எதிர்நீச்சல் "திருச்செல்வம்” மனைவி யார் தெரியுமா? சீரியலுக்கும் அவருக்கும் இப்படி ஒரு தொடர்பா?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார்.
இந்த சீரியலுக்கு முன்பே சன் டிவியில் கோலங்கள் மட்டுமல்லாமல் பல சீரியல்களை இயக்கியும் நடித்தும் திருச்செல்வம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.
இந்த நிலையில் இயக்குனர் திருச்செல்வம் யார்? அவர் எப்படி சினிமாவிற்குள் வந்தார்? அவருடைய குழந்தைகள் மற்றும் மனைவி யார் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலின் இயக்குனராக இப்போது பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்திருக்கும் திருச்செல்வம் பிறந்த ஊர், தஞ்சாவூர் தானாம். இவர் குடும்பமே ஒரு விவசாய குடும்பம் தான். நடிப்புக்கும் இவருடைய குடும்பத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் தான் இருந்திருக்கிறது.

அக்கா தங்கச்சி சென்டிமென்ட்டில் திருச்செல்வம் பட்டய கிளப்புவதற்கு காரணமே அவருடைய வீட்டில் அவருக்கு இரண்டு அக்காக்கள் இருப்பது தானாம். இவருடைய வீட்டில் திருச்செல்வம் தான் கடைக்குட்டியாக இருந்திருக்கிறார். இந்த நிலையில் தஞ்சாவூரில் இருக்கும் ஒரு காலேஜிலேயே தன்னுடைய படிப்பை முடிச்சு இருக்கார். படித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று அதிகமான ஆசை வந்திருக்கிறது. அதற்கான முயற்சிகளையும் எடுத்து இருக்கிறார்.
ஆரம்பத்திலேயே இவர் சவுண்ட் இன்ஜினியராக 5 வருடங்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்திருக்க, அதற்கு பிறகு தான் இவருக்கு சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலில் வேலை பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும் துணை இயக்குனராக வேலை செய்திருக்கிறார். அதை தொடர்ந்து தான் இவர் கோலங்கள் சீரியலில் ரைட்டர் ஆகவும், டைரக்டராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். அதோடு அந்த சீரியலில் நடிகராகவும் நடித்து பலருடைய மனதை கவர்ந்திருந்தார்.
என்னதான் டைரக்டராக இருந்தாலும் கேமராக்கு பின்னாடி இருப்பதால் பலருக்கும் தெரியாது ஆனால் இவர் முதல் முறையாக தொல்காப்பியன் என்கிற கேரக்டரில் நட்புக்கு இலக்கணமாக நடித்து பலருடைய மனதில் பசை போல ஒட்டிக்கொண்டார். அதனால் தான் தற்போது இவர் இயக்கும் எதிர்நீச்சல் சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று அதிகமான ரசிகர்கள் ஆரம்பத்திலிருந்து கூறி வந்தனர். இப்போது அவர் ஜீவானந்தமாக அறிமுகமும் ஆகிவிட்டார்.
இந்த நிலையில் அவருடைய குடும்பத்தை பற்றி பார்க்க வேண்டும் என்றால் திருச்செல்வத்தின் மனைவியின் பெயர் பாரதிதானாம். இவர் ஒரு சிவில் இன்ஜினியராக இருக்கிறாராம். இவர் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாராம். கோலங்கள் சீரியலில் தேவயானி ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை பார்ப்பார். அந்த மாதிரி அந்த சீரியலில் கதாநாயகி கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை பார்ப்பதற்கு இன்ஸ்பிரக்ஷன் ஆக இருந்தது திருச்செல்வத்தின் மனைவிதானாம்.
அதுமட்டுமல்லாமல் திருச்செல்வத்தின் மனைவி ரொம்பவே போல்டான கேரக்டராம். அது போல கோலங்கள் சீரியலில் தேவயானியின் கேரக்டருக்கு அபிநயா என்ற பெயர் வைப்பதற்கு காரணம் திருச்செல்வத்தின் மகள் பெயர் அபிநயா தானாம். அதைத்தான் தன்னுடைய சீரியலில் கதாநாயகிக்கு வைத்திருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் திருச்செல்வம் வாழ்க்கையில் பெரிய அளவில் திருப்புமுனையை கொடுத்தது.
அதைத்தொடர்ந்து இப்போது அவர் பல சீரியல்கள் இயக்கிக் கொண்டிருந்தாலும் அது அந்த அளவிற்கு அவருக்கு பெரிய பெயரை கொடுக்க விட்டாலும் இப்போது சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியல் நல்ல வரவேற்பை கிடைத்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் கடந்த வாரம் ஆதிரையின் திருமணம் டிராக் டிஆர்பி யில் கிராமப்புறங்களில் மற்றும் நகர்புறங்களில் முதலிடத்தை பெற்று இயக்குனர் திருச்செல்வத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications