கல்யாண வீட்டில் சோகம்! பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வந்த பிரச்சனை! நடிகர் துல்கர் சல்மான் மீது வழக்கு பதிவு
சென்னை: தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான துல்கர் சல்மான், மலையாளத்தில் அறிமுகமாகி இருந்தாலும், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வரும் துல்கர் சல்மான், தற்போது ஒரு எதிர்பாராதச் சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளார்.

பிரியாணி சிக்கலில் துல்கர்
துல்கர் சல்மான் கேரளாவை சேர்ந்த பிரசித்தி பெற்ற ஒரு பிரியாணி அரிசி நிறுவனத்திற்கு விளம்பரத் தூதராக (Brand Ambassador) உள்ளார். இந்த நிலையில், இந்த அரிசி நிறுவனத்தின் தயாரிப்பு தொடர்பாக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சம்பவம்
பத்தனம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கேட்டரிங் நிறுவனம் சார்பில் நுகர்வோர் ஆணையத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சிக்காக இந்த அரிசி நிறுவனத்தின் பிரியாணி அரிசி வாங்கப்பட்டு, அதில் சமைத்த பிரியாணியை சாப்பிட்டப் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
வழக்கு பதிவு
இதை தொடர்ந்து, இந்த அரிசி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர தூதரான நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரிசி நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் நடிகர் துல்கர் சல்மான் ஆகியோர் நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
விளம்பரத் தூதராக இருக்கும் பிரபலங்கள், தாங்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களின் தரம் குறித்துச் சோதிக்க வேண்டியதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.
துல்கர் சல்மானின் திரைப்பயணம்
துல்கர் சல்மான் சமீப காலமாக நல்லப் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, இவர் தெலுங்கு இயக்குநர் பவன் சாதினேனி இயக்கத்தில் ஒருப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'ஆகாசமோல் ஓகா தாரா' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், பிரியாணி அரிசி குறித்த இந்த வழக்குச் சட்டரீதியாக என்ன முடிவைக் காணும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications