விசுவிடமிருந்து வந்த பழக்கம்.. அதனால் வந்த வினை, ராஜ்கிரணா இப்படி? மனம் திறந்த கஸ்தூரிராஜா
சென்னை: மறைந்த விசு பற்றி நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரிராஜா பல தகவல்களை கூறி இருக்கிறார்.
ஆரம்ப காலகட்டத்தில் தான் பெற்ற கஷ்டங்கள் குறித்து கஸ்தூரிராஜா அதில் பேசியிருக்கிறார்.
தன்னுடைய கோபத்தால் நடிகர் ராஜ்கிரண் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தைப் பற்றியும் கஸ்தூரிராஜா பகிர்ந்து இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், கதை ஆசிரியராகவும், வசனகர்த்தாவாகவும், ஒரு நல்ல நடிகராகவும், பட்டிமன்ற பேச்சாளராகவும் வலம் வந்தவர் தான் விசு. இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சி கலந்துகொண்டு பலரையும் வியக்க வைத்திருக்கிறார்.
விசுவின் சினிமா வாழ்க்கையில் மிகவும் திருப்புமுனையாக அமைந்த படம் சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படம் தான். அந்த திரைப்படத்தில் கதை அனைவருக்கும் பிடித்துப் போனதாலே பல மொழிகளிலும் அந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 1986 ஆம் ஆண்டு தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான ஃபிலிம் பெயர் விருதையும் இந்த திரைப்படம் பெற்றிருக்கிறது.
விசு ஆரம்பத்தில் இயக்குனர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து அதற்குப் பிறகு ஒரு இயக்குனராக மாறி இருக்கிறார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூகத்தில் மிகவும் குடும்பத்தை மையப்படுத்தி தான் இருக்கும். அந்த வகையில் விசுவுக்கு முன்கோபம் அதிகமாம், தான் ஒரு இயக்குனர் என்ற கருவமும் அப்போது அதிகமாக இருந்தது என்று தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரிராஜா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

அதோடு ஒரு நல்ல இயக்குனருக்கு அந்த கர்வம் இருக்க வேண்டியது அவசியம் தான் என்றும் கஸ்தூரிராஜா கூறியிருக்கிறார். கஸ்தூரிராஜா விசுவிடமிருந்து தொழில் கற்றவர் தான் விசுவை இப்போது வரைக்கும் தன் குருவாகவே பாவித்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் கஸ்தூரிராஜா இயக்கிய முதல் படமான என் ராசாவின் மனசிலே திரைப்படத்தை பற்றிய ஒரு அனுபவத்தை சமீபத்து பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
அந்தப் படத்திற்கான கதையை ஒரு சிடியில் தயார் செய்து நிறைய நடிகர்களிடமும், தனக்கு தெரிந்தவர்களிடமும் சென்று கஸ்தூரிராஜா வாய்ப்பு தேடினாராம். அப்போது தான் ஒரு நண்பர் மூலமாக ராஜ்கிரண் வீட்டிற்கு சென்றிருக்கிறார். ஆனால் ராஜ்கிரன் கஸ்தூரிராஜாவை பல மணிநேரம் காக்க வைத்திருக்கிறார். பிறகு ராஜ்கிரணிடம் ஆறு கதைகளை கூறினாராம். ஆனால் அந்த கதைகள் எதுவுமே ராஜ்கிரணுக்கு பிடிக்கவில்லையாம்.

இதனால் கோபப்பட்ட கஸ்தூரிராஜா கடைசியாக அந்த சீடியை அவர் கையில் கொடுத்து இதை பார்த்த பிறகு நான் யார் என்பது உங்களுக்கு புரியும் என்று கோபத்தோடு வெளியே வந்து விட்டாராம். பிறகு நான் இந்த மாதிரி கோபப்பட்டதற்கு காரணம் விசுவோடு நான் இருந்தது தான். விசுவிடம் இருந்த மிகப்பெரிய மைனஸ் கோபம் அது எனக்கும் தொற்றிக் கொண்டது என்று கூறியிருக்கிறார்.
பிறகு மறுநாள் ராஜ்கிரண் கஸ்தூரிராஜா வீட்டிற்கு வரவழைத்து அவரிடம் பேசி இருக்கிறார். அப்போது ஒரு நல்ல இயக்குனரிடம் இருந்து வந்தவர் நீங்க அவருடைய டிசிப்ளின் எல்லாமே உங்களிடம் இருந்திருக்க வேண்டும் ஆனால் ஒரு நடிகரை பார்க்க வர வேண்டும் என்றால் முதலில் அப்பாயின்மென்ட் வாங்கிய பிறகு வரவேண்டும் அல்லவா? அதனால் தான் உங்களை காக்க வைத்தேன் என்று கூறினாராம். பிறகு கதை பிடித்து போக என் ராசாவின் மனதிலே படம் தயாரானது என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிறது.












Click it and Unblock the Notifications