திருஷ்யம் ஷூட்டிங் போது ஆஷா சரத்திடம் பாலியல் அத்துமீறலா? நடந்தது இதுதான்! அவரே கொடுத்த விளக்கம்
சென்னை: நடிகை ஆஷா சரத் தன்னை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தில் தான் நடித்த போது நடிகர் சித்திக் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக சில வதந்திகள் பரவி வந்த நிலையில் அதை மறுத்து ஆஷா சரத் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு ஹேமா அறிக்கை வெளியானதை தொடர்ந்து மலையாளத் திரை உலகமே அதிர்ந்து போய் இருக்கிறது. மலையாள திரை உலகில் நடிகைகளுக்கு நடக்கும் பாலியல் பிரச்சனைகள் குறித்து ஹேமா அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டி இருந்த நிலையில் பல நடிகைகள் தங்களுக்கு தொந்தரவு கொடுத்த பிரபலங்கள் குறித்து பல அதிர்ச்சி தகவல்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மலையாள நடிகையான ஆஷா குறித்து சில செய்திகள் பரவி வந்தது. அதாவது ஆஷா சரத் ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் சித்திக் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறியதாக செய்திகள் பரவி வந்தது. ஆனால் இதை ஆஷா மறுத்திருக்கிறார்.
அது பற்றி ஆஷா சரத் பேசுகையில் சித்திக் கலைத்துறையில் எனக்கு மரியாதைக்குரிய சக ஊழியர் மற்றும் நல்ல நண்பர். சித்திக்கு என்னிடம் தவறான அர்த்தத்தில் என்னிடம் பேசவோ அல்லது தவறான செயல்களில் என்னிடம் அத்து மீறவோ இல்லை. சிலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். இந்த மாதிரி வதந்திகளை பரப்புபவர்கள் அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தயவு செய்து இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எல்லோரும் தவிர்த்து விடுங்கள் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.
அதோடு மலையாள திரை உலகம் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழும் ஒரு பெரிய கலைக் குடும்பமாக வளர வேண்டும். விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதேனும் நடந்தாலோ அல்லது வெளிப்பட்டாலோ அவற்றை முளையிலேயே நசுக்க வேண்டும். பொய்யான தகவல்களை பரப்பி ஆதாயம் தேடுபவர்களை அம்பலப்படுத்த வேண்டிய அவசியத்தையும் அவர் அதில் வலியுறுத்தி இருக்கிறார்.
அதோடு வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆஷா தெரிவித்திருக்கிறார். பொதுவாக திரைப்படத்துறையில் அமைதியான மற்றும் நேர்மையான சூழல் தேவை. கலை மீது ஆர்வமும் திறமையும் உள்ள எவரும் அமைதி மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலையில்தான் பணியாற்ற முடியும். கேரளாவில் உள்ள அரசாங்கமும் கலையை நேசிக்கும் சமூகமும் அத்தகைய சூழலை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படும் என்று நான் நம்புகிறேன் என்று ஆஷா சரத் கூறி இருக்கிறார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications