எதிர்நீச்சலில் ரசிகர்கள் எதிர்பார்த்தது நடந்தது.. அதிரடியாக மாற்றப்பட்ட கதை.. தர்ஷினி விஷயத்தில் ஃபயர் மோட்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனவரி 31ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாக இருக்கிறது. இதில் மருத்துவமனையில் இருக்கும் சக்திக்கு துணையாக ஜனனி மருத்துவமனையில் இருக்க வேண்டும் என்று ஈஸ்வரி சொல்லிக் கொண்டிருக்க, அதற்கு சக்தி எதிர்பார்க்காத பதிலை சொல்கிறார்.
ஏற்கனவே எதிர்நீச்சல் சீரியல் பெண்கள் எப்படி முன்னேற்றம் அடைகிறார்கள் என்ற கதையை மையமாகக் கொண்டு போய்க் கொண்டிருக்கும் நிலையில், பெண்களுக்கு துணையாக சக்தி இத்தனை நாட்களும் இருப்பதால் பெண்கள் இன்னும் சுயமாக முடிவெடுக்கவில்லையே என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில் இப்போது சக்தி மருத்துவமனையில் இருக்கும் போது தர்ஷினியை பெண்கள் மட்டுமே தேடி கண்டுபிடிக்க இருக்கிறார்கள். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

பெண்கள் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டே சீரியல் தொடங்கப்பட்டது. ஆனால் இத்தனை நாட்களாக கதை நகர்ந்து கொண்டிருந்தாலும் குணசேகரன் தான் ஒவ்வொரு இடத்திலும் ஜெயித்துக் கொண்டிருக்கிறார். பெண்கள் அணியினர் எப்போதும் வாய்சவடால் மட்டுமே விட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கடைசியில் தோற்றுப் போய் விடுகிறார்கள். இது ரசிகர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
எப்போ தான் இந்த பெண்கள் தங்களாக சுயமாக முயற்சி எடுத்து வெற்றி பெறுவார்கள் என்பது தான் ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அது இப்போது நடக்க தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே சக்தி வீட்டு பெண்களுக்கு ஆதரவாக மாறிவிட்டார். அதைத் தொடர்ந்து இப்போது கதிரும் தனக்கு ரவுடிகளால் அடிபட்ட பிறகு நந்தினியை புரிந்து கொள்ள தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில் இப்போது தர்ஷினி காணாமல் போயிருக்கும் போது வீட்டு பெண்கள் இனி எந்த ஆண் துணை இல்லாமல் நாங்களே எங்க பொண்ணை கண்டுபிடித்து வீட்டுக்கு கூட்டிட்டு வருவோம் என்று சபதம் எடுத்து இருக்கின்றனர்.
அதே நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத விதமாக இத்தனை நாட்களாக பெண்களுக்கு துணையாக இருந்த சக்திக்கு ஆக்சிடென்ட் ஆகி இருக்கிறது. இதனால் இனி மேற்கொண்டு தர்ஷினியை எப்படி தேடுவார்கள் என்று கேள்வி எழுந்து வந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் சக்தி, ஜனனியும் உங்க கூட வந்து தர்ஷினியை கண்டுபிடித்தால் தான் நான் சந்தோஷப்படுவேன். இப்போ ஜனனி என் கூட இருக்கிறதை விட உங்க கூட இருக்கிறது தான் நான் விரும்புகிறேன் என்று சொல்ல,

வீட்டுப் பெண்கள் எல்லோரும் தர்ஷினியை தேடி போகின்றனர். ஏற்கனவே இந்த சீரியலில் கதாநாயகி மதுமிதா மற்றும் ஈஸ்வரி ஆக நடிக்கும் கனிகா இருவரும் பெண்கள் எல்லோரும் காட்டில் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றனர். இதனால் இவர்கள்தான் இனி தர்ஷினையை கண்டுபிடிக்க போகிறார்கள் என்று தெரிகிறது. தர்ஷினி தன்னை அடைத்து வைத்திருக்கும் நிலையில் அங்கு ஒரு பேப்பரில் காப்பாற்றும்படி எழுதி ஜன்னல் வழியாக வெளியே போடுகிறார்.
அதே நேரத்தில் காரில் எல்லா பெண்களும் வந்து கொண்டிருக்கின்றனர். முதல் முறையாக ஈஸ்வரி காரை ஓட்டிக் கொண்டிருக்கிறார். இப்படி துணிச்சலான காட்சிகள் இன்றைய எபிசோட்டில் இடம்பெற இருக்கிறது. அதே நேரத்தில் தர்ஷினியை காப்பாற்றும் போது பெண்கள் பெரிய அளவில் பைட்டிங், சேஸிங் எல்லாம் செய்யப் போகிறார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால்தான் தர்ஷினியை காப்பாற்றுவதற்காக ஜீவானந்தம் வீட்டிற்கு பெண்கள் போயிருந்த நேரத்தில் கூட அங்கு ஜீவானந்தம் ஊருக்கு போய் விட்டதாக கதையை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். இத்தனை நாட்களாக குணசேகரன் ஜெயித்துக் கொண்டிருந்த நிலையில் இப்போது தன்னுடைய தம்பிகளும் தனக்கு எதிராக மாறிக் கொண்டிருக்கின்றனர். எதிரிகளின் பக்கத்தில் குணசேகரன் அடைக்கலம் புகுந்திருக்கும் நிலையில் குணசேகரனுக்கு இனி தான் அழிவு ஆரம்பமாக போகிறது. இனி வீட்டு பெண்கள் அடுத்தடுத்து வெற்றி பெற போகப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications