ஜீவானந்ததோடு சேர்ந்து குணசேகரனுக்கு ஆப்பு வைத்த அப்பத்தா.. ஜனனி செய்த ஹைலைட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.

அதில் அப்பத்தாவை காணாமல் போய்விட்டதாக கூறிவந்த குணசேகரனுக்கு கடைசியில் அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.

Ethirneechal Serial 2023 August 25th promo full update

ஜீவானந்தம் முன்பு குணசேகரனை அப்பத்தாவும் ஜனனியும் அவமானப்படுத்தி இருக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் ஆட்டத்தை அடக்குவதற்காக ஜனனிக்கு பக்க பலமாக அப்பத்தா மீண்டும் கெத்தாக களம் இறங்கி இருக்கிறார். ஆரம்பத்தில் வீட்டை விட்டு கிளம்பிய ஜனனியை அப்பத்தா வீட்டிற்குள் மீண்டும் கூட்டிட்டு வந்த போது கூட இந்த அளவிற்கு குணசேகரனை எதிர்க்காமல் இருந்த நிலையில் தற்போது குணசேகரன் பற்றி பல உண்மைகள் ஜனனிக்கு தெரிய வந்திருக்கிறது.

Ethirneechal Serial 2023 August 25th promo full update

அதுவும் ஜீவானந்தத்தை ஆரம்பத்தில் கெட்டவர் என்று நம்பிக் கொண்டிருந்த ஜனனிக்கு இப்போது அவரைப் பற்றியும் அவர் அப்பத்தாவுக்காக தான் எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறார் என்பது பற்றியும் தெரிய வந்திருக்கிறது. அதே நேரத்தில் இத்தனை நாட்களாக கோமாவில் இருந்த அப்பத்தா இப்போது மீண்டும் பழைய நிலையில் திரும்பி இருக்கிறார். இது கூட சந்தேக பட தான் வைக்கிறது.

ஒருவேளை ஜனனியும் மற்ற மருமகள்களும் தங்களுடைய சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதற்காக அப்பத்தா கோமாவில் இருந்தது போன்று நடித்துக் கொண்டிருந்தாரா? என்று கேள்விகளும் எழுகிறது. அதே நேரத்தில் நேற்றைய எபிசோடில் அறையில் பூட்டி வைத்திருந்த அப்பத்தாவை காணாமல் குணசேகரன் கதறி அங்கிருந்த அனைவரையும் திட்டி இருந்தார். அப்போது அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு குணசேகரன் மீது சந்தேகம் வந்தது.

Ethirneechal Serial 2023 August 25th promo full update

இந்த நிலையில் இன்றைய எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் சற்றும் எதிர்பார்க்காத வகையில் நீதிபதியின் முன்பு பட்டம்மாள் அமர்ந்திருக்க, பக்கத்தில் ஜனனி நின்று கொண்டிருக்கிறார். அங்கே ஜீவானந்தம் காரில் வந்து இறங்குகிறார். அதைத் தொடர்ந்து வக்கீலோடு வரும் குணசேகரனுக்கு அப்பத்தா அதிர்ச்சி கொடுக்கிறார். அதாவது நீதிபதி ஜீவானந்தம் பெயர் அடிக்கடி அடிபடுகிறது என்று கேட்க, அதற்கு பட்டம்மாள் ஜீவானந்தம் ரொம்பவே நல்லவர் என்று சொல்ல குணசேகரன் கோபப்படுகிறார்.

அப்போது குணசேகரன் "என்னையே பழி வாங்குறியா நீ?, நான் அழிஞ்சாலும் அழிவேன். ஆனா அதுக்கு முன்னாடி உங்க எல்லாத்தையும் அழிச்சிட்டு தான் நான் அழிவேன்" என்று சொல்ல, அதற்கு பட்டம்மாள் அப்பத்தா நிறுத்து குணசேகரா என்று கெத்தாக பேசுகிறார் இப்படியாக பிரமோ வெளியாகி இருக்கும் நிலையில் இந்த ஃபயர் தான் நாங்கள் எதிர்பார்த்தது என்று ரசிகர்கள் கமெண்ட்களை கொட்டி வருகிறார்கள்.

Ethirneechal Serial 2023 August 25th promo full update

அதே நேரத்தில் இப்போது எதிர்நீச்சல் சீரியல் எபிசோடு டிவியில் வெளியாகி சில மணி நேரத்திற்குள் ப்ரோமோ யூடியூபில் வந்து விடுவது அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதோடு ஜீவானந்தம் மனைவியை கொன்றது குணசேகரன் தான் என்பது ஜனனிக்கு தெரிய வந்திருக்கும் நிலையில், இது குணசேகர் ஜீவானந்தத்திற்கு தெரிய வரும்போது என்ன மாதிரி பிரச்சனை வரும் என்று எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+