எதிர்நீச்சல்: கரிகாலன் விஷயத்தில் ஆதிரை எடுத்த முடிவு.. கோபத்தில் குணசேகரன்.. ஜனனியின் புது பிளான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரை மற்றும் கரிகாலன் திருமண விஷயத்தில் மூன்றாம் நபர் கூட கேஸ் கொடுத்தால் இந்த திருமணம் செல்லாது என்று ஜனனி கூறுகிறார்.

இந்த நிலையில் ஆதிரை கரிகாலனோடு திருமண வாழ்க்கையில் என்ன முடிவு எடுக்கிறார் என்று நந்தினி, ஜனனி, ரேணுகா மூவரும் கேள்வி கேட்கின்றனர்.

Ethirneechal serial 2023 July 13th promo update Athirai decision in Aruni case

அதே நேரத்தில் அங்கு வரும் குணசேகரன் ஆதிரையை மிரட்ட அதற்கு ஆதிரை சற்றும் எதிர்பார்க்காத செயலை செய்கிறார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த எதிர்பார்க்காத திருப்பங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஆதிரை மற்றும் கரிகாலன் திருமணம் யாரும் எதிர்பார்க்காதபடி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது. அதை தொடர்ந்து தற்போது பட்டம்மாள் ஷேர் 40% ஜீவானந்தம் பெயருக்கு மாற்றுவதற்கான வேலைகள் வேக வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

Ethirneechal serial 2023 July 13th promo update Athirai decision in Aruni case

ஆனால் இது எல்லாம் தெரியாத குணசேகரன் தன் வீட்டு மருமகள்கள் பெயரில் இருக்கும் சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார். அதஅதே நேரத்தில் பட்டம்மாள் சொத்து தனக்கு தான் வரும் என்று அதீத நம்பிக்கையில் இருக்கிறார். இந்த நிலையில் இந்த ரகசியங்களை தெரிந்த கௌதம் ஜனனிக்கு ஆதரவாக இருப்பாரா? அல்லது அவர் நேசிக்கும் ஜீவானந்தம் சார்ந்த அமைப்புக்கு உண்மையாக இருப்பாரா? என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே நேற்றைய எபிசோட்டில் ஜீவானந்தத்திடம் ஜனனி தன்னுடைய தோழி என்பதை பற்றி கௌதம் கூறி இருக்கும் நிலையில், ஜீவானந்தம் கௌதம்க்கு மேலும் சில சலுகைகளை கொடுத்து தன்னோடு இருக்கும் படி கூறி இருக்கிறார். இந்த நிலையில் இந்த பிரச்சனையில் ஜீவானந்தத்தால் ஜனனிக்கு என்ன பிரச்சனை வரப்போகிறது என்று யூகிக்க முடியாமல் இருக்கிறது.

Ethirneechal serial 2023 July 13th promo update Athirai decision in Aruni case

அதே நேரத்தில் ஆதிரையோடு தனக்கு முதலிரவு நடக்க வேண்டும் என்று கரிகாலன் அடிக்கடி பேசி வீட்டில் இருப்பவர்களை பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில கிச்சனில் வீட்டு மருமகள்கள் அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜனனி ஆதிரை மற்றும் கரிகாலன் கல்யாணத்துல மூணாவது மனுஷங்க கேஸ் போட்டு இருந்தா கூட செல்லாது என்று கூறுகிறார்.

அதற்கு நந்தினி அப்போ அதை நாமலே செஞ்சிடலாமே என்று சொல்ல, ஆதிரை என்ன நினைப்புல இருக்கான்னு தெரியாம நம்ம எப்படி பண்றது அக்கா என்று ஜனனி கேட்க, அதற்கு ஆதிரை முதல்ல நான் அருணை பார்க்கணும் என்று கூறுகிறார். அப்போது அங்கு குணசேகரன், ஞானம், கரிகாலன் மூவரும் வருகின்றனர். நந்தினியிடம் ஏன் நந்தினி உன் கிட்ட இவர்களுக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்ய சொல்லி சொன்னேன் இல்லையா என்று கேட்கிறார்.

Ethirneechal serial 2023 July 13th promo update Athirai decision in Aruni case

அதற்கு நந்தினி அதெல்லாம் பண்ண முடியாது என்று சொல்ல, அதற்கு கரிகாலன் கல்யாணம் ஆன நாளுல இருந்து இவங்க இதேதான் சொல்லிக்கிட்டு இருக்காங்க என்று சொல்ல, குணசேகரன் ஆதிரையிடம் யம்மா இங்க பாருமா என்று சொல்ல, அதற்கு ஆதிரை எனக்கு இவன் வேண்டாம் என்று கத்தி பேசி பக்கத்தில் இருந்த அருவாமனையை எடுத்து தன்னுடைய கழுத்தில் வைத்து அனைவரையும் மிரட்டுகிறார். தற்போது இந்த பரபரப்பான பிரமோ வைரல் ஆகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+