எதிர்நீச்சலில் பெரிய அதிர்ச்சி... தர்ஷினியை கடத்தியது இவரா? ஜீவானந்தம் உடைத்த உண்மை
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பிப்ரவரி ஆறாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தர்ஷினியை கடத்தியது யார் என்பது பற்றி ஜீவானந்தம் க்ளூ கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் தர்ஷினியை தேடி போன இடத்தில் அங்கு ஈஸ்வரி, ஜனனி, நந்தினி, ரேணுகா எல்லோருக்கும் அதிர்ச்சி காத்திருக்கிறது.
அதுபோல மறுபக்கத்தில் குணசேகரனிடம் ஆதிரை, சக்தி, கதிர் என எல்லோருமே ரவுண்டு கட்டி கேள்வி கேட்க குணசேகரன் அதிர்ச்சியாகி ஒரு முடிவு எடுத்து இருக்கிறார் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் தர்ஷினியை கடத்தி மூன்று வாரங்களுக்கு மேலே ஆகிவிட்டாலும் எப்போதான் தர்ஷினி காப்பாற்றப்படுவார் என்று எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது. இதுவரைக்கும் தர்ஷினிக்கு குத்துச்சண்டை கராத்தே எல்லாம் தெரியும் என்று இருந்தாலும் அதை எந்த இடத்திலும் பயன்படுத்தவில்லையே என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது.
அதை நேற்றைய எபிசோடில் தர்ஷினி நினைத்துப் பார்க்கிறார். இப்படியான நிலையில் தான் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் தர்ஷினி ரவுடிகளிடமிருந்து தப்பித்து காட்டுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறார். அப்போது அவரை தேடி வந்த ஈஸ்வரி, நந்தினி, ரேணுகா, ஜனனி எல்லோரும் தர்ஷினி அடைத்து வைத்திருந்த இடத்திற்கு வந்து விடுகின்றனர்.
அதோடு அங்கு தர்ஷினி தன்னை காப்பாற்றும்படி எழுதி போட்ட பேப்பரையும் எடுத்து படித்து பார்த்துவிட்டு தர்ஷினி இங்கே தான் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை தெரிந்து தர்ஷினியை தேடி அலைகின்றனர். அப்போது அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிய தர்ஷினி காட்டுக்குள் இருந்து பார்த்து மீண்டும் அதே இடத்திற்குள் வருகிறார்.
இப்படியாக ப்ரோமோவில் தர்ஷினியும், எதிர்நீச்சல் வீட்டு பெண்களும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கத்தில் போலீஸ் ஸ்டேஷனில் போலீசார் கூட்டிட்டு போன ஜீவானந்தம் அங்கு ஒரு அதிர்ச்சியான வார்த்தையை சொல்கிறார். அதாவது அந்த பொண்ணு என்கிட்ட வேற வழியே இல்லை என்று வந்து சொல்லுச்சு அதனாலதான் நான் போக சொன்னேன் என்று சொல்கிறார்.
இது தர்ஷினியை பற்றி தான் சொல்கிறாரா? அல்லது ஆதிரையை பற்றி சொல்கிறா? என்று தெரியவில்லை. ஒருவேளை குணசேகரன் பாக்சிமில் கலந்து கொள்ள கூடாது என்று சொன்னபோது தர்ஷினி ஜீவானந்தத்திற்கு போன் பண்ணி என்ன செய்யலாம் என்று விசாரித்து இருப்பாரோ என்ற சந்தேகம் தான் வருகிறது. ஆனால் அதுதான் நடந்திருந்தது என்றால் ஜீவானந்தம் தர்ஷினியை வீட்டை விட்டு போக சொல்லி இருப்பார்.
ஆனால் அந்த நேரத்தில் வேறு சில ஆட்கள் வந்து தர்ஷினியை கடத்திட்டுபோயிருக்கிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல குணசேகரன் தர்ஷினி காணாமல் போய் இத்தனை நாட்கள் ஆனாலும் முகத்தில் எந்த வருத்தத்தையும் காட்டாமல் இருப்பதால் கண்டிப்பாக குணசேகரன் தான் ஆள் வைத்து தர்ஷினியை கடத்தி வைத்திருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் தற்போது வெளியான ப்ரோமோவில் கூட குணசேகரன் தன்னை எதிர்த்து தன்னுடைய தங்கச்சி தம்பிமார்கள் கூட்டு சேர்ந்து பேசுவதை பார்த்து கோபமாகி எல்லோரும் இந்த வீட்டை விட்டுப் போங்க என்று கத்துகிறார் அதற்கு சக்தி அப்படியெல்லாம் எங்களால் போக முடியாது என்று கறாராக பேசுகிறார். அதாவது நேற்றைய எபிசோடில் ஆதிரை இந்த சொத்துகளில் பாதியை அப்பத்தா உங்க பிள்ளைங்க பேருல தானே எழுதி வச்சிருக்காங்க என்று ஞாபகப்படுத்தி இருந்தால் அதை வைத்து இப்போது சக்தி பேசுகிறார் என்று தெரிகிறது.
அதுபோல தர்ஷினி காணாமல் போய் இத்தனை நாட்கள் ஆனாலும் நீ தேடாமல் இருப்பதை பார்க்கும்போது எனக்கு சந்தேகமாய் வருகிறது என்று குணசேகரனிடம் ஆதிரை தைரியமாக பேசியிருக்கிறார். இந்த நிலையில் இன்று தர்ஷினி விஷயத்தில் குணசேகரன் எதுவும் உளறுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications