நாதஸ்வரம் மலர் ஞாபகம் இருக்கா ? அதாங்க நம்ம ஸ்ருதிகா.. மறக்க முடியுமா!

Subscribe to Oneindia Tamil

நாதஸ்வரம் மலர் ஞாபகம் இருக்கா ? அதாங்க ஸ்ருதிகா அவர்களை யாராலும் மறக்க முடியுமா 2008ல மகேஷ் சரண்யா மற்றும் பலர் என்கிற திரைப்படத்தில் சின்ன ரோலில் நடித்து அடுத்து 2009 ல வெண்ணிலா கபடிகுழு படத்துலயும் அதே வருஷத்தில் மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி அப்புறமா வேங்கை, பாலு தம்பி மனசுல அப்படி பல படங்களில் நடிச்சு இருக்காங்க.

அவங்க சினிமாக்களில் மட்டும் நடிக்கல. சின்னத்திரைல கதாநாயகியாகவும் கதாநாயகிகளுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருக்காங்க.
இவங்களோட லைப்பை மாற்றியது 2010ல் அதாங்க அப்போதான் டைரக்டர் திருமுருகன் நாதஸ்வரம் சீரியலில் இவங்கள அறிமுகப்படுத்தினார்கள். அந்த சீரியலில் இவங்க கதாநாயகியாக நடித்து இருக்காங்க. இவங்களை பார்ப்பதற்காகவே சிறுசில இருந்து பெருசு வரைக்கும் டிவி முன்னாடி காத்து கிடந்தது.

அந்த சீரியலில் பணக்கார வீட்டுப் பெண்ணாக நடித்திருப்பார். அதில் நாயகராக திருமுருகன் நடித்திருப்பார். ஸ்ருதிகா அதுல நடிச்சாங்கன்னு சொல்வதைவிட மலர்ப் பொண்ணாகவே வாழ்ந்துட்டு இருந்தாங்க.

வெற்றிகரம்

வெற்றிகரம்

சீரியல் 2010 ல ஆரம்பிச்சு 2015 வரை வெற்றிகரமாக போயிருச்சி. இதற்கு இவங்களும் ஒரு காரணம். தன்னுடைய இளமையாலும், கொஞ்சலான பேச்சாலும் தன்னுடைய நடிப்புத் திறமையாலும் தான் ரசிகர்களை கவர்ந்து இருந்தாங்க. அந்த சீரியல் முடிந்த சில நாட்களுக்கு இவங்களைப் பாக்காம நிறைய ரசிகைகள் கஷ்டப்பட்டாங்க. மொத்தத்துல சொல்லணும்னா இவங்களை ரசிகர் அவங்க வீட்டு பொண்ணாக தான் பார்த்தாங்க.

நல்லா கலாய்ப்பார்

நல்லா கலாய்ப்பார்

இவங்கள பத்தி இவங்க கூட ஒர்க் பண்ணவங்க என்ன சொல்றாங்கன்னா நம்ம ஸ்ருதிகா ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லாரையும் கலாய்ச்சி தள்ளிடுவாங்கலாம். செம்மையா காமெடி பண்ணி எல்லோருக்கும் செல்ல பொண்ணாம். நாதஸ்வரத்தை தொடர்ந்து குலதெய்வம், கல்யாண பரிசு சீரியல் நடிச்சாங்க. குலதெய்வத்தில் அலமேலுவாக நடிச்சிருந்தாங்க. இது அவங்களுக்கு நல்ல பெயரை ஏற்படுத்தி தந்தது.

தங்கை வேடத்தில்

தங்கை வேடத்தில்

வேங்கை படத்தில் தனுஷின் தங்கையாக வருவாங்க. அதுல அண்ணனுக்கு ஒரு பாசமான நல்ல பிரண்டா, தங்கையாக நடித்து இருந்தாங்க. அந்த திரைப்படத்தில் தனுஷ் கூட நடிச்சது தன்னுடைய பல நாள் கனவு என்று சொல்லி இருக்காங்க. அதுக்குப்பிறகு தாங்க அவங்க லைஃப்ல மறக்க முடியாத தருணம். ஆமாங்க அவங்க காதலித்து திருமணம் செய்து கொண்டதுதான். கேரளாவில்தான் சனிஸ்ஸ் என்பவருடன் இவருக்கு திருமணம் நடந்தது.

கேரளாவின் மருமகள்

கேரளாவின் மருமகள்

அதுக்குப்பிறகு வரவேற்பு சென்னையில் ரொம்ப தடபுடலாக நடந்தது. வரவேற்புக்கு சினிமா முன்னணி கதாநாயகர்களும், கதாநாயகிகளும், சின்னத்திரை நடிகர்கள், பிரபலங்களும் வந்து வாழ்த்தினார்கள். அவங்க காதல் கல்யாண வாழ்க்கைக்கு அடையாளமாக அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது .அந்த குழந்தையை அச்சு அசலாக அம்மா ஸ்ருதிகா மாதிரியே இருக்குங்க .அதே அழகோட, துருதுரு பார்வையால் எல்லாரையும் மயக்குதுங்க.

இன்னொரு விஷயம் ஸ்ருதிகா நல்ல பாடகியும் கூட.. சூப்பரா பாடுவாங்க.. அது உங்களுக்கே தெரியும்தானே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+