குக் வித் கோமாளி வித்யுலேகாவின் தாத்தா இவரா? தனுஷ் பேமிலிக்கும் வித்யு ரிலேஷனாமே!
சென்னை: குக் விக் கோமாளி வித்யுலேகாவின் தாத்தா யார் தெரியுமா? புகைப்படம் எடுத்து அவரே வெளியிட்ட பதிவில் கூறியிருக்கிறார்.
நடிகர் மோகன் ராமனின் மகள் வித்யுலேகா. இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கவுதம் வாசுதேவன் இயக்கத்தில் நீதானே என் பொன் வசந்தம் படத்தில் நடித்துள்ளார்.

பல படங்களில் நாயகியின் தோழியாக வருவார். நிறைய படங்களில் நகைச்சுவையும் செய்துள்ளார். அவர் ரன் ராஜா ரன் என்ற படத்திற்காக ஆந்திர மாநில அரசின் சிறந்த காமெடி நடிகை என்ற விருதை பெற்றுள்ளார்.
இவருக்கும் சஞ்சய் என்பவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருடைய உறவினர் கீதாஞ்சலி, செல்வராகவனின் மனைவியாவார். வித்யுலேகா பார்ப்பதற்கு அவருடைய தந்தையை போலவே இருப்பார். அவர் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் சூப்பராக சமைப்பதாக செஃப்களிடம் இருந்து கமெண்ட்டுகளை வாங்கினார்.
இவர் சமைத்த ஒரு டிஷ்ஷை தனக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என செஃப் வெங்கடேஷ் பட் கேட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவரை வித்யு என்றும் அழைப்பர். குக் வித் கோமாளியில் இவருடைய டிரேட் மார்க் சிரிப்பை பாலா கிண்டல் செய்துக் கொண்டே இருப்பார். குக் வித் கோமாளி சீசன் 3 இல் ஃபைனலிஸ்ட் பட்டியலில் வந்தார். ஆனால் அவர் வெல்ல முடியவில்லை.

இவர் சமூகவலைதளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மெரினா கடற்கரை காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரையுள்ள சாலைக்கு வி.பி.ராமன் சாலை என முதல்வர் ஸ்டாலின் பெயர் மாற்றினாரே அந்த பெயர்ப் பலகைக்கு பக்கத்தில் நின்றபடி வித்யுலேகா புகைப்படம் எடுத்துள்ளார். இவர் ஏன் அந்த தெருவில் நின்றபடி புகைப்படம் எடுத்தார் என விசாரித்ததில் அவருடைய தாத்தாதான் வி.பி.ராமன் என தெரியவந்தது.
வி.பி. ராமன் இந்திய முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆவார். அவர் வசித்து வந்த சாலைக்குத்தான் வி.பி.ராமன் சாலை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகையை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

வி. பி.ராமன் அதாவது வெங்கட பட்டாபிராமன் வழக்கறிஞர் மட்டுமல்லாது அவர் ஒரு வழக்கறிஞருமாவார். 1977 ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். இவருடைய மகன்தான் நடிகர் மோகன்ராமன். இவருடன் சேர்த்து ராமனுக்கு மொத்தம் 3 மகன்கள். பி.எஸ்.ராமன், பி.ஆர்.ராமன் ஆகியோராவர்.
பொதுவுடைமை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட ரான், 1955 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். மேலும் கட்சியின் சட்டத்திட்டங்ளை ஈவெகி சம்பத் மற்றும் இரா. செழியன் ஆகியோருடன் இணைந்து உருவாக்கினார். The Man who would not be King என்ற நூலையும் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அறிஞர் அண்ணா மறைந்த போது இறுதி ஊர்வலத்தில் வி.பி. ராமன் நடந்தே சென்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications