ரூ.80 கோடி சக்ஸஸ் டூரிஸ்ட் ஃபேமிலி.. ஈசிஆர் ரிசார்ட்டில் காசு தந்த பிரபலம்? ஜாம்பவானுக்கு புரமோஷனா?
சென்னை: அரசியல் காரணங்களுக்காகவே, சில ஹீரோக்களின் வெளியாகும் திரைப்படங்கள் வீழ்த்தப்படுகின்றன என்ற விமர்சனங்கள் எழுவதை ஏற்க முடியாது என்றும், நல்ல படங்களை தந்தால், மக்கள் அதை கொண்டாட தவறுவதே கிடையாது என்றும் அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு.. தவறான விமர்சனமே சோஷியல் மீடியாவில் தந்தாலும், மக்கள் அவைகளை புறக்கணித்து நல்ல படங்களை வரவேற்கும் அளவுக்கு தெளிவாக இருக்கிறார்கள் என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
Media circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பாலாஜி பிரபு, "அரசியல் காரணங்களுக்காகவே, சில ஹீரோக்களின் வெளியாகும் திரைப்படங்கள் வீழ்த்தப்படுகின்றன என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.. இதை நான் ஏற்க முடியாது..நல்ல சினிமாவை தந்துட்டு, அது ஓடாமல் போனால் இப்படியெல்லாம் விமர்சனம் வைக்கலாம். ஆனால், தக் லைஃப், இந்தியன் 2, கங்குவா, மாதிரியான படங்களை தந்துவிட்டு, அரசியல் காரணங்களுக்காக ஓடாமல் செய்துவிட்டார்கள் என்று சொல்வதை சரி கிடையாது.

தக் லைஃப் பட ரிலீசுக்கு முன்பு, 400 இன்புளூயன்சர்களை அழைத்து, ஈசிஆர் ரிசார்ட்டில் தங்க வைத்து, மதுபானம் உள்ளிட்ட பார்ட்டி தரப்பட்டுள்ளது.. இவர்களுக்காகவே மறுநாள் கமல், சிம்பு கலந்து கொண்ட பிரத்யேக நிகழ்ச்சியும் தக் லைஃப்க்காக நடத்தப்பட்டது.
இந்த 400 பேரும், எப்படியும் நிச்சயம் படத்தை புரமோட் செய்ய பணம் வாங்கியிருப்பார்கள்.. பணம் வாங்கிக்கிட்டு, ரிவ்யு செய்வதாக தயாரிப்பாளர்கள் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். அப்படியானால் இதுபோன்ற இன்புளூயன்சர்களுக்கு பணத்தை தருவது யார்? இதே தயாரிப்பாளர்கள்தானே பணத்தையும் தந்து ஊக்கப்படுத்துறாங்க?
மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், கமல்ஹாசன் 3 ஜாம்பவான்கள் இணைந்த படத்துக்கே இப்படி புரமோஷன்கள் தேவைப்படுகிறது.. இதற்காகவே இன்புளூயன்சர்களை வரவழைத்து தங்க வைத்து, பார்ட்டி தரப்பட்டுள்ளது.. விமர்சனத்தை பாசிட்டிவ்வாக எழுத வேண்டும் என்பதுதான இதன்பின்னணியில் உள்ள மறைமுகமான காரணமாகும்..இப்படி தயாரிப்பாளர்கள் தவறு செய்துவிட்டு இன்புளூயன்சர்களை குறை சொல்ல முடியாது. பணம் தந்தால் அவர்கள் வாங்கதான் செய்வார்கள்.
வாங்குபவர் மீது தவறா? கொடுப்பவர் மீது தவறா? ஈசிஆர் ரிசார்ட்டில் தங்கவைத்து, கவனித்து அனுப்பப்பட்ட அந்த 400 பேருமே நிச்சயம் தக் லைஃப் பற்றி பாசிட்டிவ் விமர்சனத்தைதானே செய்திருக்க முடியும்? அப்படி பாசிட்டிவ்வாக பேசும்போது, அந்த படம் எப்படி தோல்வியடையும்? முதல் நாள் முதல் ஷோவிலேயே, படம் நல்லாயில்லை என்ற டாக் எப்படி வரும்?
அப்படியானால் படம் உண்மையிலேயே நல்லாயில்லை என்றுதானே அர்த்தம்? பெரிய பெரிய ஜாம்பவான்கள், இன்றைய மக்களுடன் கனெக்ட் ஆக முடியாதபடியான படங்களைதான் தருகிறார்கள்..
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை எடுத்து கொண்டால், மார்க்கெட்டில் இல்லாதவர்களை வைத்து, வெறும் 4 கோடியில் படத்தை எடுத்திருந்தார்கள். அந்த படத்துக்கு எத்தனை பேருக்கு காசு தந்து இன்புளூயன்சர்களை அந்த படக்குழுவினர் பயன்படுத்தினார்கள்? அந்த படம் நல்லா ஓடுச்சா இல்லையா? பாசிட்டிவ் விமர்சனங்களை அனைவருமே தந்தார்களா இல்லையா? படம் 80 கோடி வசூல் செய்ததா இல்லையா? யாருக்காவது காசு தந்து புரமோட் செய்தார்களா?
எனவே, நல்ல படம் எடுத்தால், அந்த படத்தை மக்கள் என்றைக்குமே கொண்டாட தவறுவதேயில்லை.. ஆனால், நீங்கள் இந்தியன் 2, கேம்சேஞ்ச், தக் ஃலைப் தந்துவிட்டு, சரியான படத்தை தந்தால், தவறான ரிவ்யூ செய்து தோற்கடித்து விடுவார்கள் என்று சொல்வதில் என்ன நியாயம்? தியேட்டரில் ரிலீஸ் ஆகி 2, 3 நாளுக்கு பிறகு ரிவ்யூ செய்ய சொல்கிறார்கள்..
ஆனால் 3 நாள் படம் ஓடுவதே பெரிய விஷயமாக உள்ளது.. 3 நாள் கழித்து எப்படி ரிவ்யூ செய்யாமல் இருக்க முடியும்? சிலரிடமிருந்து விமர்சனங்களை மக்களே எதிர்பார்க்கிறார்கள்.. அந்த விமர்சனத்தை பார்த்துவிட்டுதான் தியேட்டருக்கு செல்லக்கூடியவர்களும் உள்ளனர். எனவேதான் முதல்நாளே விமர்சனங்களை செய்யவேண்டியதாக உள்ளது.. அப்படியே நல்ல படத்தை தவறாக விமர்சனம் செய்தாலும், மக்கள் அதை ஏற்பதில்லை.. தவறான விமர்சனத்தையும் மக்கள் கண்டுபிடித்து விடுகிறார்கள். மக்கள் தெளிவாகிவிட்டார்கள்.
குட் பேட் அக்லி படம் விமர்சனத்துக்கு உள்ளான படம்தான்.. அந்த படத்தில் எதுவுமே புதுமையாக இல்லை.. ஆனால், ஆரம்பம் முதல் கடைசிவரை ஏதோ ஒரு வகையில் ரசிக்கும்படியாக எடுத்திருக்கிறார்கள்.. மக்கள் முழுப்படத்தையும் உட்கார்ந்து பார்க்கும்படி இருந்தது.. அதற்காக மோசமான படம் என்று சொல்ல முடியாது.
ஆனால் விடாமுயற்சி சரியான படம் இல்லை.. அது சுத்தமாக ஓடவில்லை.. அரசியல் காரணத்துக்காக ஓடவிடுவதில்லை என்றால், அஜித்குமார் அரசியலில் உள்ளாரா? குட் பேட் அக்லி ஓடாமல் போய்விட்டதா? என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications