கதிரின் மாற்றத்தால் குணசேகருக்கு எதிராக திரும்பும் ஒட்டுமொத்த குடும்பம்.. இனி நடக்கப் போவது இதுதானா?

எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை விஷம் அருந்தி மருத்துவமனையில் இருக்கும் நிலையில் குணசேகரன் யாரும் எதிர்பார்க்காத பதிலை கூறியிருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மார்ச் ஒன்றாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே ஆதிரை விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார்.

இந்த நிலையில் ஆதிரையை பார்க்க செல்லக்கூடாது என்று கதிரிடம் குணசேகரன் கூறி இருக்கிறார்.

அடுத்தடுத்த பிரச்சனை

அடுத்தடுத்த பிரச்சனை

எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத பல மாற்றங்கள் இந்த வாரத்தில் நடந்தது. கடந்த சில நாட்கள் ஆகவே ஆதிரையின் திருமண விஷயத்தில் அடுத்தடுத்த பிரச்சனைகள் வந்த வண்ணமாக இருக்கிறது. ஆதிரை காதலிக்கும் விஷயம் குணசேகரனுக்கு தெரிந்தது தான் தெரிந்தது அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த பல பிரச்சனைகள் குணசேகரன் வீட்டில் நடந்து வருகிறது. ஆதிரைக்கு ஆதரவாக பேசிய ஞானத்தை குணசேகரன் திட்டி அவமானம் படுத்தியிருக்கிறார். ஏற்கனவே சக்தி ஜனனி பக்கம் சப்போர்ட் பண்ண தொடங்கிய நிலையில் தற்போது ஞானமும் குணசேகரனுக்கு எதிராக மாறிவிட்டார்.

மொக்கை வாங்கிய குணசேகரன்

மொக்கை வாங்கிய குணசேகரன்

இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் ஆரம்பத்தில் குணசேகரன் இடம் நீ எனக்கு அருணை கல்யாணம் செய்து வைக்கவில்லை என்றால் நான் செத்துப் போய் விடுவேன் என்று ஆதிரை கூறியதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் இருந்த நிலையில் நேற்று விஷத்தை அருந்திவிட்டு மயக்கத்தில் ஆதிரை இருக்க, அது தெரியாமல் நந்தினி ஆதிரைக்கு மாம்பழ ஜூஸ் கொண்டு வருகிறார். ஏம்மா இந்த வெயில் நேரத்தில் எனக்கு மாம்பழ ஜூஸ் வேண்டாம் என்று நந்தினியிடம் குணசேகரன் சொல்ல, இது உங்களுக்கு இல்ல மாமா ஆதிரைக்கு என்று நந்தினி குணசேகரனை மொக்க செய்துவிட்டு கிளம்புகிறார்.

நொந்து கொள்ளும் குணசேகரன்

நொந்து கொள்ளும் குணசேகரன்

அங்கே ஆதிரை மயக்கத்தில் கிடப்பதை பார்த்து நந்தினி எழுப்பி பார்த்து ஆதிரை எந்திரிக்காததால் தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டு மீண்டும் நந்தினி கீழே வர, அப்போதும் தன்னுடைய நக்கல் தனத்தோடு குணசேகரனிடம் மாமா ஆதிரை தூங்கி கிட்டு இருக்கா, இதை நீங்க குடிக்கிறீங்களா என்று கேட்க உன் மனைவிக்கு எவ்வளவு நக்கல் பாத்தியா? என்று கதிரிடம் குணசேகரன் நொந்து கொள்கிறார். பிறகு வழக்கம்போல சமையல் கட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது ஆதிரை எழுப்ப எழுப்ப எந்திரிக்கவே இல்லை என்று நந்தினி பேசிக் கொண்டிருக்க ஜனனிக்கு லேசாக சந்தேகம் வருகிறது.

தவிக்கும் கதிர்

தவிக்கும் கதிர்

ஜனனி நான் போய் எழுப்பி பார்க்கிறேன் என்று வந்து ஆதிரையை எழுப்ப ஆதிரை எழும்பாமல் இருக்க வெளியே வரும்போது அங்கே இருந்த விஷப்பாட்டிலை பார்த்து ஆதிரை விஷம் அருந்தி விட்டார் என்று கூற அப்போது பதறி போய் கதிர் பார்க்கப் போகலாம் என எந்திரிக்கும் போது குணசேகரன் தடுத்து நிறுத்துகிறார். கதிரும் காப்பாற்றாமல் இருக்க யார் காப்பாற்றுவார்கள் என்று பரபரப்பாக இருக்கும் நேரத்தில் சக்தி வந்து ஆதிரையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார். அப்போது கதிரின் முகத்தில் பரபரப்பு தெரிந்தாலும் அண்ணனை மீறி கதிர் போக முடியாமல் அங்கேயே இருக்கிறார்.

கதிர் எடுக்கும் முடிவு

கதிர் எடுக்கும் முடிவு

ஏற்கனவே நேத்து ஆதிரை மருந்து குடித்து விட்டாள் என்று சொன்னபோது பாடைக்கு ரெடி பண்ணி வை என்று முகத்தில் இறுக்கமாக குணசேகரன் பேசியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. குறிப்பாக கதிருக்கு அதிகமாகவே அதிர்ச்சியை கொடுத்திருந்தது. அவருடைய முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. இந்த நிலையில் இன்றைய பிரமோவில் எத்தனை குடைச்சல் தான் ஒரு பொம்பள புள்ளையால எனக்கு வந்துகிட்டே இருக்கிறது. எல்லாத்தையும் மறந்துடுவேன். கதிர் நீ போகக்கூடாது, போனேன்னு வையி என்று ஒற்றை விரலை காட்டி மிரட்டி கொண்டு இருக்கிறார். இந்த பிரமோவை பலருக்கும் போது அடுத்ததாக கதிர் குணசேகரனை விட்டுப் போவது உறுதி என்று தோன்றுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+