ஜீவானந்தம் பற்றி அடுத்தடுத்து ஜனனிக்கு தெரிய வந்த உண்மை.. ரேணுகாவுக்கு கிடைத்த திடீர் “வாய்ப்பு”
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் யார் என்பதை பற்றி தெரிந்து கொள்வதற்காக ஜனனி போலீஸ் ஆபீசர் ஒருவரிடம் விசாரணை செய்து கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் குணசேகரன் ஜீவானந்தத்தை பழி வாங்க வேண்டும் என்று தன்னுடைய தம்பிமார்களிடமும் பொய் சொல்லி விட்டு சென்னைக்கு ஒரு நபரை சந்திக்க போகிறார்.
இந்த நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத திருப்பங்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்றைய எபிசோடில் குணசேகரன் தனக்கு ஒரு நண்பர் ஃபோன் பண்ணுவதாகவும் அவருடைய ஊரில் தன்னுடைய பிரச்சனைக்கு ஒரு நபர் வைத்தியம் பார்க்கிறார். அவரிடம் போய் வைத்தியம் பார்த்து விட்டு வருகிறேன் என்று தன்னுடைய அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
அப்போது நந்தினி அந்த டாக்டருடைய பெயரை சொல்லுங்க மாமா என்று கேட்க, அதற்கு குணசேகரன் எதுக்குமா நீ அந்த டாக்டருக்கு போன் போட்டு என்னுடைய இன்னொரு கையையும் விளங்காமல் போக வைக்கிறதுக்கா? என்று திட்ட, இல்ல மாமா அந்த டாக்டருடைய பெயர் மற்றும் போன் நம்பரை போட்டு செக் பண்ணி பார்த்தால் அவருக்கு எவ்வளவு ரேட்டிங் இருக்கிறது என்று தெரியும் என்று சொல்ல, ஒன்னும் வேண்டாம் நானே இப்போ வேட்டி கூட கட்ட முடியாம கை விளங்காமல் இருக்கேன் என்று திட்டிக் கொண்டிருக்கிறார்.
பிறகு கதிரை மட்டும் கூட்டிக்கொண்டு கோயம்புத்தூருக்கு போவதாக எல்லோரிடமும் பேசிக்கொண்டு காரியில் போய்க்கொண்டிருக்க அதே நேரத்தில் ஜனனியும் சக்தியும் பைக்கில் சென்று ஒரு நபரை சந்திக்கின்றனர். அவர் பெண் போலீஸ் அவரிடம் ஜீவானந்தத்தை பற்றி விசாரிக்க வேண்டும் என்று ஜனனி சொல்ல, அவர், அவன் ஒரு திருட்டு பையன் அவன் மேல ஏற்கனவே அன்அபிசியல் ஆக பல கம்ப்ளைன்ட் இருக்கு ஆனா யாரும் அபிசியலாக கம்ப்ளைன்ட் கொடுக்கல என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

மேலும் இப்ப கூட ஒரு நபரிடம் தன்னுடைய ஆட்களோடு சென்று அவருடைய குழந்தைகளை வைத்து மிரட்டி ஆயிரம் ஏக்கர் சொத்தை எழுதி வாங்கிட்டானாம். அவன் ரொம்ப மோசம். ஒரு இயக்கம்னு வச்சுட்டு பணக்காரங்க கிட்ட மிரட்டி சொத்தை எழுதி வாங்கறது தான் குறிக்கோளா வச்சிருக்கான் என்று சொல்லிக் கொண்டிருக்க, அந்த ஏமாற்றப்பட்ட நபரை நான் சந்திக்க வேண்டும் என்று ஜனனி சொல்ல அதற்கான ஏற்பாடுகளை அந்த பெண் போலீஸ் செய்து கொடுக்கிறார்.
அதே நேரத்தில் காரில் போய்க்கொண்டிருக்கும் கதிர் குணசேகரனிடம் எந்த பக்கமாக போக வேண்டும் என்று கேட்க, சென்னைக்கு போற ரோட்டில் போ நாம சென்னையில் ஒரு ஆளை பாக்க போறோம். என்ன ஏமாற்றி என் சொத்த ஏமாத்துன அந்த களவாணி பயலை நான் சும்மா விடமாட்டேன். நான் என் வீட்டு மருமகள்களை வைத்து கேஸ் போட்டு கதையை சாதிப்பேன்னு நினைச்சுட்டு இருக்கீங்களா? இல்ல, நான் செய்யப் போற கதயே வேறு என்று சொல்ல கதிர் அதிர்ச்சி ஆகிறார். பிறகு சென்னையை நோக்கி காரில் சென்று கொண்டிருக்கின்றனர்.
ஜனனி ஜீவானந்தத்தால் ஏமாற்றப்பட்ட நபருக்கு போன் செய்து தானும் ஏமாற்றப்பட்டதை சொல்ல, அந்த நபர் சந்திக்க வருவதாக சொல்கிறார். இரண்டு மணி நேரத்தில் தான் அங்கே வந்து விடுவதாக சொல்ல அந்த போலீஸ் ஆபீஸர் உடன் ஜனனியும் சக்தியும் காத்திருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து நந்தினியும் ரேணுகாவும் ஐஸ்வர்யா படிக்கும் ஸ்கூலுக்கு ஐஸ்வர்யாவை தேடி வருகின்றனர். அப்போது ஒவ்வொரு கிளாஸ் ஆக தேடிக் கொண்டிருக்கும்போது எங்கேயும் இல்லாமல் இருக்கின்றனர். இன்னைக்கு அவளுக்கு ஏதோ டான்ஸ் பிராக்டிஸ் இருக்கு என்றும் சொன்னாளே என்று பேசிக் கொண்டிருக்க ஒரு அறையில் ஒரு டீச்சர் பசங்க சிலரை வைத்துக்கொண்டு இன்னொரு நபரிடம் போன்ல பேசிக் கொண்டிருக்கிறார்.
என்ன ஆச்சு என்று ரேணுகாவும், நந்தினியும் விசாரிக்க, ஒரு டான்ஸ் டீச்சர் வாரேன் என்று சொன்னாங்க அதை நம்பி நானும் இந்த குழந்தைகளையும் இருக்க சொல்லி விட்டேன். ஆனால் கடைசி நேரத்தில் அவர்கள் வரவில்லை என்று சொல்றாங்க என்று சொல்ல ரேணுகா நான் வேணும் என்றால் ட்ரை பண்ணி பார்க்கவா? என்று கேட்க, நந்தினியும் ஐஸ்வர்யாவும் அதிர்ச்சடைந்து என்ன சொல்றீங்க என்று கேட்க, நான் சின்ன வயதில் டான்ஸ் பிராக்டிஸ் பண்ணி இருக்கிறேன்.

அப்புறம் ஒரு வருஷம் டான்ஸ் கிளாஸ் சொல்லிக்கொடுத்தேன் என்று சொல்ல, டீச்சர் இன்னைக்கே நீங்க டான்ஸ் ஆரம்பிங்க என்று சொல்ல ரேணுகா டான்ஸ் கிளாஸ் தொடங்குகிறார். அதற்கு நந்தினி பாராட்டிக் கொண்டிருக்கிறார். இப்படியாக எபிசோடு முடிவடை
ந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications