எதிர்நீச்சல்: கரிகாலனை அடித்த கதிர்.. ஞானம் சொன்ன வார்த்தை.. சந்தோஷத்தில் வீட்டு மருமகள்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் ஒன்றாம் தேதிக்கான எபிசோடின் பெஸ்ட் சீன் இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
அதில் தன்னை ஈஸ்வரி அடித்ததை நினைத்து கதிர் கோபத்தில் குடித்து உளறிக் கொண்டிருக்கிறார்.

அப்போது அட்வைஸ் செய்ய போன கரிகாலனை கதிர் அடிக்க, அதற்கு ஞானம் எதிர்பார்க்காத பதிலை சொல்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்ப்போம்,
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியை கதிர் தவறான வார்த்தையால் பேசியதால் ஈஸ்வரி கதிரை அடித்து இருந்தார். தன்னை கன்னத்தில் ஈஸ்வரி அறைந்ததால் அவமானத்திலும் கோபத்திலும் கதிர் அதையே நினைத்து நினைத்து அளவுக்கு அதிகமாக குடித்துக் கொண்டிருக்கிறார்.

அதோடு குணசேகரனை சொத்துக்காக கதிர் தான் ஏதாவது செய்திருப்பான் அவன் தான் குணசேகரனை ஒளித்து வைத்திருப்பான். அல்லது கொலை செய்திருப்பான் என்றும் ஜனனி சொன்னதை நினைத்து மேலும் கோபத்தின் உச்சத்தில் கதிர் இருக்கிறார். அந்த நேரத்தில் கரிகாலன் அங்கு வந்து என்ன மாமா இப்படி உட்கார்ந்து இருக்க என்று கேட்டதும் கதிர் அழுது தன்னுடைய மனதில் இருக்கும் கவலைகளை எல்லாம் கொட்டிக் கொண்டிருந்தார்.
எங்க அண்ணனை நான் கொன்னுட்டேனடா? பிறகு அவளுக அப்படி தானடா சொல்லிக்கிட்டு திரிகிறாளுக என்று கேட்க, அதற்கு கரிகாலன் ஐயோ மாமா அவளுக சொன்னதையே நீங்க இன்னும் நெனச்சுக்கிட்டு இருக்கீங்க. அத தூக்கி குப்பையில போடுங்க. அவங்க எல்லாம் லூசுங்க, அவங்க எல்லாம் ஒரு ஆளுன்னு அவங்க சொல்றதை எல்லாம் மனசுல வச்சுட்டு இருக்கே என்று கரிகாலன் சமாதானப்படுத்த பார்க்க, அதற்கு கதிர் லூசு அவங்களா? இல்ல நான் தான்.

நான் எங்க அண்ணன் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்கேன். நான்தான் லூசு, என்ன பேசினாளுக நீ பார்த்தால்ல என்று கதிர் கேட்டுக் கொண்டிருக்க, அதற்கு கரிகாலன், வா மாமா நாம கீழ போகலாம். இங்க இருந்தா இப்படித்தான் அந்த நெனப்பு சுத்தி சுத்தி வரும். வா நம்ம கீழ போகலாம் என்று கரிகாலனை கூப்பிட, அதற்கு மேலும் கதிர் குடிக்க அதை பார்த்து அதிர்ச்சியான கரிகாலன் ஐயா மாமா இது வேண்டாம் என்று தடுக்க பார்க்க, எனக்குனு யாரு இருக்கா? அவளுக என்னை பேசும்போது யாரு தட்டி கேட்டா? நீ கேட்டியா? என்று அழுது கொண்டிருக்கிறார்.
பிறகு சமாதானப்படுத்தி கதிரை மாடியில் இருந்து கரிகாலன் கூட்டிக்கொண்டு கீழே வர அங்கு சமையலறையில் வீட்டுப் பெண்கள் எல்லாரும் பரபரப்பாக சமையல் செய்து கொண்டிருக்கின்றனர். எல்லோரும் சந்தோஷமாக இருக்கின்றனர். அந்த நேரத்தில் கதிர் கீழே வர அப்போது ஞானம் பதில் எதுவுமே பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

அப்போது கரிகாலன் யோவ் மாமா உன் தம்பி இப்படி குடிச்சிட்டு வரான் நீ ஏதாவது கேக்குறியா? என்று கேட்க, அதற்கு ஞானம், இவனுக்கு குடிப்பதற்கு ஏதாவது காரணம் வேணும். அதான் இப்ப கிடைச்சதும் குடிச்சிட்டு வரான் என்று அவமானப்படுத்துகிறார். இப்படியாக அந்த வீடியோ முடிவடைந்தது.












Click it and Unblock the Notifications