என்னாது நம்ம "குருநாதா" பிக்பாஸுக்கு இத்தனை லட்சங்களில் சம்பளமா.. இன்கிரீமென்ட்டுமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் குரல் கொடுத்து வருபவருக்கு எத்தனை லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிக்பாஸ் எனும் பொழுது போக்கு நிகழ்ச்சியில் ஹிந்தியில் முதல் முதலில் தொடங்கி தற்போது தமிழ், தெலுங்கு என ஒளிபரப்பாகி வருகிறது. தமிழை பொருத்தவரை நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
அது போல் ஹிந்தியை சல்மான் கானும் தெலுங்கு பிக்பாஸை நாகார்ஜுனாவும் தொகுத்து வழங்குகிறார்கள். வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட 12 முதல் 15 நபர்கள் ஒரு வீட்டிற்கு 100 நாட்கள் தங்க வைக்கப்படுவர்.

சமாளிப்பு
இந்த நபர்களை எல்லாம் சமாளித்து மக்கள் மனதை யார் கவர்ந்து கடைசி வரை அந்த வீட்டில் இருக்கிறார்களோ அவர்கள்தான் வின்னராக அறிவிக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இதில் கலந்து கொண்டவர்களுக்கு மிகப் பெரிய திரைப்பட வாய்ப்புகள் காத்து கிடக்கின்றன.

ஆர்வம்
அதனால் இதில் ஆர்வமாக கலந்து கொள்கிறார்கள். மேலும் வாரந்தோறும் இவர்களுக்கு அவரவரின் பிரபலத்திற்கு தகுந்த வகையில் ஊதியமாகவும் வழங்கப்படுகிறது. தற்போது பிக்பாஸ் சீசன் 6 தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

ஜி.பி.முத்து
இதில் ஜிபி முத்து, ராபர்ட் மாஸ்டர், சீரியல் நடிகை ரச்சிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்களுடன் பொதுமக்கள் இருவரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சனி, ஞாயிறு இரு தினங்களை தவிர மற்ற நேரங்களில் பிக்பாஸ்தான் போட்டியாளர்களுக்கு கட்டளைகளையும் தகவல்களையும் அளிப்பார்.

குரல்
இந்த குரல் யாரென்றே தெரியாமல் போட்டியாளர்கள் அனைவரும் இவரது குரலுடன் பேசி வருவார்கள். ஒரு சீசனில் பிக்பாஸை சாண்டி மாஸ்டர் குருநாதா என்றுதான் அழைத்து வந்தார். தேங்க்யூ பிக்பாஸ், லவ்யூ பிக்பாஸ் என பெண் போட்டியாளர்கள் பாசத்தை பொழிவார்கள். இப்படியிருக்க இந்த பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் யார் என்பதை அறிய நிறைய பேருக்கு ஆர்வம் உள்ளது.

ரூ 5 லட்சம்
அவர் வேறு யாரும் இல்லை சாஷோ என்கிற சதீஷ் சாரதி சச்சிதானந்தம் என்பவர்தான். இவர்தான் பிக்பாஸ் முதல் சீசன் முதல் குரல் கொடுத்து வருகிறார். இவரது ஊதியம் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி கடந்த 5ஆவது சீசனில் மாதத்திற்கு ரூ 5 லட்சம் ஊதியமாக பெற்று வந்தார்.

6 ஆவது சீசன்
தற்போது 6ஆவது சீசன் முதல் அவருக்கு சம்பளம் கூடுதலாக ஒரு லட்சம் ஏற்றி வழங்கப்பட்டதாம். அதாவது இவருக்கு மாதத்திற்கு ரூ 6 லட்சம் ஊதியமாக வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ரூ 20 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த சீசனில் கமல்ஹாசனுக்கும் ஊதியம் உயர்த்தி வழங்கப்படுவதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications