ஜீவானந்தத்தை பற்றி ரகசியத்தை கூறிய அப்பத்தா.. அதிர்ச்சியில் குணசேகரன்.. ஜனனியின் அதிரடி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் கோமாவில் இருந்த அப்பத்தா முதல் முறையாக வாய் திறந்து பேச தொடங்கி இருக்கிறார்.

அந்த வகையில் ஜீவானந்தத்தை பற்றி சொன்ன வார்த்தை கேட்டு குணசேகரன் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத அடுத்தடுத்த மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் சொல்லப்படுவது போன்று எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று சொல்வது எதிர்நீச்சல் சீரியலில் தான் சாத்தியமாகி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் இத்தனை மாதங்களாக கோமாவில் இருந்த அப்பத்தா முதல் முறையாக வாயைத் திறந்து பேசி இருக்கிறார்.

அதே நேரத்தில் ஜீவானந்தத்தை கொலை செய்வதற்காக கதிர் மற்றும் வளவன் குரூப் வீட்டை சுத்து போட்டு இருக்கின்றனர். அப்போது ஜீவானந்தத்தை சந்திக்க வேண்டும் என்பதற்காக ஜனனியும் ஜீவானந்தம் வீட்டிற்கு அருகில் வந்திருக்கிறார். இந்த நிலையில் வீட்டில் அப்பத்தாவை பேசு பேசு என்று பேசுவிடாமல் கத்திக் கொண்டிருந்த குணசேகரனுக்கு கடைசியில் அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.
அதாவது நேற்றைய எபிசோடில் நந்தினி மற்றும் ரேணுகா எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் குணசேகரன் அப்பதாவை கடுமையான வார்த்தைகளால் திட்டிக்கொண்டே இருந்தார். அதுவும் ஹை லெவலில் அவருடைய சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மட்டுமல்லாமல் சீரியல் பார்த்தவர்களும் காதை பொத்திக் கொள்ள வேண்டிய நிலைமை இருந்தது. இந்த நிலையில் வீட்டிற்கு வந்த ஆடிட்டர் மற்றும் வக்கீல் அப்பத்தாவிடம் பேசி இருந்தனர்.

அப்போது அப்பா எதுவும் நினைவு இல்லாதது போன்று முழித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் இன்றைய எபிசோடுகான பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜீவானந்தத்துக்கு உனக்கும் என்ன சம்பந்தம் பேசு என்று குணசேகரன் திட்ட, அதற்கு அப்பத்தா, "ஜீவானந்தம் செஞ்சது எல்லாம் எனக்காகத்தான்" என்று அதிர்ச்சி கொடுக்கிறார். அதைக் கேட்டு குணசேகரன் மட்டுமல்லாமல் வீட்டிலிருந்து அனைவருமே அதிர்ச்சி அடைகின்றனர்.
அதே நேரத்தில் ஜீவானந்தம் தன்னுடைய குழந்தை வெண்பாவோடு ஜாலியாக வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருக்கும் போது வீட்டிற்கு வெளியே நின்று வளவனின் ஆட்கள் இதுதான் ஜீவானந்தம் வீடு என்று சொல்ல அனைவரும் ஆக்ரோஷமாக வீட்டிற்குள் செல்ல இருக்கின்றனர். இப்படியாக பிரமோ முடிவு அடைந்திருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று அனைவரும் ஆர்வமாக இருக்கின்றனர்.

-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications