எதிர்நீச்சல்: கால் உடைந்த கதிர்.. விரக்தியில் நந்தினி எடுத்த முடிவு.. பதறிய குணசேகரன்.. செம டுவிஸ்ட்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் டிசம்பர் 13-ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் கதிரை அடியாள்கள் அடித்ததால் கால் உடைந்து மருத்துவமனையில் மயக்க நிலையில் இருக்கிறார்.
அதே நேரத்தில் கதிரால் மனம் உடைந்த நந்தினி யாரும் எதிர்பார்க்காத வார்த்தையை சொல்கிறார். இந்த தகவல்கள் குணசேகரனுக்கு போனதும் குணசேகரன் பதறிப் போயிருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சலில் யாரும் எதிர்பார்க்காத பல எதிர்பாராத மாற்றங்கள் இப்போது தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே சில மாதங்களாக எதிர்நீச்சல் சீரியல் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கவரவில்லை என்று பலரும் கருத்து கூறி வந்தனர். காரணம் கதை ஒரே இடத்திற்குள் பயணித்து வந்தது தான்..
இந்த நிலையில் இப்போது மீண்டும் சீரியல் விறுவிறுப்பு ஏற்பட தொடங்கி இருக்கிறது. மீண்டும் பழைய பல கதைகள் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. அதில் ஏற்கனவே ஜனனிக்கு கம்பெனி தொடங்குவதற்கு பிரச்சனை கொடுத்த கிருஷ்ணசுவாமி மெய்யப்பன் மீண்டும் வந்து இருக்கிறார். அதுவும் குணசேகரன் வீட்டிற்கு வந்து குணசேகரன் இடமே சக்தி மற்றும் ஜனனியை பழிவாங்குவதற்காக உதவி கேட்டு இருக்கிறார்.

அதற்கு குணசேகரனும் தன்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன் என்று சக்தி மற்றும் ஜனனியை மிரட்டி இருக்கிறார். இந்த நிலையில் ஜனனி இனி கம்பெனியை தொடங்க முடியுமா என்ற எதிர்பார்ப்பும் கேள்விகளும் இருக்கிறது. அதே நேரத்தில் ரசிகர்கள் பல மாதங்களாகவே ஆசைப்பட்டு கொண்டு இருந்த மாதிரியே கதிரை சில அடியாள்கள் வந்து அடித்து துவம்சம் செய்து இருக்கின்றனர்.
நந்தினி மற்றும் தாராவுடன் ஸ்கூலுக்கு போயிருந்த கதிர் அங்கு ஹெட் மாஸ்டரிடம் மரியாதை இல்லாமல் பேசிவிட்டு தான் என்ற அகங்காரத்தோடு வெளியே வந்த கதிரை சில அடியாள்கள் தாக்கியது ரசிகர்களின் மத்தியில் பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. அதுவும் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இப்பொழுது கதிர் உடைய கால் உடைபட்டு மருத்துவமனையில் மயக்க நிலையில் இருக்கிறார்.
அவரிடம் தற்போது வெளியான ப்ரோமோவில் போலீஸ் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரத்தில் நந்தினி நான் அவருடைய உயிரை காப்பாற்றி என்னுடைய கடமையை செஞ்சிட்டேன். இனிமே நீங்க எல்லாரும் பார்த்துக்குங்க என்று ஞானம், விசாலாட்சி இடம் கூறுகிறார்.

அதைத் தொடர்ந்து ஞானம் குணசேகரனுக்கு போன் போட்டு கதிரை அடிச்சு போட்டுட்டாங்க அண்ணே என்று சொல்ல, என்னது கதிரை அடிச்சிட்டாங்களா என்று குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார். இந்த நிலையில் கதிரை யார் அடித்தார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கிறது.

ஏற்கனவே கதிர் கடந்த முறையை போலவே இந்த முறையும் தாராவோடு ஸ்கூலுக்கு போவதற்கு முன்பு ஒரு பெண்ணிடம் போனில் கதிர் கடலை போட்டுக் கொண்டிருந்தார். அதனால் இது அந்தப் பெண் தரப்பினர் செய்த சதியா அல்லது வழக்கம் போல கௌதம் ஆள் வைத்து கதிரை அடித்து துவம்சம் செய்திருக்கிறாரா? என்ற கேள்விகளும் இருக்கிறது. ஆனாலும் கடைசியில் என்ன நடக்கப் போகிறது என்பதை இன்றைய எபிசொட்டில் பார்க்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications