ஐயோ! சீ.. சீ...இது என்ன கொடுமை? அதுவும் ஒரு வாரமா? பிரபல சீரியலை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலை ரசிகர்கள் திட்டி வருகிறார்கள்.
கடந்த ஒரு வாரமாக இந்த சீரியலில் முதலிரவு நடப்பது போன்று காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.
அதுவும் இந்த சீரியலில் அடுத்தடுத்து நெருக்கமான காட்சிகள் கதாநாயகன் மற்றும் கதாநாயகிக்கு இருப்பதாக அதை சின்னத்திரையில் இப்படி வெளிப்படையாக காட்ட வேண்டுமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் தான் தற்போது நெட்டிசன்களின் வசம் சிக்கி இருக்கிறது. இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இந்த சீரியல் விரைவான கதை களத்தோடு இருந்தாலும் இப்போதைக்கு முடிவு இல்லை என்ற தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
இப்பதான் ஒரு வழியாக இந்த சீரியலில் பார்த்திபனும் காவியாவும் ஒன்றாக சேர்ந்திருக்கின்றனர். இருவரும் திருமணம் பந்தத்தில் அடி எடுத்து வைத்திருக்கின்றனர். பெரும் பிரச்சனைகளுக்கு இடையில் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது. அடுத்தடுத்து பிரச்சினைகள் வருமா இல்லை சீரியல் இப்போது முடிவடையுமா என்று இருந்த நிலையில் இப்போது ஜீவாவும் தன்னுடைய காதலை பிரியாவிடம் சொல்லி இருக்கிறார்

ஒரு வழியாக இரண்டு ஜோடியும் சேர்ந்து விட்டதால் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர். இருப்பினும் ரம்யாவிற்கு காவியாவும் ஜீவாவும் தான் ஆரம்பத்தில் காதலித்தார்கள் என்ற விஷயம் தெரிந்திருக்கிறது. இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ஒரு எதிர்பார்ப்பும் இருந்தாலும் இதனால் குடும்பம் பிரிந்து விடுமா என்ற பரபரப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் ஜீவா மற்றும் பிரியாவிற்கும் அதேபோல காவியா மற்றும் கார்த்தி இருவருக்கும் அடுத்தடுத்த நாட்களில் முதல் இரவு சீன்கள் வைத்து இந்த வாரம் முழுக்க எபிசோடுகளில் இவர்களுடைய ரொமான்ஸ் அட்ராசிட்டிகள் நடந்து வருகிறது. இதை பார்த்து கொதித்துப் போன நெட்டிசன்கள் இது என்ன சின்னத்திரைக்கு வந்த சோதனை, சின்ன திரையில் ஏ சர்டிபிகேட் கிடையாதா? இப்படியா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் சீரியலில் ஒளிபரப்புவார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதோடு இவ்வளவு ரொமான்ஸ் ஆக ஒளிபரப்புவதை பார்ப்பவர்களுக்கு கூச்சமாக இருக்கிறது. டிஆர்பி வரவேண்டும் என்பதற்காக இப்படியா செய்ய வேண்டும் என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல், கண்ணான கண்ணே சீரியலிலும் இதுபோன்ற எபிசோடுகள் அடிக்கடி வந்துவிடும். அது போல தற்போது இந்த சீரியலும் முயற்சி செய்து வருகிறார்களோ? என்னவோ! என்றும் சிலர் கலாய்த்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications