மொத்த குடும்பத்துக்கும் அதிர்ச்சி கொடுத்த அப்பத்தா...கடைசி நேரத்தில் இப்படி ஒரு முடிவா?
சென்னை: குணசேகரனும் மொத்த குடும்பமும் அப்பத்தாவின் 40% சொத்தை குணசேகரின் பெயருக்கு எழுதி வைக்க சொல்லி வற்புறுத்துகின்றனர்.
இந்த நிலையில் அப்பத்தா தன்னுடைய சொத்தை குணசேகரின் பெயருக்கு எழுதி கொடுக்கிறேன் என்று சம்மதித்திருக்கிறார்.
இந்த நிலையில் அப்பத்தா திடீரென்று மண்டபத்தை விட்டு கிளம்பி போய் இருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத திடீர் திருப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே தன்னுடைய 40% ஷேரை குணசேகரன் பெயருக்கு தரமாட்டேன் என்று அப்பத்தா சொல்லியதால் இந்த திருமணம் நடக்க வாய்ப்பில்லை என்று குணசேகரன் கூறியதால் எஸ்கேஆர் குடும்பம் கோபத்தில் மண்டபத்தை விட்டு வெளியேறி இருக்கிறது.
இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் விசாலாட்சி அப்பத்தாவிடம் உங்களுடைய சொத்து தான் உங்களுக்கு முக்கியம் நீங்கள் நூறு வயசு வரைக்கும் நல்லா இருப்பீங்க, ஆனா உங்க ரத்தமான உங்க பேத்தி உயிரோடு இருக்க மாட்டா, அவள் இல்லாமல் நானும் இருக்க மாட்டேன். அதை எல்லாம் பார்த்துட்டு நீங்க சந்தோசமாக இருங்க என்று அதிகமாக செண்டிமெண்ட் ஆக பேசி திட்டி இருந்தார்.

இதனால் நான் குணசேகரனுக்கு என்னுடைய 40% ஷேரை கையெழுத்து போட்டு கொடுக்கிறேன் என்று அப்பத்தா கூறி அதற்காக பத்திரத்தில் கையெழுத்து போடும்போது நேற்றைய எபிசோடு முடிவடைந்தது. இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்காண ப்ரமோ வெளியாகி இருக்கிறது. அதில் மீண்டும் எஸ் கே ஆர் குடும்பம் திருமண மண்டபத்திற்கு வந்திருக்கின்றனர். அங்கே நிச்சயதார்த்த வேலைகள் ஆர்வமாக நடந்து கொண்டிருக்கிறது.
அப்போது குணசேகரன் சரி முதலாளி எல்லா வேலையும் ஆரம்பிச்சிடலாம். நிச்சய ஓலையை படிங்க என்று கூறுகிறார். அப்போது ஜனனி கோபமாகி விட்டு பிறகு அப்பத்தாவை தேடுகிறார். அங்கிருக்கும் காவலாளி அப்பத்தா இந்த பக்கமாக போனார் என்று சொன்னதைக் கேட்டு, சக்தி அப்பத்தான் இந்த பக்கமாதான் போனாராம் என்று சொல்ல, சக்தியும் ஜனனியும் பைக்கில் அப்பத்தாவை தேடிக் கொண்டிருக்கின்றனர்

அப்போது தெருவில் யாரோ அடிபட்டு இருக்கின்றனர். கூட்டம் கூடி இருக்கும் இடத்தில் சக்தியும் ஜனனியும் பைக்கை நிறுத்திவிட்டு இறங்குகின்றனர். இத்துடன் இன்றைய பிரமோ முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் மண்டபத்தை விட்டு வெளியேறிய அப்பத்தாவிற்கு ஏதேனும் ஆகி இருக்குமா? அல்லது அப்பத்தாவை குணசேகரன் ஆள் வைத்து ஏதாவது செய்து விட்டாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது..
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே












Click it and Unblock the Notifications