Eeramana Rojave Serial: பிளாக் அன்ட் வொயிட் படத்துல சவுகார் ஜானகி மாதிரி அழாதே!
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல் கதை ரொம்ப சாதாரணமான கதைதான். ஆனால்,அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே காண்பிப்பதால் பலரும் விரும்பிப் பார்க்கின்றனர்.
மலரும்,அகிலாவும் அக்கா தங்கைகள். வெற்றி,பு கழ்னு அண்ணன் தம்பிகளை கல்யாணம் செய்துக்கறாங்க. இரண்டு கல்யாணமும் திட்டமிடாமல் நடக்கும் கல்யாணம்தான்.
மலருக்கு வெற்றியின் அண்ணனுடனும், தங்கை அகிலாவுக்கு வேறு மாப்பிள்ளையுடனும் நிச்சயமான கல்யாணம்தான் இப்படி மாறிப்போகுது. வெற்றியின் அண்ணன் விபத்தில் இறந்துவிட்டதால் இப்படி மாறிப் போகிறது.

சீர் வரிசை செய்யலை
பெண் வீட்டார் மாப்பிள்ளைகளுக்கு சரியாக சீர் செய்யவில்லை..தவிர மாப்பிள்ளை வீட்டாரிடம் 20 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருப்பது என்று தெரிந்து மாமியாருக்கு மருமகள்களை பிடிக்கவில்லை. கடன் வாங்கின பணம், சீர் வரிசை எல்லாத்தையும் குடுத்துட்டு, பொண்ணுங்களை வாழ வைங்கன்னு சொல்லி, மருமள்களை பிறந்த வீட்டுக்கு அனுப்பி வச்சுடறாங்க.

மலரும் வெற்றியும்
வெற்றியும் மலரும் அப்போதுதான் ஒருவரை ஒருவர் புரிந்து வாழலாம் என்று ஆரம்பிச்சு இருக்கையில், இப்படி ஆகிவிட , இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்க முடியவில்லை. ஆனால், வந்து பார்த்தாலும், மாமியார் இது தெரிந்து வீட்டுக்கு வந்து மானம் போக திட்டுகிறார்கள். இதனால் மலரும் வெற்றியுடன் பேசபயப்பட்ட, வெற்றி வீட்டை விட்டு வெளியில் போயிடறான்.

எங்கே போனாரோ
மலர் கட்டிலில் உட்கார்ந்து அழுது கொண்டு இருக்க, என்னடி சாப்பாடு அப்படியே இருக்கு.. சாப்பிடலியான்னு கேட்கறாங்க அம்மா. ஸ்கூலில் வேலை அதிகம் இருந்துச்சும்மா... அதான் சாப்பிடலைன்னு சொல்றா, ஏண்டி இப்போ அழறேன்னு அம்மா கேட்க அது ஒன்னும் இல்லைம்மா வெற்றி மாமா நினைப்பு வந்திருக்கும். அதான் இப்படி அழறான்னு சொல்றா அகிலா.

சவுகார் ஜானகி மாதிரி
இங்கே பாரு புள்ளே... மாமா கூட பேசணும்னா ஒரு போனை போட்டு பேசு. எப்பப்பாரு மூஞ்சை தூக்கி வச்சுக்கிட்டு, பிளாக் அன்ட் வொயிட் படத்துல வர சவுகார் ஜானகி மாதிரி அழுதுகிட்டு இருக்கதேன்னு சொல்றா அகிலா.
இப்படி புருஷன் பொண்டாட்டி பிரிவு, அக்கா தங்கைகள் ஆறுதல்.. வரதட்சணை சீர் செய்யலேன்னா படும் கஷ்டம் பற்றி எல்லாம் சீரியலில் சொல்லி இருப்பதால் நன்றாக இருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications