38 வருஷத்திற்கு பிறகு! இப்படி நடக்கும்னு கருணாநிதியும் விஜய் அப்பாவும் நினைத்திருக்க மாட்டார்கள்!
சென்னை: நீதிக்குத் தண்டனை படத்திற்கு சிறைச் சாலையில் இருந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி வசனம் எழுதி கொடுத்திருந்தார். அவர் எழுதிய வேறு படத்தின் வசனத்தை நடிகர் விஜய் பேசியிருந்தார்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் கூறியிருப்பதாவது: அது 1983. 'சாட்சி' படத்துக்குப் பிறகு இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரை கலைஞர் கூப்பிடுகிறார். அப்போ கலைஞர் எதிர்க்கட்சித் தலைவர். எஸ்.ஏ.சியும் சந்திக்கச் செல்கிறார். சாட்சி நன்றாக இருக்கிறது என கலைஞர் பாராட்டுகிறார். அப்போது எஸ்.ஏ.சி தன் படம் ஒன்றுக்கு வசனம் எழுதக் கேட்கிறார்.

"கதை எதுவும் இருக்கா?" எனக்கேட்க "கதை இப்போ எழுதிடலாம்.." எனச் சொல்லி விட்டு ஒரு கதையை தயார் செய்கிறார். கலைஞரை சந்தித்து கதையை சொன்னதும் அவருக்கும் பிடித்து விடுகிறது. கலைஞர் வசனம் எழுத தயாராகிறார்.
கலைஞர் வசனங்களை சீன் பை சீனாக எழுத வேண்டும். இந்த நிலையில் அரசியல் அமைப்பு சட்டத்தின் நகலை எரித்ததற்காக (என்று நினைக்கிறேன்) கலைஞர் கைது செய்யப்படுகிறார். உடனே எஸ்.ஏ.சி அடுத்த நாள் செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரம் கொடுக்கிறார்.
அதில் கலைஞர் கருணாநிதியின் படத்தை போட்டு சிறைக் கம்பிகளுக்கு பின்னால் இருப்பது போல் போட்டோ போட்டு,
"நீதிக்கு தண்டனை" என்கிற தலைப்பையும் கொடுக்கிறார். ராதிகா நடிக்கத் தயாரான அப்படத்தின் வசனங்களை கலைஞர் சிறையிலிருந்தே எழுதுவார்.
தினமும் கலைஞரின் வக்கீலுடன் போய் எஸ்.ஏ.சி, வசனப் பேப்பர்களை வாங்கி வருவார். அங்கேயே அமர்ந்து திருத்தங்கள் இருந்தால் சரி செய்து கொண்டு வந்து அடுத்த நாள் படப்பிடிப்பு நடக்கும். இப்படி முப்பது நாட்கள் எடுக்கப்பட்ட அப்படம் ராதிகாவின் நடிப்பில் நூறு நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி பெற்றது.
படம் வெற்றி பெற்றவுடன் எஸ்.ஏ.சி தன் மனைவி, மகனுடன் சுற்றுலாவுக்காக சென்றதெல்லாம் எஸ்.ஏ.சியின் வெற்றி வரலாறு. இதன் பின் கலைஞரே ஒரு படத்தை எஸ்.ஏ.சி இயக்க தயாரிக்கிறார். முரசொலி செல்வம் தந்த அலுவலகத்தில் ஒரே மூச்சாக எழுதிய கதைக்கு கலைஞர் வசனம் எழுதுகிறார்.
அது தான் RRR. அதாவது ரவி, ராம்கி, ராஜா நடித்த 'இது எங்க நீதி". இந்தப் படத்தில் கலைஞரின் வசனங்களை சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற ஜாம்பவான்களுக்கு வசனமெழுதிய கலைஞர் வசனங்களை ஒரு சிறுவன் பேசி நடித்தார். அவர் வேறு யாருமல்ல. எஸ்.ஏ.சியின் மகன் விஜய் தான் அது.
இப்படி திமுக குடும்பத்துடன் நெருங்கிய எஸ்.ஏ.சிக்கு அதற்குப்பின் ஏற்றம் தான். ஆனால் 38 வருடங்களுக்குப் பிறகு அதே எஸ்.ஏ.சியின் மகன் நடிகர் விஜய், திமுகவுக்கு எதிராக நிற்பார்... அதுவும் வருங்கால தலைவர் உதயநிதிக்கே டஃப் கொடுப்பார்(சொல்லப்படுகிறது) என்றெல்லாம் அன்று கலைஞர் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். காலம் செய்யும் கோலங்கள் தாம் எத்தனை அற்புதங்கள். வியப்பாக இருக்கிறது... இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
-
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சமும் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து










Click it and Unblock the Notifications