ஜீவானந்தத்திற்கு எதிராக ஜனனியை வைத்து பிளான் போடும் குணசேகரன்.. விறுவிறுப்பின் உச்சம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் ஜூலை 24ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
அதில் ஜனனியால் போன சொத்து நான் இனி ஜனனியை வைத்தே கொண்டு வருவேன் என்று குணசேகரன் சவால் விடுகிறார்.

அதுபோல ஜனனி அப்பத்தா முன்பு கதறி அழுது கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத அடுத்தடுத்த திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதுவரைக்கும் ஜீவானந்தம் யார் என்று தெரியாமல் இருந்த ஜனனிக்கும், குணசேகரனுக்கும் இப்போது பெரிய அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. அதே நேரத்தில் குணசேகரனுக்கு அடுத்தடுத்து ஜீவானந்தம் செக் வைத்து பிரச்சனை பண்ணுகிறார்.

அதே நேரத்தில் ஜனனியால் ஒன்றும் செய்ய முடியாமல் தவிக்கிறார். ஜனனிக்கு இருந்த ஒரே நண்பன் கௌதமும் தன்னுடைய மொத்த ரகசியங்களையும் தெரிந்து தனக்கு எதிராக இருக்கும் ஜீவானந்தத்தின் கூட்டாளி என்பதை தெரிந்த ஜனனி பெரிய அளவில் மன உளைச்சலில் இருக்கிறார். இந்த நிலையில் இதுவரைக்கும் ஜீவானந்தம் நல்லவன் என்று நினைத்துக் கொண்டிருந்த மொத்த குடும்பமும் இப்போது ஜீவானந்தத்தை பற்றி அப்பத்தா முன்பு புலம்பி கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே நேற்றைய எபிசோட்டில் ஜீவானந்தம் பிரச்சனை பண்ணுவதால் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகலாம் என்று போன குணசேகரனுக்கு அடுத்த பிரச்சனையை ஜீவானந்தம் கொடுத்த நிலையில் இனி குணசேகரன் என்ன முடிவெடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது. அதே நேரத்தில் ஜனனி இனி குணசேகரனுக்கு ஆதரவாக ஜீவானந்தத்தை எதிர்த்து தன்னுடைய சொத்துக்களை திரும்ப பெறுவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த குணசேகரன், ஞானம், கதிர், ஆடிட்டர் 4 பேரும் ஒரு கோவிலில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது குணசேகரனை தொடர்ந்து கதிரும் தன்னுடைய சட்டையை கழட்டி தோளில் போட்டுவிட்டு கோபமாக இருக்க அதே நேரத்தில் வீட்டில் ஜனனி அப்பத்தா முன்பு அழுது கொண்டிருக்கிறார்.
அப்போது அந்த ஜீவானந்தம் நல்லவன் இல்ல அப்பத்தா. நாம ஏமாந்துட்டோம். நாம தோத்துட்டோம் என்று அழுது கொண்டிருக்க, அதே நேரத்தில் ஆடிட்டர் குணசேகரனிடம் அவனுக்கு இப்பவே முடிவு கட்டணும்னா, அது உங்க வீட்டு பொம்பளைங்கலால் தான் முடியும் என்று சொல்ல, அதற்கு குணசேகரன் ஜனனியால் போன சொத்து ஜனனியாலே வரப்போகுது பாரு நடத்திக் காட்டுதனா இல்லையா பாரு என்று சவால் விட்டு வீட்டிற்கு வருகிறார்.

வீட்டிற்கு வந்ததும் காரில் இருந்து இறங்கும்போது வீட்டை பார்த்து கதறி அழுது கொண்டிருக்கிறார். அதை பார்த்த மொத்த மருமகள்களும் பதறி ஃபீல் பண்ணி கொண்டிருக்கின்றனர். குணசேகரனை கைத்தாங்கலாக வீட்டிற்குள் கூட்டிக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு ப்ரோமோவால் வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications