எதிர்நீச்சலில் புதிய குணசேகரன்.. மிலிட்டரியில் 5 வருடம்.. ராமநாதபுரம் “பெருநாழி”.. தெரியாத மறுபக்கம்
சென்னை: சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடிகர் வேலராம மூர்த்தி அறிமுகம் ஆகி இருக்கிறார்.
அவர் இதற்கு முன்பு திரைப்படங்களில் நடிகராகவும் ஒரு எழுத்தாளராகவும் பலருக்கும் பரீட்சையமாகி இருந்தாலும் அவர் மிலிட்டரியில் 5 வருடங்கள் பணியாற்றியவர் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம்.

அதே நேரத்தில் அவர் எப்படி சினிமாவில் பிரபலம் அடைந்தார்? தற்போது எதிர்நீச்சல் சீரியலுக்கு இவருக்கு வாய்ப்பு கிடைக்க காரணம் என்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடிகர் மாரிமுத்து நடித்து வந்த நிலையில் திடீரென்று அவருடைய திடீர் மறைவால் அவருடைய கேரக்டரில் தற்போது நடிகர் வேலராகமூர்த்தி அறிமுகம் ஆகி இருக்கிறார். மாரிமுத்து இறந்த முதல் நாளே வேலராமமூர்த்தி இந்த கேரக்டரில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலர் கருத்து கூறியுள்ளனர்.
அதுபோலவே தற்போது நடக்கவும் தொடங்கியிருக்கிறது. சீரியலில் அவர் அறிமுகமானதுமே அவருடைய தனித்துவத்தை காட்ட தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் வேலராமமூர்த்தி பற்றி பல தகவல்களை பார்க்கலாம். அதில் கிராமத்து சாயலில், வாட்ட சாட்டமான உடல்வாகு, மிரட்டும் முறுக்கு மீசை, கண்களில் அனல் தெறிக்கும் பார்வை என வேல ராமமூர்த்தி பலரையும் மிரட்டி இருக்கிறார். அவர் நடித்த படங்களில் கூட அவருடைய வசனங்கள் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து இருக்கிறது.
அந்த வகையில் வேலராம மூர்த்தி சொந்த ஊர் ராமநாதபுரத்தில் உள்ள பெருநாழி என்ற கிராமம் தானாம். இவர் நடிகர் மாரிமுத்துவை போலவே விவசாய குடும்பத்தை சார்ந்தவராக தான் இவரும் இருந்திருக்கிறார். குடும்பத்தில் வறுமை நிலை இருந்திருந்தாலும் இவர் அந்த நேரத்திலேயே பி யு சி படிப்பை படிப்பு முடித்து இருந்தாராம். அதைத் தொடர்ந்து தன்னுடைய கற்பனை திறமையின் காரணமாகவே இவர் பல நாவல்களையும் எழுதி இருக்கிறார்.
அதில் அதிகமாக மண் சார்ந்த பேச்சு வழக்குகளிலேயே இவருடைய எழுத்து இருக்கும். நாவல், சிறுகதை என பல தளங்களில் இயக்குனராக விளங்கி வருகிறார். இந்த வகையில் குருதி ஆட்டம், பட்டத்து யானை போன்ற சில புகழ்பெற்ற நாவல்களையும் கோட்டை கிணறு, இருளப்பசாமியும் 21 கிடாயும் போன்ற சிறுகதையும் பெரிய அளவில் பிரபலமானது. அது மட்டும் அல்லாமல் குற்ற பரம்பரை என்ற பெயரில் இவர் எழுதிய நாவல் பல இயக்குனர்கள் திரைப்படமாக எடுக்க முயற்சி செய்திருந்தனர்.
இந்த நிலையில் இவர் எழுதிய குற்ற பரம்பரை என்ற நாவல் வெப் சீரிஸ் ஆக வெளிவர இருக்கிறது. அதை சசிகுமார் தான் இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்த அளவிற்கு புகழ் பெற்ற இவர் உடல் ஆரோக்கியத்திலும் அதிக அளவில் கவனத்தை செலுத்தி வருகிறார். அதை குறித்து அவர் பேசுகையில் நைட்டு எந்த நேரம் நான் படுத்தாலும் காலையில் நான்கு முப்பது மணிக்கு எழுந்திடுவேன். எழுந்ததும் வண்டியை எடுத்துட்டு மதுரை ஏர்போர்ட்டுக்கு போய் முக்கால் மணி நேரம் நடப்பேன்.
அது மட்டும் அல்லாமல் இந்த வயதிலும் 40 தண்டால் தினமும் போட்டு விடுவேன். அதோடு வாய்ஸ் எக்சசைஸ்சும் பண்ணுவேன் என்று கூறியிருக்கிறார்.இந்த நிலையில் இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இந்திய ராணுவத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றி இருந்தாராம். அதற்குப் பிறகு அஞ்சல் நிலையத்திலும் இவர் வேலை செய்திருக்கிறார்.
அதை தொடர்ந்து தான் இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. முதல் படமே இவர் மதயானை கூட்டம் என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமாகி இருக்கிறார். அதை தொடர்ந்து சேதுபதி, கிடாரி போன்ற பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் இவர் அதிகமான திரைப்படங்களில் நெகட்டிவ் கேரக்டரில் தான் நடித்திருந்தார். அதுவும் "இளந்தாரி பய" என்ற வசனம் மீம்ஸ் கிரியேட்டர்களையும் அதிக அளவில் கவர்ந்தது.
அது போல இப்போது எதிர்நீச்சல் சீரியலில் இவர் அதில் அறிமுகம் ஆகி இருப்பதால் இனி எந்த மாதிரி வசனத்தை பிரபலமாக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியலில் இவர் வில்லனாக மட்டும் தான் மிரட்டுவார். காமெடி எல்லாம் இவருக்கு வருமா? என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது.
காரணம் ஆரம்பத்தில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து தன்னுடைய குணசேகரன் கேரக்டரில் வில்லத்தனத்தையும், காமெடியையும் சேர்ந்து வெளிகாட்டியதால் தான் ரசிகர்களின் மத்தியில் பிரபலம் அடைந்தார். ஆனால் இவர் என்ன மாதிரி செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications