எதிர்நீச்சல்: குணசேகரன் ரகசியத்தை கேட்டு அதிர்ச்சியில் கதிர்.. யாருக்கும் தெரியாமல் ஜனனி செய்த வேலை
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தத்திடமிருந்து சொத்துக்களை நாங்கள் மீட்டுக் கொண்டு வருவோம் என்று ஜனனி குணசேகரனிடம் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் குணசேகரன் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரிடமும் தான் கோயம்புத்தூர் போக போவதாக சொல்லிவிட்டு சென்னைக்கு ரகசியமாக ஒரு நபரை சந்திக்கப் போகிறார்.
அதைத்தொடர்ந்து ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்கான எதிர்நீச்சல் சீரியலில் புரோமோ வந்திருக்கிறது. அதில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த திடீர் திருப்பங்கள் மற்றும் கதையின் வேகத்தால் சீரியலுக்கான விறுவிறுப்பு கூடி இருக்கிறது. இந்த நிலையில் காசிக்கு போயிருந்த விசாலாட்சி மீண்டும் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் மருத்துவமனையில் ஒரு கை மற்றும் கால் செயல்படாமல் இருந்த குணசேகரன் வீட்டிற்கு டிஸ்டார்ஜ் ஆகி வந்திருக்கிறார்.
இந்த நிலையில் சொத்தை எப்படியாவது தன் வீட்டு மருமகள்கள் தான் வாங்கி வர வேண்டும் என்று ஜீவானந்தம் சொல்ல, அதற்கு ரேணுகா ஏன் இந்த வீட்டில் இத்தனை ஆம்பளைங்க மீசையை முறுக்கிக்கிட்டு இருக்கீங்களா? உங்களால் முடியாததை எங்களிடம் கேட்டுட்டு இருக்கீங்களா? ஆரம்பத்துல நீங்க கெஞ்சற மாதிரி கேட்டுட்டு இப்ப மிரட்டுற மாதிரி பேசுறீங்க என்று சண்டை பிடிக்க அதற்கு ஞானம் ரேணுகாவை அடிக்க பாய்ந்து போகிறார்.

இதைப் பார்த்து ஜனனி நாம் ஜீவானந்தத்திடமிருந்து சொத்தை வாங்கிக் கொண்டு வருவோம் என்று சொல்ல, அதைக் கேட்டு குணசேகரனும் நீங்க கண்டிப்பா வாங்கிட்டு தான் வர வேண்டும் இது உங்களுக்கான கடமை என்று செண்டிமெண்டாக பேசிக்கொண்டு போக அதைத் தொடர்ந்து விசாலாட்சி ஜனனியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார். இதனால் ஜனனியும் அடுத்த கட்ட வேலையில் இறங்கி இருக்கிறார்.
இப்படியான நிலையில் இன்றைய எபிசோடுக்கான பிரமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஜனனி சக்தியோடு சென்று பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை சந்திக்கிறார். அவரிடம் ஜீவானந்தத்தோட பேக்ரவுண்ட் பற்றி நான் தெரிந்து கொள்ள வேண்டும். ஜீவானந்தத்தை பற்றி முழுசா தெரிஞ்சாதான் நான் தெளிவா பிளான் பண்ண முடியும் என்று சொல்ல, அந்த பெண் போலீஸ் அவரிடம் சில விஷயங்களை ரகசியமாக சொல்கிறார்.

அதைத் தொடர்ந்து வீட்டில் எல்லோரிடமும் ஒரு டாக்டரை சந்திப்பதற்காக கோயம்புத்தூருக்கு போகிறேன் என்று கதிரோடு காரில் போய்க்கொண்டிருக்கும் குணசேகரன் "அந்த களவாணி பையன் என் கண்ணுக்குள்ள கையை விட்டு ஆட்டுறான். அவனுக்கு நான் யாருன்னு காட்ட வேண்டும். நம்ம கிட்ட ஒரு ஆளு இருக்கான். அவனை பாக்குறதுக்காக தான் நம்ம இப்ப சென்னைக்கு போறோம்" என்று சொல்கிறார். இத்துடன் ப்ரோமோ முடிவடைந்திருக்கும் நிலையில இன்றைய எபிசோடுக்கான ஆர்வம் அதிகரித்து இருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications