எதிர்நீச்சல்: குணசேகரனை பற்றி கதிருக்கு தெரிய வந்த உண்மை.. தர்ஷினி விஷயத்தில் கிடைத்த க்ளூ

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனவரி 27ஆம் தேதிக்கான எபிசோடில் குணசேகரன் தான் தன்னுடைய உலகம் என்று நம்பிக்கொண்டிருந்த கதிருக்கு இன்று குணசேகரன் தன்னுடைய சுய ரூபத்தை காட்டி இருக்கிறார். இதை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இன்றைய எபிசோடு செம சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறது.

அதே நேரத்தில் காணாமல் போன தர்ஷினி பற்றி போலீஸ் சொன்ன தகவலை கேட்டு ஈஸ்வரி, ஜனனி, நந்தினி, ரேணுகா, சக்தி என எல்லோரும் கதறி அழுது கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் தர்ஷினி பற்றி சில உண்மைகளும் அந்த ப்ரோமோவில் காட்டப்பட்டிருக்கிறது. அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Ethirneechal Serial 2023 January 27th promo truth came to kathir about Gunasekaran

அந்த வகையில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் எதிர்நீச்சல் சீரியல் வித்தியாசமான கதைகளத்தோடு பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் எதிரிகளுக்கு மட்டும் பஞ்சமில்லாமல் எங்கிருந்துதான் ஒவ்வொருவராக முளைத்துக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. புதியது புதியதாக எதிர்நீச்சல் பெண்களுக்கு மட்டும் எதிரிகள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.

ஏற்கனவே குணசேகரன் ஒரு பக்கத்தில் ஆட்டம் போட்டு அனைவரையும் ஆட்டி படைத்து கொண்டு இருக்க அதிலிருந்து வெளியே வரலாம் என்று நினைத்திருந்த நிலையில் இப்போது கிருஷ்ணசாமி மெய்யப்பன், ராமசாமி மெய்யப்பன் என்று இன்னொரு குடும்பத்தின் மூலமாகவும் ஜனனிக்கு புது பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. அவர்களோடு போராடிக் கொண்டிருக்கும்போது இப்போது தர்ஷனியை கடத்தப்பட்டிருக்கிறார்.

ஏற்கனவே இந்த சீரியலில் பெண்கள் இப்போது தான் எதிர்நீச்சல் போடுவார்கள் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு அவர்கள் நினைத்தது இப்போது நடக்கப் போகிறது. இதுவரைக்கும் புடவையை கட்டிக்கொண்டு வீட்டில் குணசேகரன் கேட்கும் போதெல்லாம் காபி போட்டும், சாப்பாடு செய்து கொடுத்தும் வீட்டிற்குள் புழுங்கிக் கொண்டிருந்த பெண்கள் கூட இப்போது வெளியே வந்து தைரியமாக தன்னுடைய பிள்ளையை தாங்களே தேடிக் கொள்கிறோம் என்று துணிச்சலாக முடிவெடுத்து இருக்கிறார்கள்.

Ethirneechal Serial 2023 January 27th promo truth came to kathir about Gunasekaran

அதுவும் எல்லா பெண்களும் இப்போது சுடிதாரில் வந்திருக்கின்றனர். இதனால் இனி தான் இந்த சீரியலில் பல அதிரடியான காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நேற்றைய எபிசோடில் தர்ஷினி அங்கிருந்த அடியாள்களிடமிருந்து தப்பித்து வெளியே வந்திருந்தார்.

அப்போது அந்த கூட்டத்தின் தலைவர் இடம் வசமாக சிக்கி இருக்கிறார். ஆனால் அவரிடம் இருந்து எப்படியும் தர்ஷினி தப்பித்து விடுவாரா என்பது தான் எதிர்பார்ப்பாக இருக்கிறது. காரணம் அந்த ரவுடி பெரிய உருவத்தில் இருக்கிறார். கையில் கட்டையோடு நிற்கிறார். ஆனால் தர்ஷினி ஏற்கனவே குத்துச்சண்டை வீராங்கனையாக இருப்பதால் இதுவரைக்கும் தன்னுடைய திறமையை தன்னை கடத்தியவர்களிடம் காட்டாமல் இருந்த தர்ஷினி இப்போது காட்டினால் இன்றைய எபிசோடு தீயாக இருக்கும்.

Ethirneechal Serial 2023 January 27th promo truth came to kathir about Gunasekaran

அதே நேரத்தில் இன்றைய எபிசோடுக்காக வெளியான ப்ரோமோவும் வேற லெவலில் இருக்கிறது. அதாவது கதிரை பார்த்ததும் விஷாலாட்சி தன்னுடைய தம்பியிடம் இவன் என் பையன் கதிரே இல்லை, இவன் நந்தினி புருஷன் என்று திட்டிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஏற்கனவே போலீஸ் தங்களுக்கு ஒரு கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் கிடைத்திருக்கிறது என்று சொன்ன இடத்திற்கு எதிர்நீச்சல் பெண்களும் வந்திருக்கின்றனர்.

அவர்களிடம் போலீஸ் நீங்க என்னன்னு சொன்னாதான் நாங்க அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.. அப்போது அங்கிருந்த உடலை பார்த்து எல்லா பெண்களும் கதறி அழுது கொண்டிருக்கின்றனர். ஆனால் அது எப்படியும் தர்ஷினியாக மட்டும் இருக்காது காரணம் அந்த பெண்ணின் தலையில் இரும்புராடால் அடித்து உடைக்கப்பட்டிருக்கிறது என்று போலீஸ் நேற்று சொன்னார்.

ஆனால் தர்ஷினி எதிரே நின்ற ரவுடியின் கையில் கட்டை தான் இருந்தது. அதனால் இது தர்ஷினியாக இருக்க வாய்ப்பே இல்லை. அதே நேரத்தில் வீட்டில் கதிர் எங்க வீட்டுப் பிள்ளையை நாங்க தேடி கொண்டு வாரோம் என்று சொல்ல அதற்கு குணசேகரன் யார் வீட்டு பிள்ளையை யார் தேடுறது என்று மிரட்டிக்கொண்டு வருகிறார். இதுவரைக்கும் தன்னுடைய அண்ணன் தன் மீது பாசம் வைத்திருக்கிறார் என்று நம்பிக்கொண்டிருந்த கதிருக்கு இன்று குணசேகரன் பேசியது பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

அதே நேரத்தில் குணசேகரன் தான் ஓட்டு பெறவேண்டும் என்பதற்காக தர்ஷினியை ஆள் வைத்து கடத்திருப்பாரா? என்று கேள்விகளும் ஏற்கனவே அனைவருக்கும் இருக்கிறது. இந்த நிலையில் இன்று தன்னுடைய தம்பிகள் தர்ஷினினை தேடி போவதையும் குணசேகரன் கோபமாக தடுப்பதால் குணசேகரன் தான் உண்மையில் தர்ஷினியை கடத்தி வைத்திருக்கிறாரா? என்ற கேள்விகள் இன்னும் வலுப்பெறுகிறது. நீங்கள் இது பற்றி என்ன நினைக்கிறீங்க என்பதை கமெண்டில் தட்டி விடுங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+