109 வயது கிழவன் இதை கேட்கிறார். அந்தக் கிழவன் தான் ஜமீன்தார். கடைசியில் விஜயாவை கொல்ல புதைத்து வைத்த துப்பாக்கியை எடுத்து அந்த வயதில் தன் அந்தஸ்து வெறியை தீர்த்துக் கொள்ளப் பார்த்து புதைகுழியில் புதைகிறார்.
நம்பியாரின் இந்த வில்லன் வேடம்...அப்பப்பா..நம்பியார் செய்த வெடங்களிலேயே மிகச்சிறந்த வில்லன் வேடம் இது தான். அவர் முறுக்கிய மீசைக்குள் கண்களை உருட்டுவதும், தாடை கூட வெறுப்பைக் காட்டுவதும்....ஒரு நல்ல முகத்திலேயே உணர்ச்சிகளைக் காட்டக்கூடிய நடிகர் நம்பியார் அவர்களுக்கு சரியான ரோல்கள் அமையவில்லையோ எனத் தோன்றுகிறது.

ஜமீன்தாராக இயக்குனர் ஸ்ரீதர் இவரிடம் செமயாக வேலை வாங்கி இருக்கிறார். கல்யாண்குமாரிடம் மறந்து விட்டதும் அது தான். மேக்கப்பில் உட்கார்ந்தால் மூன்று மணி நேரமாகுமாம் நம்பியாருக்கு இந்தப் படத்தில் மேக்கப் போட. இது போல ஒரு வில்லன் ரோல் மேக்கிங் வேறு இயக்குனர்கள் செய்ததாக தெரியவில்லை. இந்த நம்பியார் ரோலையும் சாகடித்து அதுவும் மறுபிறவி எடுத்து வருவது போல் மாற்றி எழுதியது தான் ராஜமௌலியின் 'மஹதீரா'...ராம்சரண் படம்.

நினைத்துப் பாருங்கள். காதலித்ததற்காக பெற்ற மகனை சுட்டுக் கொன்று விட்டு அரண்மனையும் பாழடைந்து, ஊர்மக்களும் ஒதுக்கி வைத்து, 109 வருடங்களாக வாழ்ந்து வரும் முதியவரின் வாழ்க்கையை...தள்ளாத வயதிலும் 'கண்ணம்மா' மேல் இருக்கும் கொலை வெறி...

நம்பியார் சார்...One of the great role...உங்களை சினிமாவில் தான் எல்லோரும் வீழ்த்தி இருக்கலாம். நடிப்பில் முடியாது...அட்டகாசம்.. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+