எதிர்நீச்சல்: குணசேகரன் செய்த செயலை கண்டுபிடித்த ஜனனி.. அப்பத்தா கொடுத்த அதிர்ச்சி.. செம டுவிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 24 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் ஜீவானந்தம் மனைவியை கொன்றது குணசேகரனாகத்தான் இருக்க வேண்டும் என்று ஜனனி கண்டுபிடிக்கிறார்.

Ethirneechal Serial 2023 August 24th promo full update

அதே நேரத்தில் அப்பத்தாவை வைத்து குணசேகரன் போடும் புது நாடகத்தால் அவருக்கு பிரச்சனை வர இருக்கிறது.

இந்த நிலையில் இன்றைய எபிசோட்டுக்கான ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. அதாவது நேற்றைய எபிசோடில் கதிர் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே கடைசி நேரத்தில் குணசேகரன் பக்கம் சாய்ந்து விட்டார். ஆரம்பத்தில் நந்தினி சொன்னதை கேட்டு கோபமாகி குணசேகரனை கேள்வி கேட்பது போன்று நடித்து கடைசியில் நீங்கள் நந்தினியை அடிக்க கை ஓங்கி இருக்கக் கூடாது.. கழுத்தை நெறித்துக் கொன்னு போட்டு இருக்கணும் என்று அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

அதே நேரத்தில் ஜீவானந்தத்தை பற்றியும் அவருடைய மனைவி இறந்தது பற்றியும் ஜனனி வீட்டில் இருக்கும் மருமகளிடம் சொல்ல ஈஸ்வரி ஜீவானந்தத்தை நினைத்து கண்கலங்கி அழுது இருந்தார். அது குறித்து நந்தினி கேள்வி கேட்கும் போது கூட அது குறித்து மலுப்பலாக ஈஸ்வரி பேசியிருந்தார்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடு ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் அப்பத்தா மீண்டும் கட்டிலில் படுத்து இருப்பது போன்று காட்டப்படுகிறது. அதைத்தொடர்ந்து கிச்சனில் இருக்கும் ஜனனி அங்கிருக்கும் மருமகள்களிடம் இவங்கதான் ஜீவானந்தம் மனைவியை கொன்னு இருப்பாங்கன்னு எனக்கு தோணுது என்று சொல்ல, அதற்கு நந்தினி எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு என்று சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து வீட்டு வாசலில் நின்றபடி குணசேகரன் வீட்டில் இத்தனை பேர் இருந்தும் அந்த கிழவி காணாம போயிட்டானா என்ன அர்த்தம்? என்று கேள்வி கேட்க, அதற்கு ரேணுகா உங்க தம்பியையும் தான் காணும். நீங்க சம்பவம் பண்ண அனுப்பிவிட்டு இங்குட்டு நாடகம் போட்டுக்கிட்டு திரிகிறீர்களா? என்று கேள்வி கேட்க, அதற்கு ஜனனி நீங்க அப்பத்தாவை என்ன பண்ணுனீங்க என்று கேள்வி கேட்கிறார். அதற்கு குணசேகரன் பதில் சொல்லாமல் முறைத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில குணசேகரன் ஜீவானந்தத்திற்கு எதிராக அப்பத்தாவை கேஸ் கொடுக்க வைத்துவிட்டு எதற்காக கடத்தி வைத்திருக்கிறார்? அதுவும் மீண்டும் கட்டிலில் படுத்த படுக்கையாக அப்பத்தா இருக்கிறார். அப்படி என்றால் மீண்டும் கோமாவுக்கு போய் விட்டாரா? என்று கேள்விகள் எழுகிறது. அதே நேரத்தில் நேற்றைய எபிசோடில் கடைசியில் கூட ஜனனி அப்பத்தாவை பார்க்க வரும்போது குணசேகரன் தான் அறையின் வாசலில் வாட்ச்மேன் போல உட்கார்ந்து இருந்தார்.

அதனால் அவர்தான் கடத்தி வைத்து விட்டு புது நாடகம் போடுகிறார். ஆனால் அது வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தெரிய வந்துவிட்டது. இனி ஜீவானந்தத்தின் சார்பாக இவர்கள் குணசேகரனை எதிர்த்து போராட இருக்கிறார்களா? அல்லது ஜீவானந்தத்திடம் குணசேகரன் பற்றி சொல்லப் போகிறார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+