ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென்னுடன் மிஸ் இந்தியா பட்டத்திற்கு போட்டியிட்டவர்! யார் இந்த கஸ்தூரி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தெலுங்கு பேசும் மக்களுக்கு எதிராக அவதூறு பேசியதாக கைதாகியுள்ள கஸ்தூரி மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றவர், அதிலும் ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா ஆகியோருடன் போட்டியிட்டாராம்.

இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: கஸ்தூரி இன்று சிறையிலிருக்கிறார். 92ல் மிஸ் சென்னையாக ஜெயித்த கஸ்தூரி, சுஷ்மிதா, ஐஸ்வர்யாவோடு மிஸ்.இந்தியா போட்டிகளில் பங்கேற்றவர்.

television kasthuri

இவரது தந்தை சங்கர், தாய் சுமதி. பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவர். தாய் சுமதி ஹைகோர்ட் வக்கீல். ஷன்மதி என்பதுதான் கஸ்தூரியின் இயற்பெயர். தாய் மற்றும் தந்தை முதலெழுத்துக்களில் கிடைத்தது. ரொம்ப போல்டான நபர் இவரது தாயார்.

அப்படி வளர்ந்து சட்டம் படித்து மிஸ்.பைனல்களில் தோற்றாலும் நடிகையாக வாய்ப்பு வந்தது. தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா அன்பாலயா பிரபாகரனுக்காக எடுத்த 'ஆத்தா உன் கோவிலிலே' படத்தில் அறிமுகப்படுத்தினார். தனுஷின் குலதெய்வமான கஸ்தூரி அம்மனின் பெயரை நாயகிக்கு வைத்தார் கஸ்தூரி ராஜா. ஷன்மதி கஸ்தூரியானார்.

பெரிய வாய்ப்புகளோ, ஹிட் படங்களோ அதிகம் அமையவில்லை கஸ்தூரிக்கு. பிரபு, விஜய்காந்த், சத்யராஜ், சரத்குமார் என நடித்தாலும் அப்போதைய குஷ்பு, சுகன்யா, ரோஜா முன் கஸ்தூரி அவர்கள் அளவுக்கு வளர முடியவில்லை. கஸ்தூரியின் போல்டான போக்கு கூட காரணமாக இருக்கலாம்.

இவர் நடித்த 'மெருப்பு' என்கிற தெலுங்கு படம் இவரது நீச்சல் உடை போஸ்டரை போட்டு 'மிஸ்.மெட்ராஸ்' என்கிற பெயரில் டப் செய்து வெளியிடப்பட்டது. அமைதிப் படையின் 'அல்வா' மேட்டர் கஸ்தூரியை வேறு தரத்துக்கு ஞாபகப்படுத்தி வைத்தது.

இந்தியன் படத்தில் கமலின் மகளாக நடித்தது அவரை தென்னிந்தியா முழுக்க பெயர் வாங்கிக் கொடுத்தது. தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்தாலும் சராசரியாக வருடத்துக்கு நாலு படங்களே நடிக்க முடிந்தது.

ஐரோப்பாவில் டாக்டராக இருந்த தெலுங்கர் ஒருவரை திருமணம் செய்து ஐரோப்பா முழுக்க சுற்றிப் பார்த்து விட்டு நடிப்பு வேண்டும் என இரண்டாம் வரவுக்கு இந்தியாவுக்கு திரும்பி வந்தார்.

The bodies of mothers (குழந்தைக்கு மேலாடையின்றி பால் கொடுப்பது போன்ற படம்) என்கிற போட்டோகிராபி ப்ராஜெக்ட்டுக்காக இவர் கொடுத்த டாப்லெஸ் போஸ்கள் தமிழர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது நிஜம். இரண்டாம் வரவில் பெரிய வாய்ப்புகள் வரவில்லை.

ஒரு மகள், ஒரு மகன். இந்த நேரம் கஸ்தூரிக்கு பேரதிர்ச்சி நேரம். மகளுக்கு லுகேமியா வந்து அவரை சிகிச்சை செய்து காப்பாற்றிக் கொண்டு வந்தார். பெற்றோர்களும் அடுத்தடுத்து இவ்வுலகை விட்டு நீங்க கஸ்தூரி தனியாளானார். தம்பி சுமன்கர் மட்டுமே துணை. கணவர் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார்.

டிவி சீரியல்கள், நிகழ்ச்சிகளோடு இருந்தவரை டிவி விவாதங்களுக்கு அழைக்க கோவிட் சமயத்தில் அரசியல் விமர்சகரானார். ரஜினியின் அரசியலை விமர்சித்த இவர் பாரதிராஜா மகன் நிறத்தையும், அவர் வட இந்திய நடிகைகளை கொண்டு வருவதையும் வெளுத்தார். அதில் இயக்குனர் சங்கரையும் சேர்த்திருந்தார்.

தொடக்கத்தில் பொதுவான நடுநிலைமையாக இருந்தவர். மெல்ல மெல்ல பாஜக ஆதரவும், திமுக எதிர்ப்புமாக தன் கருத்துக்களை சொல்லத் துவங்கினார். திமுக குடும்பத்து நபர்களை மறைமுகமாக சொல்ல நினைத்து (தனிப்பட்ட விமர்சனங்கள் தவறுதான்) பொதுப்படையாக தெலுங்கு பேசுபவர்களை சொல்ல இன்று ஓடி, ஒளிந்து கைதாகி இருக்கிறார்.

கஸ்தூரி மிகமிக கஷ்டமான நேரங்களில் அவரை மனோதிடமாக வைத்திருந்ததாக மூன்று பேரை சொல்லுவார். இளையராஜா (பாடல்கள்), எழுத்தாளர் புதுமைபித்தன் (புத்தகங்கள்), ஷிர்டி சாய்பாபா இவர்கள் மூன்று பேர் தான் டிப்ரஷன் லெவலுக்கு போனவரை காப்பாற்றி இயல்பு நிலைக்கு திரும்ப வைத்தனர்.

இன்று இளையராஜாவின் புதிய பாடல் கூட ரிலீசாகி இருக்கிறது. ஆனால் சிறையில் புதுமைபித்தனின் புத்தகங்களோ, ராஜாவின் பாடலோ கேட்க வாய்ப்பில்லை. கிடைக்க நியாயமில்லை.கஸ்தூரிக்கு ஷீரடி சாய்பாபா தான் துணையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+