கோப்ரா, தங்கலான் பிளாஃப் ஏன்? விக்ரம் படங்கள் தொடர் தோல்விக்கு காரணம் இதுதானா?
தமிழ் திரையுலகில் நடிகர் விக்ரம் உடலை வருத்தி தனது நடிப்பை காட்டுவதில் பெயர் பெற்றவர் அதுவே அவருக்கு சாபமாகவும் மாறிவிட்டது. சமீபத்திய காலக்கட்டத்தில், அவரது படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை.
விக்ரம் மிகுந்த உடல் உழைப்புடன் ஒரு கதாபாத்திரத்திற்காக மாறுவது அவரது அடையாளமாக மாறியது. 'அன்னியன்,' 'ஐ' போன்ற திரைப்படங்களில் அவர் காட்டிய பரிணாமங்கள் ரசிகர்களுக்கு வியப்பாக இருந்தாலும், தொடர்ந்து ஒரே மாதிரிப் பாத்திரங்களின் தேடல் அவரை கதையின் மீது கவனம் செலுத்தாமல் ஆக்கிவிட்டது.

சமீபத்திய படங்களின் தோல்வி
சமீபத்தில் வந்த 'கோப்ரா,' 'தங்கலான்,' 'கடாரம் கொண்டான்,' போன்ற படங்கள் ரசிகர்களிடையே பெரிதாக வரவேற்பை பெறவில்லை. காரணம், அவரது கதாபாத்திரம் எப்போதும் ஒரு விதமான வித்தியாசமான தோற்றத்துக்காக மட்டுமே உருவாக்கப்பட்டு, கதை, திரைக்கதை போன்ற அடிப்படை அம்சங்கள் புறக்கணிக்கப்பட்டு விடுகின்றன. இது மட்டுமல்லாமல், சில திரைப்படங்கள் புது விதமான கதைகளாக இருந்தாலும், அதன் திரைக்கதை பின்புறம் தளர்வாக அமைந்து போய்விடுகிறது.
'பொன்னியின் செல்வன்'
'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக இருந்தாலும், அதில் விக்ரமின் கதாபாத்திரமான ஆதித்த கரிகாலன், ரசிகர்களிடம் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டதாக தெரியவில்லை. இப்படத்தில் அவர் நடித்த விதமும், கதாபாத்திரமும் ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால், அவரது திரைப்பயணத்தை கவனித்தால், சாதாரண தோற்றத்தோடு நடித்த படங்களே அதிகம் வெற்றி பெற்றுள்ளன. உதாரணமாக, 'சாமி,' 'தில்,' 'மகான்' போன்ற திரைப்படங்கள் பெரிய வரவேற்பை பெற்றன. ஆனால் 'ஐ,' 'கோப்ரா,' 'தங்கலான்' போன்ற உடலை கடுமையாக மாற்றிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்ப்பது அவரின் இயல்பான நடிப்பே தவிர, உடல் மாற்றங்களின் கவர்ச்சி அல்ல.
தவறான கதையால் ஏற்பட்ட பிரச்சனைகள்
விக்ரம் கதைகளை தேர்வு செய்யும் விதத்தில் தெளிவாக இல்லாததால், பல ஆண்டுகளாக அவரின் படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வர்த்தக ரீதியாக ஓடவில்லை. ஒரு கதாபாத்திரம் அமைக்கப்படும் போது, அதற்கு சரியான திரைக்கதை, வசனங்கள், மற்றும் கதையின் கரு தேவை. ஆனால், தற்போது அவர் எடுத்துக் கொளும் கதைகள், இவரின் உடல் உழைப்பை வெளிப்படுத்தும் விதமாக மட்டுமே உருவாக்கப்படுகின்றன.
மாற்றம் தேவை
விக்ரம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் காலக்கட்டம் தற்போது சவாலாக மாறியுள்ளது. அவரது நடிப்பு திறமை மிகுந்ததாக இருந்தாலும், கதைகளின் தரம் குறைவதால், அவரது சிறப்பான உடல் உழைப்பும் வீண் போய்விடுகிறது. ரஜினி, கமல்ஹாசன், அஜித், விஜய், போன்ற நடிகர்கள் தங்கள் படக்கதையில் முக்கியத்துவம் கொடுத்து தேர்வு செய்யும் போதே, அவர்களின் படங்கள் தொடர்ந்து வெற்றியை கண்டன. அதே போல், விக்ரமும் தனது திரைபயணத்தை மீண்டும் சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.
விக்ரம் புகழ் நிலைத்து நிற்க அவர் கதையில் கவனம் செலுத்தினாலே போதும். உடல் உழைப்பு மட்டும் ஒரு படத்தை வெற்றியடைய செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டு, சரியான கதைகளை தேர்ந்தெடுப்பதே அவருக்கு தேவையான மாற்றமாகும். திரைக்கதை, கதையின் தரம், மற்றும் வசன அமைப்பு போன்ற அம்சங்கள் மீண்டும் அவரின் திரைப்பயணத்தில் முக்கியத்துவம் பெறும் போது, அவர் மீண்டும் வெற்றியை எளிதாக அடைய முடியும்.
- குரு கிருஷ்ணன்
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications