ஈஸ்வரியிடம் ஜீவானந்தம் சொன்ன பதில்.. கரிகாலனால் கதறி அழுத ஆதிரை..எதிர்நீச்சலில் எதிர்பாராத டுவிஸ்ட்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜூலை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் பல எதிர்பாராத திருப்பங்களும் டுவிஸ்ட்களும் இருக்கிறது. அந்த வகையில் ஜீவானந்தத்திற்கு ஈஸ்வரி போன் பண்ணி பேச ஜீவானந்தம் எதிர்பாராத வார்த்தையை சொல்கிறார்.
அதுபோல நீ எனக்கு வேண்டாம் என்று சொன்ன ஆதிரையிடம் கரிகாலன் தன்னுடைய காதலை வெளிப்படுத்தி அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய எபிசோடில் யாரும் எதிர்பார்க்காத பல ரகசியங்கள், உணர்வுப்பூர்வமான திருப்பங்களும் வர இருக்கிறது. இதுவரைக்கும் ஜீவானந்தன் யார் என்ற எதிர்பார்ப்பும் அதே நேரத்தில் பல கேள்விகளும் அனைவர் மனதிற்கும் இருந்த நிலையில் இன்றைய ப்ரோமோவில் ஜீவானந்தம் ஈஸ்வரியிடம் பேசிய வார்த்தையை வைத்து பல கேள்விகளுக்கு விடை கிடைத்திருக்கிறது.
அந்த வகையில் இன்று வெளியான ப்ரோமோவில் அருண் தன்னை வேண்டாம் என்று சொல்லிவிட்ட காரணத்தால் ஆதிரை எவ்வளவோ அருண் வீட்டில் கதறி அழுது பார்த்தும் கடைசியில் அவமானப்பட்டு வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில் இன்று குணசேகரன் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது ஏற்கனவே கரிகாலன் மற்றும் ஜான்சிராணி இடம் என்னுடைய முடிவு என்ன என்பதை இன்று மாலைக்குள் சொல்லுகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் கரிகாலன் உன்னுடைய பதில் என்ன என்று கேட்கிறார்.

வீட்டிற்குள் வந்த ஆதிரை தன்னுடைய கையில் இருந்த பேக்கை தூக்கி தூர வீசி தன்னுடைய கோபத்தை காட்ட, அதைத் தொடர்ந்து ஈஸ்வரி ஜீவானந்தத்திற்கு போன் போட்டு நான் குணசேகரன் உடைய மனைவி ஈஸ்வரி பேசுகிறேன் என்று சொல்ல, அதற்கு நான் இப்ப கூட பேசுறது குணசேகரனின் மனைவி என்பதற்காக இல்லை. ஈஸ்வரி என்பதற்காக தான் என்று சொல்கிறார்.
இந்த குரலை கேட்டதும் ஈஸ்வரியும் அதிர்ச்சியோடு யோசித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஆதிரை கரிகாலனிடம் எனக்கு நீ வேண்டாம் என்று சொல்ல, "இந்த வீட்டில் என்னை எல்லாரும் கிறுக்கு பையன்னு நினைக்கிறாங்க. இந்த கிறுக்கு பயலுக்குள்ளேயும் ஒரு மனசு இருக்கு ஆதிரை" என்று அழ, ஆதிரையும் அழ, கரிகாலன் பேசுவதை கேட்டு ஜான்சி ராணியும் மௌனமாக தலையில் கை வைத்து அழுது கொண்டிருக்கிறார்.

கரிகாலன் சொன்ன வார்த்தையை கேட்டு விசாலாட்சி ஆதிரையை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்படியாக உணர்வுபூர்வமான ஒரு ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில் இன்றைய எபிசோட்டில் ஜீவானந்தத்திற்க்கும், ஈஸ்வரிக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பது வெளியாக இருக்கும் அதே நேரத்தில் கரிகாலன் தன்னுடைய காதலை வெளிப்பாடாக வெளிக்காட்டியதை வைத்து இனி கரிகாலனுக்கு ஆதரவாக விசாலாட்சி இருப்பாரா? என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications