Eeramana Rojave serial: வந்தா பார்க்கறதில்லை...வரலேன்னா அழறது!
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியல். பெண்களுக்கான வரதட்சணைப் பிரச்சனையை பற்றியும் சொல்வதாக இருக்கிறது. கட்டாய கல்யாணம் செய்து கொண்டு அந்த தம்பதியர் எப்படி வாழ ஆரம்பிக்கிறார்கள் என்பது பற்றியும் கூறுவதாக இருக்கிறது.
கிராமத்தில் நடந்துகொண்டு இருக்கும் குடும்பங்கள் பற்றிய கதையாகவும் இருப்பதால், வித்தியாசமான கதைக் களமாகவும் இருக்க வேண்டும் என்கிற ஆவல் எழுகிறது.
உறவுக்கார குடும்பத்தில் பெண் எடுத்தும் கூட வரதட்சனை பிரச்சனை, ஒருவருக்கு ஒருவர் கடன் கொடுத்து கொண்ட பிரச்சனை என்று பெண்களை கொடுத்த சம்பந்தி வீட்டில் பூதாகரமாகி விடுகிறது.

மலர் வெற்றி
வெற்றியின் அண்ணனை காதலிச்ச மலருக்கு, அவன் கல்யாணத்துக்கு முதல் நாள் விபத்தில் இறந்து போனதால் , அவனது தம்பி வெற்றியை மலருக்கு கல்யாணம் செய்து வைக்கறாங்க. இது ஒரு வகையில் கட்டாய கல்யாணம்தான் என்றாலும், இருவரும் ஒரு சம்பவத்தில் இருந்து விடுபட்டு, பின்னர் இப்போது நடக்கும் சூழலைப் புரிந்துகொண்டு வெற்றியுடன் சேர்ந்து வாழவும் வேண்டும்.

அகிலா புகழ்
வெற்றியின் தம்பி புகழும், மலரின் தங்கையும் அகிலாவும் கூட , ஒரு விபத்து போலத்தான் இருவருக்கும் கல்யாணம் நடக்குது.அகிலாவை ஜவுளிக்கடை உடை மாற்றும் அறையில் போட்டோ எடுத்துவிட்டு அதை வைத்து முறை மாமன் மிரட்ட மாப்பிள்ளை தெறிச்சு ஓடிடறான்.அதனால், புகழ்தான் அகிலாவின் கழுத்தில் தாலி காட்டறான்.

மலர் அகிலா
இப்படி இருவருக்கும் புயல் புரட்டிப் போட்டது போல கல்யாணம் நடந்து இருக்கு.இரு ஜோடிகளுக்குமே சேர்ந்து வாழ கொஞ்சம் அவகாசம் தேவைப் படுகிறது.அதன் படி இரு ஜோடிகளும் கிட்டத்தட்ட நெருங்கும் நிலையில் இருக்கும் போது, மாப்பிள்ளைகள் அம்மா வரதட்சிணை சீர் வரிசையில் குறை வைத்து விட்டார்கள் என்று வீட்டு வாசலில் நின்று சத்தம்போட்டு, மருமகள்களையும் கொண்டு வந்து விட்டுவிட்டு சென்று விடுகிறார்கள்.

வெற்றி புகழ்
வெற்றி புகழ் இருவரும் மனைவி மேலாசை வைத்து இருந்தாலும் அவர்களால் அம்மாவை எதிர்த்து பேச முடியவில்லை. வெற்றி மலரைப் பார்க்க அவள்பள்ளிக்கு போகும்போது பின்னால் சென்று அவளை இம்ப்ரஸ் செய்கிறான்.புகழ் அகிலா வீட்டு வாசல் முன் தான் வண்டி பஞ்சர் ஆனது போலவும், அவர்கள் வீட்டு அருகில் உட்கார்ந்து பசி வரும்போது சாப்பிடுவது எனவும் பெண்டாட்டியை பார்க்க வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் வந்தாலும் திட்டுவது, வரலேன்னாலும் அழறதுன்னு பொழுதை கழிக்கிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications