எதிர்நீச்சல் SKR யார் தெரியுமா..? நிஜத்திலும் "அப்படித்தான்”.. மனைவி இவர்தானா? வெளிவந்த ரகசியங்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களால் பாராட்டப்படும் ஒரு சீரியலாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் எஸ்கேஆர்(SKR) கேரக்டரில் நடிகர் வாசுதேவன் நடித்து வருகிறார். அவர் முதல் முறையாக இந்த எதிர்நீச்சல் சீரியலில் தான் நடிகராக அறிமுகம் ஆகி இருக்கிறாராம்.
அது மட்டுமல்லாமல் முதல்முறையாக தான் சீரியலில் நடிக்க வருவதற்கு காரணம் என்ன? மற்றும் அவருடைய குடும்பம் என்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டிருக்கின்றனர். சாதாரண மக்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்கள் கூட எதிர்நீச்சல் சீரியலை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வீட்டில் எதிர்நீச்சல் சீரியல் பார்க்கப்படுகிறது என்று கூறியிருந்தார். அதுபோல நடிகர் விஜய்யின் அம்மாவான சோபா தானும் எதிர்நீச்சல் சீரியல் தொடர்ந்து பார்ப்பேன் என்று கூறியிருந்தார். அந்த அளவிற்கு ரசிகர்களை கவர்ந்த எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர்களும் தற்போது ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக நடிக்கும் குணசேகரனுக்கு போட்டி வில்லனாக இருக்கும் எஸ்கேஆர் யார்? அவர் எப்படி இந்த சீரியலில் அறிமுகமானார் என்ற பல தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம். எஸ்கேஆர் இதற்கு முன்பு எந்த திரைப்படங்களிலும், சீரியல்களிலும் நடித்ததில்லையாம். ஆனால் அவருக்கு ஆரம்பத்தில் இருந்து தான் ஒரு நடிகராக வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்து கொண்டு தான் இருந்ததாம

அதுபோல இந்த சீரியலில் எஸ்கேஆர் எப்படி ஒரு பெரிய பிசினஸ்மேன் ஆக இருக்கிறாரோ அது போல் தான் நிஜத்திலும் இவர் ஒரு பிசினஸ்மேனாக இருக்கிறார். அதுபோல எஸ்கேஆரின் நிஜ பெயர் வாசுதேவன் தான்.இந்த நிலையில் தான் இயக்குனர் திருச்செல்வத்தூரில் இவருக்கு அறிமுகம் ஏற்பட்டு இருக்கிறது.
அப்போது இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது தன்னுடைய சீரியலில் உங்களைப் போன்ற ஒரு கேரக்டர் வேண்டும் என்று இயக்குனர் கேட்டதாக கூறப்படுகிறது. அது போல அதுபோல எஸ்கேஆரும் தனக்கு இருக்கும் ஆசையை சொன்னதால் உடனே இந்த சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டாராம்.

ஆனாலும் எதிர்நீச்சல் சீரியலில் இவர் அதிகமாக பேசாமல் இருந்தாலும் இவருடைய உடல் மொழி, கண் அசைவு கூட நடிக்கிறது என்று அதிகமான ரசிகர்கள் இவரை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். வில்லனுக்கு வில்லனாக இருந்தாலும் இவர் கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணிக்கொண்டு தன்னுடைய கெத்தை காமிக்காமல் அமைதியாக இருந்து ஒரு பார்வையாலே தன்னுடைய வார்த்தைகளை சொல்லி விடுகிறார் என்று இவரை பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.
அதுபோல வாசுதேவனின் சொந்த ஊர் கேரளா தானாம். அவர் சென்னையில் தான் தற்போது செட்டில் ஆகி இருக்கிறாராம். அவருடைய மனைவியின் பெயர் பத்மப்ரியாவாம். அதுபோல இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கிறாராம். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருக்கும் இவர் இந்த சீரியலில் தனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர் திருச்செல்வத்திற்கு சமூக வலைதள பக்கத்தில் நன்றி கூறி இருந்தார்.

இந்த நிலையில் முதல் சீரியலில் எதிர்நீச்சலில் இவர் நடித்துக் கொண்டிருப்பதால் தற்போது இவருக்கு தொடர்ச்சியாக சில சில சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறதாம். இந்த நிலையில் அவர் தொடர்ச்சியாக பல சீரியல்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
Blast OTT release: ஓடிடியில் வரும் "பிளாஸ்ட்” படம்.. அதுவும் எதில், எப்போ? பார்க்கலாம்.. வெளியான தகவல் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ்












Click it and Unblock the Notifications