பச்சை துரோகம் டிக்டாக் இலக்கியாவுக்கு? அதுக்கு இவ்வளவு மாத்திரைகளா? தீவிர சிகிச்சையில் இலக்கியா! ஏன்
சென்னை: டிக் டாக் இலக்கியா, எந்த பண்டிகையாக இருந்தாலும் தன்னுடைய ரசிகர்களுக்கு வாழ்த்து சொல்லி விதவிதமான போட்டோக்களை ஷேர் செய்துவிடுவார்.. சமீபத்தில், இலக்கியா சொந்தமாக புது வீடு வாங்கி, நண்பர்களை அழைத்து கிரகப்பிரவேசமும் நடத்தியிருந்தார்.. இன்ஸ்டாகிராமில் ஏராளமான ஃபாலோவர்ஸ்களை கொண்ட இலக்கியாவுக்கு இப்போது என்ன நடந்தது? ஏன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்? என்று தெரியவில்லை.. இலக்கியாவுக்கு தீவிர சிகிச்சை நடப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
டிக்டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் இலக்கியா.. இதன்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார்.. அரைகுறை ஆடையுடன் ஆட்டம், பாட்டம், நடிப்பு என ஒவ்வொரு வீடியோவையும் இலக்கியா வெளியிட்டு, மிகக்குறுகிய காலத்திலேயே புகழ்பெற்ற டிக்டாக் ஸ்டாராகிவிட்டார்.

டிக்டாக் வீடியோ
ஆரம்பத்தில் ஒழுங்காகத்தான் டிக்டாக் வீடியோ வெளியிட்டாராம்.. ஆனால், லைக்ஸ் வரவில்லை என்பதால், கவர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்ததாக இலக்கியா ஒருமுறை கூறியிருந்தார்.
டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகும் கூட தன்னுடைய பிற சமூக வலைதள பக்கங்களில் இதுபோன்ற வீடியோக்களையே வெளியிட்டு வந்தார்.. பிறகு இலக்கியாவுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது. ஆனால், படம் வெளியாகவில்லை.
படவாய்ப்பு தருவதாக கூறி பலர் படுக்கைக்கு அழைத்து ஏமாற்றிவிட்டதால், சினிமாவும் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்டதாக இலக்கியா ஒருமுறை கூறியிருந்தார்.
இறந்துபோன அம்மா
கடந்த வருடம் நடிகை ஷகீலா தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இலக்கியா, "3ம் வகுப்பு படிக்கும்போது என்னுடைய அம்மா இறந்துட்டாங்க.. அப்பா 2வது கல்யாணம் செய்துக்கிட்டதால என் வாழ்க்கையே திசை மாறிவிட்டது.. அம்மா எனக்கு இருந்திருந்தால் என் வாழ்க்கை வேற மாதிரி இருந்திருக்கும்.. காதலிப்பதாக சொல்லி, பழகி, துரோகத்துக்கு நிறைய ஆளாகிவிட்டேன்" என்றெல்லாம் கண்ணீருடன் கூறியிருந்தார்.
பிறகு குக்கிங் சேனல் ஒன்றை துவங்கினார் இலக்கியா.. இந்த சேனலில், டீசன்ட்டான டிரஸ்களை அணிந்து வீடியோக்களை பதிவிட துவங்கினார்.. 8 வயதிலிருந்தே சமைத்து வருவதாலும், தனக்கு சமையல் பிடிக்கும் என்பதால், இந்த சேனலை துவங்கினாராம்.
ஆனால், "இனிமேல் கவர்ச்சி காட்ட மாட்டியா? பத்தினி வேஷம் போடாதே?" என்றெல்லாம் கமெண்ட்கள் வருவதை பார்த்து வருத்தமாக இருப்பதாகவும் ஷகிலாவிடம் அப்போது வேதனை தெரிவித்திருந்தார் இலக்கியா.
சமையல் குறிப்பு - டிப்ஸ்
எனினும், சொந்தமாக வைத்துள்ள யூடியூப் சேனலில், சமையல் குறிப்பு, பியூட்டி டிப்ஸ் போன்ற வீடியோக்களை பகிர்ந்து அதிகப்படியான வியூஸ்களை பெற்றார்.. இதனால் நல்ல வருமானத்தையும் ஈட்டி வருகிறார்.
3 மாதங்களுக்கு முன்பு, இலக்கியா, சென்னையில் சொந்தமாக வீடு கட்டி குடியேறினார்.. தன்னுடைய நண்பர்களை அழைத்து கிரகப்பிரவேசம் செய்த போட்டோக்களையும், இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்திருந்தார்.. அத்துடன், கிரகப்பிரவேசம் செய்யப்பட்ட வீட்டின் போட்டோக்களையும் பகிர்ந்திருந்தார்..
மருத்துவமனையில் திடீர் அனுமதி
இந்நிலையில், அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் வசித்துவரும் இலக்கியா, அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக கொடுக்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டிருப்பதை கண்டறிந்துள்ளனர்.. இந்த மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டதால், அவருக்கு போதை அதிகமாகிவிட்டதாக தெரிகிறது. எனவே, உடனடியாக அவரை மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகிறார்கள்.. உண்மையிலேயே ஊட்டச்சத்து மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. பிரபல யூடியூபர் இலக்கியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது, அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications