கைதி, விக்ரம், லியோ வரிசையில் கைதி 2! லோகேஷ் கனகராஜ் வெற்றிக்கு காரணம் என்ன? விஜயகாந்த் பாணிதான்!
லோகேஷ் கனகராஜ் - தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர்களில் தனி ஓர் அடையாளம் பெற்றவர். அவர் இயக்கிய முதல் படம் மாநகரம் (2017), ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்த படம் ஒரு மல்டி-நரேட்டிவ் (multi-narrative) கதையாக இருந்தாலும், ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தன்மை கொண்டவை.

அந்தக் கதைகளுக்கிடையே பின்னிப் பிணைந்து வரும் தந்திரமான கதைச் சொல்லல், லோகேஷ் தனக்கென உருவாக்கிய சினிமா மையத்தை வெளிப்படுத்தியது. அதை போல அந்த படம் முடியும் போது கூட அடுத்த பாகம் வரலாம் என்ற தொனியில் நிறைவு பெற்று இருக்கும்.
இதற்குப் பிறகு வந்த படம் கைதி (2019). கார்த்தி நடித்த அந்த படம், ஒரு இரவில் நடைபெறும், ஹை டென்ஷன் சஸ்பென்ஸ் கதையாகும். கண் தூங்காமல் பார்ப்பதைத் தூண்டும் விதத்தில் படம் நகரும். முழுக்க முழுக்க வன்முறையிலும் உணர்விலும் கட்டியெழுப்பப்பட்ட கைதி, ஹீரோவின் பக்கத்தில் ஒரு ஹீரோயின் கூட இல்லாத சிறப்புடன் வெளியாகி தமிழ் சினிமாவின் முறைமைகளை மாற்றிய படம். ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஸ்கிரீன் பிளே - எல்லாமே பாராட்டுகளை பெற்றன. லோகேஷின் கதை சொல்லும் திறமையின் மெருகான எடுத்துக்காட்டாக இருந்தது கைதி.
மாநகரம் மற்றும் கைதி ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை தொடர்ந்து கொடுத்து வந்தார். இந்த படங்கள் அனைத்தும் பாக்ஸ் ஆஃபிஸில் பெரும் வெற்றியைப் பெற்றது மட்டுமல்லாமல், லோகேஷின் "லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ்" என்ற புதிய கனெக்டட் உலகத்தை உருவாக்கி வைத்தது.
தற்போது கூலி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அதற்கான post production வேலைகளில் முழு உற்சாகத்துடன் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ரஜினிகாந்துடன் இணைந்து உருவாகும் இந்தப் படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இதற்குப் பிறகு, கைதி 2 ஒப்பந்தம் ஆனது என தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷின் கையிலுள்ள ஒவ்வொரு திட்டமும் வெற்றிக்கு மட்டுமின்றி கலைரீதியாகவும் பலம் வாய்ந்தவை என்பதைக் காட்டுகிறது. ஒரு பிஸியான, வெற்றிகரமான இயக்குநராக லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தனக்கான பாதையில் வெற்றியோடு பயணிக்கிறார்.
இது மட்டுமல்லாமல், லோகேஷ் கனகராஜ் தற்போது தனது தனிப்பட்ட தயாரிப்பு நிறுவனமான G Squad பேனர் மூலம் சிறு படங்கள் மற்றும் இளம் திறமைகளை ஊக்குவிக்கும் பணியிலும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். புதிய இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மற்றும் புதுமுக நடிகர்களுக்கு வாய்ப்பு அளித்து, அவர்களது கலைப்பணிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியில் அவர் முக்கிய பங்காற்றுகிறார்.
இன்று தமிழ் சினிமா பெரும்பாலும் பெரிய நட்சத்திரங்களின் சாயலில் திளைக்கின்ற நிலையில், லோகேஷ் இளம் கலைஞர்களின் கனவுகளை உருவாக்குவதில் காட்டும் ஆர்வம், உண்மையான சினிமா ரசிகராக அவரை உயர்த்துகிறது. இவரது G Squad பேனர் ஏற்கனவே சில சிறிய முயற்சிகளுக்கு குரல் கொடுத்து வருகிறது, எதிர்காலத்தில் இது மேலும் பெரிதாகி புதிய தலைமுறைக்கு மிகப் பெரிய தளமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.
பெரும் வெற்றிப் படங்களை இயக்கும் பிஸியான இயக்குனராக இருந்தாலும், தனது செல்வாக்கை புதிய கலைஞர்களின் வளர்ச்சிக்காக பயன்படுத்துவதன் மூலம், லோகேஷ் ஒரு முழுமையான கலைஞராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். வெறும் பாக்க்ஸ் ஆஃபிஸ் சாதனைகளை நோக்காமல், தமிழ் சினிமாவின் எதிர்கால வளர்ச்சியை நோக்கிய அவரது பார்வை, இன்றைய இளைய இயக்குனர்களுக்கும் தமிழ் சினிமாவுக்கும் வலு சேர்கின்றன. விஜயகாந்தும் நிறைய புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தினார் என்பது அனைவரும் அறிந்ததுதான்!
- குரு கிருஷ்ணன்
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications