தாலியை கழட்டும் காவியா.. மனதிற்குள் போராடும் பார்த்தி... ஈரமான ரோஜாவே சீரியலில் திடீர் திருப்பம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலின் மார்ச் ஒன்பதாவது நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
காவியா பார்த்தியை பிரிந்து செல்வதற்கு சம்மதித்த நிலையில் பார்த்திக்கு ரம்யாவோடு திருமணம் செய்ய முயற்சிகள் நடைபெற்று வருகிறது.
காவியாவின் கழுத்தில் இருக்கும் தாலியை கழற்றி வைத்துவிட்டு போக சொல்லி ரம்யாவின் அம்மா கூறுகிறார்.

பிரிக்க நடக்கும் சூழ்ச்சி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியல் விறுவிறுப்பாக கதைக்களத்தோடு ஒளிபரப்பாகி வருகிறது. காவியாவும் பார்த்தியும் மனதிற்குள்ளே ஒருவரை ஒருவர் நேசித்துக் கொண்டிருந்தாலும் வெளியே வெளிப்படையாக இருவரும் சொல்லிக்கொள்ளாமல் இருக்கும் நிலையில், அடுத்தடுத்து இவர்கள் இருவருக்கும் பிரித்து வைக்கும் சூழ்ச்சிகள் வீட்டிற்குள்ளே நடந்து வருகிறது. ஒரு பக்கம் பார்த்தியின் அம்மா காவியாவை பார்த்தியிடமிருந்து பிரிக்க பிளான் செய்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் பார்த்தியின் அத்தை அடுத்தடுத்து பிரச்சனை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.

தவிக்கும் ஜீவா
இந்த நிலையில் காவியா வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் நான் தான் என ஜீவா ஒரு பக்கம் குடித்துக்கொண்டு வீட்டிற்கு வர அதை நினைத்து காவியாவின் அக்காவும் பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார். நீ உன்னுடைய காதலை நினைத்து மறக்க முடியாமல் எப்படி பார்த்தியிடம் டைவர்ஸ் கேட்டியோ அப்படி என்னிடம் ஜீவா கேட்டால் நான் டைவர்ஸ் கொடுத்து விடுவேன் என்று சொல்கிறார். அதற்கு காவியா அப்படியெல்லாம் கேட்க மாட்டார். அவர் சீக்கிரமாக மாறிவிடுவார் என்று அக்காவிற்கு ஆறுதல் கூறுகிறார். அடுத்ததாக காவியா எக்ஸாமில் தோற்றுவிட்டார் என்று பார்த்தியின் அத்தை வந்து காவியாவை கிண்டல் செய்கிறார்.

அடுத்து நடக்கும் பிரச்சனை
இந்த நிலையில் பிரியா பார்த்தியின் அத்தையிடம் காவியா எக்ஸாமில் தோற்றுவிட்டால், வாழ்க்கையிலும் தோத்துட்டா பார்த்திபனை ஏமாத்திட்டா என்று நீங்க சொன்னா நான் சும்மா இருக்க மாட்டேன் என்று மிரட்டி விட்டு செல்கிறார். இந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் பார்த்திபன் கட்டிய தாலியை காவியாவின் கழுத்தில் இருந்து தேவி இறக்க முயற்சி எடுக்கிறார். சுமதி காவியாவின் கழுத்தில் இருக்கும் தாலியை இறக்கு என்று சொல்ல, அதற்கு காவியாவின் மாமனார் அக்கா இதெல்லாம் வேண்டாம் என்று தடுத்துக் கொண்டிருக்க எதிரே பார்த்திபன் வந்து நிற்கிறார்.

மனம் விட்டு பேசலாம்
தாலியை கழட்ட வேண்டாம் என்று சொல்லு பார்த்தி என்று காவியா மனதிற்க்குள் பார்த்தியிடம் கெஞ்ச, அதற்கு பார்த்திபன் உன் கூட வாழ்கிறேன் என்று ஒரு வார்த்தை சொல்லு காவியா என்று பார்த்திபனும் மனதிற்குள்ளே பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது பார்த்திபனின் அத்தை நீ கட்டண தாலி காவியா கலுத்திலே இருக்கணும் என்றால் சொல்லு என்று சொல்ல, அதற்கு என்ன விரும்பாத வா... நான் கட்டண தாலியையும் விரும்ப மாட்டாள் என்று நினைக்கிறேன் என்று சொல்ல, காவியா தாலியை கழட்டி கொடுக்க கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த பிரமோ தற்போது பரபரப்பாக வலம் வருகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
அமைதியா இருங்க... இல்லன்னா.. 83வது பிறந்தநாளில் ரசிகர்களிடம் கடுப்பான இளையராஜா! -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications