பாக்யராஜ் மனைவி மட்டும் அப்போ அதை பண்ணலன்னா நான் இல்ல!.. மனம் திறந்த எதிர்நீச்சல் ரேணுகா
சென்னை: நடிகர் பாக்யராஜ் மனைவி மற்றும் பாக்யராஜ் பற்றி எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகாவாக நடிக்கும் நடிகை பிரியதர்ஷினி பல ரகசியங்களை கூறியிருக்கிறார்.
நடிகர் பாக்யராஜ் உடன் தாவணி கனவுகள் திரைப்படத்தில் நடிக்கும் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் அந்த திரைப்பட வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது பற்றியும் அதில் பேசியிருக்கிறார்.

தமிழில் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த "சுவரில்லா சித்திரங்கள்" என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகர் பாக்கியராஜ் ஒரு இயக்குனராக அறிமுகம் ஆக்கியிருக்கிறார். அந்த நேரத்தில் ஒரு இயக்குனராக பலருடைய மனதிலும் கவர்ந்து விட்டார். அதற்கு காரணம் அவருடைய படங்களில் பெரும்பாலானவை குடும்ப திரைப்படங்களாகவே இருந்ததுதான்.
பாக்யராஜின் திரைப்படங்களில் பெரும்பாலும் யதார்த்தம் நிறைந்ததாகவும், அதிக சினிமாதளம் இல்லாததாகவும் இருப்பதாகவே அதிகமான ரசிகர்கள் அதை விரும்பி பார்த்து வந்தனர். அதிலும் ஆரம்ப காலத்தில் அவர் இயக்கிய அந்த ஏழு நாட்கள், தூரல் நின்னு போச்சு போன்ற திரைப்படங்கள் பெரும் வரவேற்பு கொடுத்தது. இப்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருப்பது போன்று தான் அப்போது பாக்யராஜ்க்கு பெரிய அளவில் வரவேற்பு இருந்தது.
ஆரம்பத்தில் இருந்தே ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் தான் இயக்கும் திரைப்படங்களில் நடிகராகவும் நடித்து பாக்கியராஜ் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து விட்டார். அந்த வகையில் அவர் நடித்த முந்தானை முடிச்சு மற்றும் தாவணி கனவுகள் திரைப்படம் இரண்டுமே அதிகமான வரவேற்பை பெற்று நடுத்தர குடும்பத்து மக்களையும் அதிகமாக கவர்ந்திருந்தது. காரணம் அந்த இரண்டு திரைப்படங்களில் பாக்கியராஜ் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவராக நடித்திருப்பார்.
இந்த நிலையில் தாவணி கனவுகள் திரைப்படத்தில் நடிகர் பாக்யராஜின் கடைசி தங்கச்சியாக நடிகை பிரியதர்ஷினி நடித்திருப்பார். அவர் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ரேணுகா கேரக்டரில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே எதிர்நீச்சல் சீரியலில் இவருடைய எதார்த்தமான நடிப்பை பார்த்து பிடித்துப்போன ரசிகர்கள் இவரை அடிக்கடி பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் கரிகாலனோடு இவர் பேசும்போது அடிக்கும் நக்கல் குணசேகரனிடம் பேசும்போது டைமிங் கவுண்டர் அனைவரையும் கவர்ந்திருக்கிறது.
ஆனால் இவர் பல வருடங்களுக்கு முன்பு குழந்தையாகவே இதே போலவே நக்கல் அடித்திருக்கிறார். அதுவும் "தாவணி கனவுகள்" திரைப்படத்தில் நடிகர் பாக்யராஜ் மட்டுமல்லாமல் நடிகர் சிவாஜியையும் அடிக்கடி கலாய்க்கும் குட்டி குழந்தையாக நடித்திருப்பார். இந்த நிலையில் தான் அந்த திரைப்படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் பாக்யராஜோடு அவருடைய யூடியூப் சேனலில் பேசி இருக்கிறார்.
அப்போது பாக்கியராஜ் இடம் அவருடைய மனைவி பூர்ணிமா பற்றி பேசி இருக்கிறார். அப்போது எனக்கு இந்த திரைப்படத்திற்கான வாய்ப்பை வாங்கி தந்தது பூர்ணிமா தான் என்பதை கூறியிருக்கிறார். அதோடு அப்போது பிரியதர்ஷினி ஏதோ ஒரு சின்ன திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தாராம். அந்த சமயத்தில் அவருடைய நடிப்பை பார்த்து பிடித்துப்போன பூர்ணிமா இந்த பெண் தாவணி கனவுகள் திரைப்படத்திற்கு சரியாக இருப்பார் என்று இவரை பரிந்துரை செய்தாராம்.
அதனை நினைவுக்கூர்ந்த பிரியதர்ஷினி, பூர்ணிமா பற்றி பெருமையாக பேசியிருக்கிறார். அன்னைக்கு மட்டும் பூர்ணிமா எனக்கு அப்படி ஒரு உதவி செய்யலைன்னா என் வாழ்க்கை எப்படியோ போய் இருக்கும் என்றும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.
-
பிரபுவின் ‘டூயட்’ நாயகி மீண்டும் வருகிறார்... 30 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி! எந்த ஹீரோவுடன் கம்பேக்? -
‘கருப்பு ஸ்டார்’ பட்டம் கொடுத்த ரசிகர்... உடனே திரிஷா கொடுத்த பதில்... இவ்வளவு இறங்கி பேசிட்டாரே! -
22 வயசுல அமலா பாலுக்கு அம்மா.. இப்போ அரசு வேலையில் கலக்கும் நடிகை! மைனா பூவிதாவின் மறுபக்கம் -
நயன்தாரா என்னை மாதிரி கஷ்டப்பட்டவங்க.. விக்னேஷ் சிவன் பழசை மறந்துட்டாரு! ஓபனாக பேசிய நடிகை சோனா -
“விஜய் - அஜித் சாதனைக்கு ஓவர்டேக் போட்ட சூர்யா!.. 12 நாளில் ‘கருப்பு’ காட்டிய பாக்ஸ் ஆபிஸ் மாஸ்!” -
Khushbu: “ரவி மோகன் பற்றிய கேள்வி”.. குஷ்புவின் ரியாக்ஷன்.. ஒரே வார்த்தையில் பதிலடி -
குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications