எதிர்நீச்சல்: கண் முழித்து எழுந்து உட்கார்ந்த அப்பத்தா.. தெரிய வந்த உண்மை.. அடிக்க பாய்ந்த குணசேகரன்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் கோமாவில் இருந்த அப்பத்தா கண் முழித்து எழுந்து உட்கார்ந்து இருக்கிறார். அப்பத்தாவிடம் கோபத்தின் உச்சத்தில் குணசேகரன் கேட்கும் கேள்விகள், ரேணுகா கொடுத்த பதிலடி குறித்து விரிவாக பார்க்கலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று யூகிக்க முடியாத கதைகளும் தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஜீவானந்தத்தை கொலை செய்வதற்காக குணசேகரன் ஆள் செட் பண்ணி இருக்கும் நிலையில் ஜீவானந்தம் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா? அல்லது கதிருக்கு ஏதாவது நடக்குமா? என்று பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
அதே இடத்தில் ஜீவானந்தத்தை தேடி ஜனனியும் சென்று கொண்டிருக்கிறார். நேற்றைய எபிசோடில் கதிர் நிற்பதை கவனிக்காமல் ஜனனி கதிரை கடந்து போய்க் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் ஜீவானந்தம் வீட்டை ஜனனியும் நெருங்கி இருக்கிறார். அதுபோல ஜீவானந்தத்தை கொலை செய்வதற்காக கதிர் மற்றும் வளவனும் நெருங்கி இருக்கிறார். இந்த நிலையில் இதுவெல்லாம் தெரியாத ஜீவானந்தமும் எளிமையாக தன்னுடைய வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருக்கிறார்.
இப்படியான சூழ்நிலையில் இன்றைய எபிசோடுக்கான பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத பல ட்விஸ்ட்களும் பரபரப்பும் இருக்கிறது. அதாவது இதுவரைக்கும் கோபமாக இருந்த அப்பத்தா கண் முழித்து இன்று ஹாலில் இருக்கும் சோபாவில் அமர்ந்திருக்கிறார். சுற்றி விசாலாட்சி முதற்கொண்டு வீட்டில் இருக்கும் மற்ற மருமகள்களும் இருக்கின்றனர்.

இதை தெரிந்து கொண்ட குணசேகரன் கீழே இருந்து மாடிக்கு ஓடி வருகிறார். அப்போது நந்தினி மாடியில் இருந்து ஈஸ்வரி அக்கா என்று ஈஸ்வரியை கூப்பிட்டு, அப்பத்தா கண்ணு முழிச்சிட்டாங்க வாங்க என்று கூப்பிடுகிறார். அப்போது அப்பத்தாவிடம் குணசேகரன் மகராசி மாதிரி நான் மதுரையில் வாழ்ந்தேன். என்ன பித்துக்குளி மாதிரி அலைய விட்டுட்டுடேலா பைத்தியம் பிடிச்ச மாதிரி. பாத்தியா ஒத்த கை விளங்காமல் போயிடுச்சு. எல்லாம் உன்னால என்று கத்திகிறார்.

அதற்கு ரேணுகா எல்லாம் பொய் சொல்லிகிட்டு அலைகிறார் என்று சொல்ல, குணசேகரன் என்னது பொய்யா? என்று ரேணுகாவை அடிக்க பாய்கிறார். அதைப் பார்த்து நந்தினியும், ரேணுகாவும் குணசேகரனை முறைத்துக் கொண்டிருக்கையில் குணசேகரனை கரிகாலன் பிடித்துக் கொள்கிறார். இப்படியாக இருக்கும் நிலையில் இன்று என்ன நடக்கப் போகிறது என்று பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications