எதிர்நீச்சல் ஆதிரை யார் தெரியுமா? நிஜ கணவர் இந்த பிரபலம் தானா? "அந்த” சீரியலில் இவரை பார்த்தீங்களா?
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை கேரக்டரில் நடித்து வரும் சத்யா தேவராஜன் தான்.
அதுபோல சீரியலில் ஆதிரை கழுத்தில் பல போராட்டங்களுக்குப் பிறகு கரிகாலன் தாலி கட்டி இருக்கும் நிலையில் நிஜத்திலும் இவருக்கு திருமணம் முடிந்து விட்டதாம்.
அதோடு ஆதிரை எப்படி சினிமா வாழ்க்கைக்கு வந்தார். அவருடைய கணவர் யார் என்ற தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

சன் டிவியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த சீரியல்களில்ஒன்றாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்கள் அனைவருமே ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து விட்டனர் அந்த வகையில் தற்போது சில மாதங்களாகவே இந்த கதை நகர்ந்து கொண்டிருப்பதற்கு முக்கிய காரணமாக ஆதிரை இருந்து வருகிறார்.
ஆரம்பத்தில் ஆதிரை நெகட்டிவ் கேரக்டரில் இருந்து இப்போது அண்ணிகளின் நல்ல குணத்தை புரிந்து கொண்டு அதே நேரத்தில் அண்ணன்கள் சுயநலம் மற்றும் ஆண் ஆதிக்கத்தை புரிந்து இருக்கும் நிலையில் ஆதிரையின் காதலுக்காக வீட்டில் இருந்த அண்ணிமார்கள் அனைவரும் பக்கபலமாக சப்போர்ட் கொடுத்திருந்தனர்.
அதுபோல பல மாதமாக இந்த சீரியலில் ஆதிரை யாரை கல்யாணம் செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. அருண் அல்லது கரிகாலனா? என்று பட்டிமன்றமும் நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் எதிர்பார்க்காத விதமாக காதலித்த அருணை விட்டுவிட்டு அண்ணன் சொன்ன அதே கரிகாலன் மாதிரி கழுத்தில் தாலி கட்டும் சூழ்நிலை வந்துவிட்டது.

அது மட்டுமல்லாமல் கட்டாயமாக கட்டிவிட்ட தாலி தாலி வேண்டாம் என்று நடு ரோட்டில் வைத்து பிரச்சனை செய்து அந்த தாலியை கழட்டி வீசிய ஆதிரை அடுத்ததாக இப்போது ரிஜிஸ்டர் ஆபீசில் கையெழுத்து போட்டு கல்யாணத்தை பதிவு செய்து விட்டார். இனி என்ன நடக்கப் போகிறது எப்படி ஆதிரை இந்த அடிமைத்தனத்திலிருந்து வெளியே வரப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.
இந்த நிலையில் இவரைப் பற்றிய சில தகவல்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஆதிரை கேரக்டரில் நடித்து வரும் இவருடைய நிஜ பெயர் சத்யா தேவராஜன் தான். இவருடைய சொந்த ஊர் சென்னை தானம். ஆரம்பத்தில் இவர் தனது பயணத்தை மாடலிங் மூலமாக தொடங்கி பிறகு சன் மியூசிக்கில் ஒரு விஜேவாக சின்னத்திரையில் நுழைந்து இருக்கிறார்.

ஒரு விஜேவாக மட்டுமல்லாமல் அதிகமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் செய்து இருக்கிறார். அந்த நேரத்திலே ஒரு சில விளம்பரங்களிலும் ஒரு நடிகையாக களமிறங்கி இருக்கிறார். அதைத்தொடர்ந்து தான் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "அருவி" சீரியலில் மலர் கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சீரியலில் மட்டுமல்லாமல் "வஞ்சி அவள் பேரழகி" என்ற ஆல்பம் பாடல்களிலும் இவர் நடித்திருக்கிறார். அந்த நேரத்தில் தான் சத்யாவிற்கு திருமணம் முடிந்திருக்கிறது. இவருடைய கணவர் ஆனந்த். இவரும் ஒரு பிரபலமாக தான் இருந்து வருகிறாராம். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சத்யாவின் நடிப்பிற்கு தடை சொல்லாத கணவரால் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
நிஜத்தில் ஆதிரைக்கு திருமணம் நடந்தது தெரியாமல் இருந்த அதிகமான ரசிகர்களுக்கு இவருடைய திருமண புகைப்படங்கள் அதிர்ச்சியை கொடுத்திருக்கும். அதுபோல சத்யா தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக தன்னுடைய கணவர் பற்றி எந்த தகவல்களையும் வெளியிடுவது இல்லாமல் இருக்கிறார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட அதிகமாக எதிர்நீச்சல் அணியினரோடு எடுத்த புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்கள் தான் இடம்பெற்று இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications