பாட்ஷா பட இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் சகோதரியை பார்த்திருக்கீங்களா? அவரும் ஒரு முன்னணி நடிகையாமே?
சென்னை: அண்ணாமலை, பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாவின் தங்கை இந்த நடிகையாமே உங்களுக்கு தெரியுமா? அவர் 1980 களில் முன்னணி நடிகையாக இருந்தார். அவர் யார் என்பதை பார்ப்போம்.
பன்னீர் புஷ்பங்கள், மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல், சிகப்பு மல்லி போன்ற படங்களில் நடித்திருந்த சாந்தி கிருஷ்ணாவை நினைவிருக்கிறதா? ஒரு பேருந்தில் கோடை கால காற்றே பாடலை யாராலும் மறக்க முடியாது. அது போல் ஆனந்த ராகம் கேட்கும் காலம் என்ற பாடலில் சுரேஷுடன் டூயட் பாடுவது போல் இருக்கும்.

பன்னீர் புஷ்பங்கள் படத்தில் நடித்த போது சாந்தி கிருஷ்ணா பள்ளியில் படித்துக் கொண்டிருந்தாராம். இதுவும் பள்ளி மாணவர்களுக்கான கதை என்பதால் அவருக்கு கச்சிதமாக அமைந்துவிட்டது. மணல் கயிறு படத்தில் திருமணத்திற்கு எஸ்.வி.சேகர் போடும் கண்டிஷன்களில் ஒன்றுக்குக் கூட பொருந்தாமல் குடும்பத்தினரின் நிர்பந்திப்பால் பொய் சொல்லி திருமணம் செய்து கொள்வார்.
பிறகு உண்மை தெரியவரும் போது எஸ்.வி.சேகர் என்ன செய்வார் என்பதுதான் மீதி கதை! இந்த படங்களுக்கு பிறகு அவருக்கு நேருக்கு நேர் படத்தில் அண்ணி வாய்ப்பு கிடைத்தது. நிறைய படங்கள் கிடைக்கவில்லை. இதனால் அவர் தனது குழந்தைகளுடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார்.

தற்போது பெங்களூரில் வீடு வாங்கிக் கொண்டு வசித்து வருகிறாராம். இவரிடம் அவள் விகடன் எடுத்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில்! அப்பா குவைத்தில் பணியாற்றி வந்தார். சின்னத்தம்பி படத்தில் குஷ்புக்கு இருப்பது போல் எனக்கும் 3 அண்ணன்கள்.
பெரியவர் ஸ்ரீராம், அவர் பெங்களூரில் இருக்கிறார். இரண்டாவது அண்ணன் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா, கடைசி அண்ணன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். எனக்கு சிறு வயதிலேயே நடனம் பிடிக்கும். இதனால் நான் பரதநாட்டியம் கற்றுக் கொண்டேன். நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டேன். மகாராஷ்டிராவில் எனது பரதகலைக்காக எனக்கு ஸ்காலர்ஷிப் கொடுத்தார்கள்.
அந்த மாநிலத்தில் தமிழ் பெண் ஸ்காலர்ஷிப் வாங்குவது முதல் முறை என்பதால் என் புகைப்படம் செய்தித்தாளில் வெளியானது. அப்போது எனது அண்ணன் சுரேஷ், இயக்குநர் பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்தார். எனது புகைப்படத்தை பார்த்த மலையாள இயக்குநர் பரதன், என் அண்ணனிடம் பேசி, என்னை கதாநாயகியாக்க கேட்டார்.

அப்போது நான் மும்பையில் படித்துக் கொண்டிருந்தேன். அண்ணன் என்னிடம் வந்து சினிமா வாய்ப்பு குறித்து சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தேன். வீட்டில்தான் யோசித்தார்கள். பிறகு அண்ணன் பேசி சம்மதிக்க வைத்தார்.
அதன்படி நித்ரா படத்தில் நடித்தேன். அந்த சமயத்தில்தான் பன்னீர் புஷ்பங்கள் படத்திற்கும் ஹீரோயின் வாய்ப்பு வந்தது. ஒரே நேரத்தில் இரு மொழி படங்களில் அறிமுகமானேன். எனக்கு 20 வயதில் திருமணமானது. கேரளாவில் நானும் என் கணவரும் குடியேறினோம். ஆனால் எனக்கு அந்த வாழ்க்கை கஷ்டத்தையும் துயரத்தையும் கொடுத்ததால் அதிலிருந்து விலகினேன். பிறகு அமெரிக்கா சென்றேன். இதையடுத்து பெங்களூரில் வீடு வாங்கி செட்டிலாகிவிட்டேன். எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்தால் மீண்டும் நடிக்க தயார்.
நிரா படத்தில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மகப்பேறு நிபுணராக நடித்திருந்தேன். அதற்கு டப்பிங் பேசிய போது கூட ரிக்லைனர் சேரில் படுத்துக் கொண்டுதான் பேசினேன். அப்போதுதான் வாய்ஸ் மாடுலேஷன் கொண்டு வர முடியும் என்றார். இவ்வாறு சாந்தி கிருஷ்ணா கூறியிருந்தார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications