நடிகை விஷயத்தில் டி.ராஜேந்தர் இப்படியா? நெகிழ்ந்த நளினி, பூரித்த விசித்ரா.. செம ஜென்டில்மேன் டி.ஆர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை நளினி ஒரு சேனலுக்கு தந்த பேட்டி ஒன்று, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அதிலும், டி.ராஜேந்தர் பற்றி சொல்லியிருக்கும் வரிகள், தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தையும் பெற்று வருகிறது.

பொதுவாக சினிமா ஹீரோக்கள் என்றாலே கவர்ச்சிகரமான முகம் வேண்டும், ஆஜானுபாகுவான உடலமைப்பு வேண்டும், டான்ஸ், சண்டைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், என்ற கட்டமைக்கப்பட்டிருந்த மாயைகளை உடைத்து நொறுக்கியவர் டி.ராஜேந்தர்.
பாடி லேங்குவேஜ்: முகத்தில் தாடி வைத்துகொண்டு, அடுக்கு மொழி வசனங்களை சரளமாக பேசி பேசியே லட்சக்கணக்கான ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர்... வசனம் பேசும் ஸ்டைலும், பாடிலேங்குவேஜும் அத்தனை ரசிகர்களையும் கவர்ந்திழுத்துவிட்டன.

t rajendar nalini

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள், கேமரா, எடிட்டிங் என அத்தனை பொறுப்புகளையும் தன்மீது சுமந்து கொண்டவர். தன்னம்பிக்கை மட்டும் இருந்தால் போதும், எந்த துறையிலும் யார் வேண்டுமானாலும் ஜெயித்து விடலாம் என்பதை, தமிழக மக்களுக்கு நிரூபித்து காட்டியவர்.

திறமைகள்: இவ்வளவு திறமைகள் இருந்தாலும், "பண்பு" என்ற ஒரு விஷயத்திலும் டி.ராஜேந்தர் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறார். இந்திய திரையுலகையே எப்போதுமே ஆச்சரியப்படுத்தி கொண்டிருப்பது மலையாள சினிமாக்கள்தான்.. லாக்டவுன் நேரத்தில்கூட, தனிமனித இடைவெளியை காத்து, படங்களை ரீலிஸ் செய்து வியப்பை கூட்டியது கேரளா சினிமா. அப்படிப்பட்ட மல்லு உலகம், இன்று ஹேமா கமிட்டி அறிக்கை மூலம் நாட்டையே பரபரப்பாக்கி வருகிறது.

t rajendar nalini

இதுவரை நாம் யார் மீதெல்லாம் நன்மதிப்பு வைத்து, உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருந்தோமே, அத்தனை பேரின் முகமூடியும் கழண்டு விழுந்து கொண்டிருக்கிறது.. இவருமா? இவருமா? என்று ஒவ்வொருவரின் ரகசிய பக்கங்களும் வெளிச்சமாகி வருகிறது.

காலகட்டம்: இந்த சூழ்நிலையில்தான், நம்முடைய டி.ராஜேந்தர் அதிகம் பேசப்பட்டு வருகிறார்.. காரணம், 80கள் காலகட்டம் துவங்கி, இப்போதுவரை, பெண்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ளும் நபராகவே டி.ஆர் போற்றப்பட்டு வருகிறார்..

இதுவரை டி.ஆரை பற்றி எந்த ஒரு பத்திரிகைகளிலும் கிசுகிசுக்கள்கூட வந்ததில்லை.. திரைமறைவிலும் சரி, திரையிலும் சரி, பெண்களுக்கான மதிப்பை, மரியாதையை தந்து வருபவர்.. டைரக்டர் என்ற முறையில், தயாரிப்பாளர் என்ற உரிமையில், தன்னுடைய லிமிட்டை தாண்டாதவர்.. சினிமா காட்சியே என்றாலும், எந்த நடிகையையும் "தொட்டு" நடிக்காதவர்..

நளினி: நேற்றுகூட ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் டி.ராஜேந்தர் பற்றி நடிகை நளினி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.. அதில், "நம்மை மீறி நம்மீது யாராலுமே கை வைக்க முடியாது.. ஹேமா கமிட்டி வெளிவந்திருப்பதன் மூலம், பெண்களுக்கான தைரியம் அதிகரித்துள்ளது.. இதன்மூலம் பெண்களிடம் மற்றவர்களுக்கான அணுகுமுறையும் இனி மாறக்கூடும்..

அதேசமயம், பாலியல் தொந்தரவுகளை பாதிக்கப்படும்போதே சொல்லியிருக்கலாம்.. அப்போது சொல்வதால் கெட்ட பெயர் வந்துவிடும் என்றால், இப்போதும் கெட்ட பெயர் வரத்தானே செய்யும்? எல்லாம் முடிந்த பிறகு எதற்காக இதை இப்போது கிளறுகிறார்கள் என்று தெரியவில்லை.

ஜென்டில்மேன்: ஆனால், எங்கள் டைரக்டர் டி.ஆர் சாரை பொறுத்தவரை ஜென்டில்மேன்.. அவருக்கு தந்தை ஸ்தானம், குரு ஸ்தானம் மட்டுமல்ல, அதுக்கும் மேலே உள்ள தெய்வத்துக்கான ஸ்தானத்தையே எங்க டைரக்டரை வைக்கலாம். மூச்சுக்காற்று கூட பிறர் மீது படக்கூடாது என்று நினைக்கும் அளவுக்கு தன்மையானவர்" என்று பூரித்து சொன்னார் நளினி.

அதேபோல, 4 நாட்களுக்கு முன்பு நடிகை விசித்ரா ஒரு சேனலுக்கு அளித்திருந்த பேட்டியிலும், கண்ணியமான நபர் டி.ராஜேந்தர் என்று கூறியிருந்தார்.. "நான் மட்டுமல்ல, இந்த சினிமா உலகில் யாரை கேட்டாலும், டி.ஆர். சாரைத்தான் ஜென்டில்மேன் என்பார்கள்.. நல்ல மனிதர்.. என்கிட்டயே எத்தனையோ பேர் அவரை பற்றி சொல்லியிருக்கிறார்கள்.. பெண்களிடம் நல்ல அணுகுமுறையில், நான் முதலில் சொல்வது டி.ராஜேந்தர் சார்தான்" என்று நெகிழ்ந்து சொல்லியிருக்கிறார் விசித்ரா.

தமிழ் சினிமா: தமிழ் சினிமாவில், ஒருசில பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் சொல்லப்பட்டு வந்தாலும், அன்று முதல் இன்று வரை டி.ஆருக்கான உயர்ந்த இடமும், உயர்ந்த மதிப்பும் அதே இடத்தில்தான் உள்ளது என்பதுதான், இந்த நடிகைகள் அளித்த பேட்டியின் மூலம் மீண்டும் நினைவுபடுத்தப்பட்டுள்ளது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+