நந்தினிக்காக குணசேகரனை எதிர்த்து கேள்வி கேட்கும் கதிர்.. ஜனனி பற்றி தெரிய வந்த உண்மை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 22ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் ஜனனி பற்றிய உண்மைகளை கதிர் குணசேகரனிடம் சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த கதிரிடம் நந்தினி குணசேகரன் பேசியதை பற்றி சொல்ல அனைவர் முன்பும் குணசேகரனை கதிர் கோபமாக கேள்வி கேட்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று யோசிக்க முடியாமல் இருக்கும் நிலையில் நேற்றைய எபிசோடில் எதிர்பார்க்காத வகையில் கதிர் வளவனிடம் கோபத்தை காட்டி பிரச்சனையை பெரிது பண்ணி இருந்தார். அதே நேரத்தில் வளவனால் கதிருக்கு ஆபத்து வருமா என்று நினைத்திருந்த நிலையில் அப்படி எதுவும் நடக்கவில்லை.

அதே நேரத்தில் ஜனனிக்கு ஜீவானந்தம் பற்றிய உண்மைகள் தெரிய வந்திருக்கும் நிலையில் ஜீவானந்தம் நீ என்னை தெரிந்து கொண்டது முக்கால்வாசி தான். ஊருக்கு போய் பாரு அங்கே உனக்கு எல்லாம் தெரியவரும் என்று சொல்லி அங்கிருந்து அனுப்பி வைக்கிறார். இனி வெண்பா நிலைமை என்று ஜனனி கேட்க, நானே என் பொண்ணை வளர்த்துக் கொள்கிறேன் என்று ஜனனி கூறி இருக்கிறார்.
அதுபோல குணசேகரன் ஜீவானந்தத்திற்கு எதிராக அப்பத்தா போலீஸ் கம்ப்ளைன்ட் பேப்பரில் கையெழுத்து போட்டுக் கொடுத்ததும் அப்பத்தாவை தனி ரூமில் வைத்து பூட்டி வைத்திருக்க, ரேணுகா கேள்வி கேட்கும் போதும் ரேணுகாவை அவமானப்படுத்துகிறார். மேலும் குணசேகரனை பற்றி இனி நீங்கள் எல்லோரும் தெரிந்து கொள்ள போறீங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் நல்ல செய்தி எனக்கு வரும் என்று காத்திருக்கிறார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கதிர் குணசேகரனுக்கு போன் போட்டு ஜீவானந்தத்தை கொலை செய்ய முடியவில்லை. கடைசி நேரத்தில் ஜனனி வந்து எல்லாவற்றையும் கெடுத்துட்டா என்று சொல்ல ஜனனி அங்க வந்தாளா? அவ எப்படி அங்க வந்தா என்று குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார்.
அதைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த கதிரிடம் நந்தினி நீ பிணமா கூட வருவ என்று உன் அண்ணன் சொன்னாரு. நீ என் மேல எப்படி பாசம் வைத்திருக்கிறாய் என்று எனக்கு தெரியாது. ஆனா உன்ன அந்த வார்த்தை சொன்னதை என்னால தாங்கிக்க முடியல என்று கதறி அழ, அதைக் கேட்டு கோபமான கதிர் குணசேகரிடம் என்ன வார்த்தை சொன்னீங்க? யாரை பார்த்து என்ன வார்த்தை சொன்னீங்க? என்று கத்தி கேள்வி கேட்கிறார்.

இப்படியாக பிரமோ முடிவு அடைந்து இருக்கிறது. அதே நேரத்தில் இது உண்மைதானா? அல்லது கதிர் நடிக்கிறாரா? என்று சந்தேகமும் வருகிறது. இன்றைய எபிசோடில் இதற்கான விடை கிடைக்கும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications