Eeramana Rojave Serial: பொன்னுமணி மாதிரியா இல்லை ரட்சகன் மாதிரி தூக்கிக்கட்டுமா?
சென்னை: டிவி சீரியல்களில் கூட இப்போது ஜோடிகள் அதிக நெருக்கம் காண்பித்து நடிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். ரொமான்ஸ் காட்சிகளுக்கு என்று தனி விசிறிகள் கூட இருக்கின்றனர்.
இதற்காகவே இளம் ஜோடிகள் தனியாக எங்கேயாவது மாட்டிக்கொள்ளும் சூழல்கள் என்று கதையில் திணிக்கப்படுகிறது. அப்போது ஜோடிகள் கட்டாயம் ரொமான்ஸ் செய்வார்கள் என்பதற்கு வாரண்டி கேரண்டி தரலாம்.
இதற்காக பாடல்களும் பின்னணியில் ஒலிபரப்பி அனைவரையும் ஈர்க்கும் முயற்சிகளில் டிவி சீரியல்கள் இருக்கிறது.

இப்போது டூரில்
வரதட்சணை, சீர் செனத்தி பிரச்சனைகளால் பிரித்து வைக்கப்பட்டு இருக்கும் மலர், வெற்றி, அகிலா, புகழ் ஜோடிகள் புருஷன் வீட்டாருக்குத் தெரியாமல் ஏற்காடு டூர் போகிறார்கள். மலரும் அகிலாவும் அக்கா தங்கை. வெற்றியும், புகழும் அண்ணன் தம்பி. இப்படிப்பட்ட உறவுக்குள் இவர்கள் கல்யாணம் நடந்தாலும், வரதட்சணை பிரச்சனை வந்துருது.

ரெசார்ட்டில் சர்ப்ரைஸ்
தங்கும் ரெஸார்ட்டில் இளம் ஜோடிகளுக்கான போட்டிகள், பரிசுகள் என்று சர்பிரைஸ் தருகிறார்கள் விடுதிக்காரர்கள். ஜோடிப் பாடல், ஜோடி நடனம், ஜோடி சமையல் என்று எல்லாமே ஓகேவாக இருக்கிறது ஜோடிகளுக்கு. இதில் நம்பர் ஒன் ஜோடியாக தாங்கள் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள் மலரும் வெற்றியும்.

காட்டில் விட்டு
கண்ணைக் கட்டி நடு காட்டுக்கு சென்று ஜோடிகளை ஜோடி ஜோடியாக ஒரு இடத்தில் விட்டு விட்டு வருகிறார்கள். அவர்களிடம் மேப் தரப்படுகிறது. காலை 10 மணிக்குள் ரிஸார்ட் வந்து சேர வேண்டும் என்று சொல்கிறார்கள். நடுவில் இரவு நேரத்தில் டென்ட் கட்டித் தங்கிக்கலாமாம். போன் சிக்னல் கிடைக்காது. கையில் வாக்கி டாக்கி கொடுக்கிறார்கள்.

தூக்குங்க மாமா
மலருக்கு கால் நடக்க முடியாமல் வலிக்க, நடக்க முடியலை மாமான்னு கெஞ்சுகிறாள். பாதி தூரம் போனால்தான், இரவு டென்ட் போட்டுத் தங்கி பின்னர் காலையில் 10 மணிக்கு போக முடியும்.மலர்.. வேணும்னா உன்னைத் தூக்கிக்கிட்டு நடக்கட்டுமான்னு கேட்கறான்.

தூக்குவதில் பல ரகம்
தூக்குவதில் பல ரகம் இருக்கு மலர்னு இவன் சொல்ல, என்ன மாமா சொல்றீங்க..தூக்குவதில் பல ரகமான்னு கேட்கிறாள். ஆமாம், மலர் பொன்னுமணி படத்தில் கார்த்திக் சவுந்தர்யாவை முதுகில் தூக்கிட்டு வருவார்னு சொல்றான். வேணாம் மாமா நாம் இன்னும் அவ்ளோ நெருக்கமா ஆகலை. வேற சொல்லுங்கன்னு அவ சாய்ஸ் கேட்கிறாள்.

படம் ரட்சகன்
ரட்சகன் படத்தில் நாகார்ஜுனா சுஷ்மிதா சென்னை, கை கால் முளைத்த கனவா நீ ன்னு தூக்கிட்டு போறாரே அப்படியா.. இல்லை பாகுபலி படத்தில் சிவ லிங்கத்தை தோளில் வச்சுக்கிட்டு நடப்பாரே பிரபாஸ் அப்படி தூக்கட்டுமான்னு கேட்கறான். சரி மாமா பாகுபலி படம் மாதிரி தூக்கிட்டு போங்க மாமான்னு சொல்றா மலர்.
அப்புறம் என்ன மலரை மலர் போல தூக்கி தோளில்வச்சுகிட்டு நடக்கறான் வெற்றி. ஆனால், இதைப் பார்த்து ரெஸார்ட் காரங்க இது போன்ற முடிவுகளை எடுத்தால் நல்லதில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications