மீனா பொண்ணு, மீனா பொண்ணு.. எல். முருகன் இல்ல விழாவில்.. நடிகை மீனா பங்கேற்ற காரணத்தை உடைத்த பிரபலம்
சென்னை: பிரபல நடிகை மீனாவின் திரைப்பயணம் முதல் முன்னணி நடிகர்களுடன் மீனாவுக்கு இருக்கும் நட்பு, மீனாவின் நடிப்புத்திறமை குறித்து பயில்வான் ரங்கநாதன் பாராட்டி பேசியிருக்கிறார்.
metro mail என்ற யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் பேட்டி தந்திருக்கிறார். அந்த பேட்டியில் நடிகை மீனாவின் திரைஉலகம், மீனாவின் திறமைகள் முதல், மத்திய அமைச்சர் எல்.முருகன் கொண்டாடிய பொங்கல் திருவிழாவில் மீனா பங்கேற்றது வரை அனைத்து கேள்விகளும் கேட்கப்பட்டன. இதற்கு பயில்வான் ரங்கநாதன் சொன்னதன் சுருக்கம்தான் இது:

மீனா அம்மா: "மீனாவின் அம்மா, மீனாவின் சித்தி இருவருமே நடிகைகள்.. இருவருமே கவர்ச்சி நடிகைகள்தான்.. ராஜ் மல்லிகா, ராஜ் கோகிலா என்று அவர்களது பெயர்.. இருவருமே ஜெய்சங்கருடன் நடித்திருக்கிறார்கள்.. இதில் ராஜ்மல்லிகாவின் மகள்தான் மீனா..
தன்னுடைய மகளை நடிகையாக்கி பார்க்க வேண்டும் என்று தாய் விரும்புவது, இயல்பான விஷயம்தான்.. அந்தவகையில், 14 வயசிலேயே மீனாவை, ராஜ்கிரன் படத்தில் கதாநாயகி ஆக்கினார்.. அதற்கு பிறகு அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடிகை மீனா நடித்துவிட்டார். திறமையான நடிகையும்கூட.
குழந்தைத்தனம்: அனைவரையும் கிரகிக்க கூடிய முகம் இல்லாவிட்டாலும்கூட, குழந்தை போன்ற பேச்சு, துடுக்குத்தனமான நடிப்பு, சிறிது குடும்ப பாங்கான முகம் இவை அனைத்துமே மீனாவின் பிளஸ் பாயிண்ட்டாகும்.
மீனாவின் கேரியரை பொறுத்தவரை, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என எல்லா மொழிகளிலும் நடித்தார்.. அனைத்து மொழிகளிலுமுள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.. வேகமாக நடனமாடக்கூடியவர். தெலுங்கு தாய்மொழ் என்பதால், தெலுங்கில் நன்றாக பேசுவார்.. தமிழைவிட தெலுங்கில்தான், மீனா அதிகம் சம்பளம் வாங்கியிருக்கிறார்..
ரஜினி நட்பு: தமிழில் அனைத்து நடிகர்களுடன் நல்லிணக்கத்துடன் மீனா இருந்தார்.. கமல்ஹாசனுடனும் நெருக்கமாக இருந்தார்.. ரஜினியுடன் குழந்தையாகவும் ஜோடியாகவும் நடித்தவர்.. எந்த நிகழ்ச்சிக்கு மீனா அழைப்பு விடுத்தாலும், ரஜினி அதில் கட்டாயம் பங்கேற்று கொள்வார்..
மீனா பொண்ணு, மீனா பொண்ணு என்று மீனாவுடன் சரத்குமார் ஆடியிருப்பார்.. அப்போது, மீனாவை திருமணம் செய்து கொள்ள சரத்குமார் நினைத்தது உண்மைதான். ஆனால், இதற்கு மீனாவின் அம்மா ஒப்புக் கொள்ளவில்லை.
எல்.முருகன்: மத்திய அமைச்சர் எல்.முருகன் பொங்கல் விழாவை கொண்டாடும்போது, பிரதமர் மோடியை அழைத்திருந்தார்.. அப்போது பிரபல நடிகைகள் பங்கேற்றால் நன்றாக இருக்குமே என்று நினைத்துதான் மீனாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், எல்.முருகனின் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் மீனாவின் ரசிகர்கள். அதனால்தான் பாஜகவில் உள்ள கலா மாஸ்டர் மூலம் அழைப்பு விடுத்திருக்கிறார்.
கலா மாஸ்டரும், மீனாவும் நெருங்கிய தோழிகள் ஆவர். தன்னுடைய ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டதுகள் என அனைத்தையுமே கலா மாஸ்டரிடம்தான் மீனா பகிர்ந்து கொள்வார். அந்தவகையில்தான் எல்.முருகன் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். மற்றபடி, பிரதமர் மோடியுடன் மீனா பேசவும் இல்லை. போட்டோ எடுத்து கொள்ளவும் இல்லை" என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து சொல்லும்போது, "வழக்கமாக நடிகைகள் அரசியல் கட்சிகளில் சேருவார்கள்.. காங்கிரஸ் காலத்தில் நடிகை பத்மினி பிரச்சாரம் செய்தார்.. அதேபோல ஜெயலலிதா இருக்கும்போது, சசிகலா ஏற்பாட்டின்பேரில் எல்லா நடிகைகளும் அதிமுகவில் இணைந்தார்கள்.. நல்ல காசு வாங்கிட்டுதான் அதிமுகவுக்கு போனாங்க.. இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கன்னு ஜெயலலிதாவுக்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்வாங்க.. இதுக்கு மடி நிறைய பணம் கிடைக்கும்.












Click it and Unblock the Notifications