எதிர்நீச்சல்: ஜீவானந்தத்தின் துப்பாக்கி சூடு.. பரிதாப நிலையில் குணசேகரன்.. நந்தினியின் பதிலடி
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனின் சொத்தில் பட்டம்மாள் ஷேர் 40% தற்போது ஜீவானந்தம் பெயருக்கு மாறி இருக்கிறது.
இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். அதே நேரத்தில் குணசேகரன் ஜீவானந்தம் தன்னை மிரட்டியதை நினைத்து தூக்கத்திலும் பதறி கொண்டு இருக்கிறார்.
இந்த நிலையில் ஜூலை 25ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

எதிர்நீச்சல் சீரியலில் அடடா என்று சொல்கிற மாதிரி அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. இனி என்ன நடக்கப் போகிறது என்று யோசிக்க முடியாத வகையில் இந்த சீரியலில் புதுப்புது பிரச்சனைகளும் முளைத்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஜீவானந்தம் பட்டமாளுடைய 40% தன்னுடைய பெயருக்கு மாற்றி குணசேகரன் மற்றும் அவருடைய தம்பிமார்களை கம்பெனியை விட்டு அடித்து துரத்தி இருக்கிறார்.
அதைத்தொடர்ந்து குணசேகரன் இனி ஜீவானந்தத்திடம் இருக்கும் சொத்துக்களை தன்னுடைய வீட்டு மருமகளை வைத்து நான் மீண்டும் பெறப்போகிறேன் என்று அதற்கான நாடகத்தை தொடங்க போகிறேன் என்றும் நேற்று கூறியிருந்தார். ஏற்கனவே ஜீவானந்தத்தை கேள்வி கேட்க வேண்டும் என்று நந்தினி கூறியிருந்த நிலையில் நேற்று குணசேகரன் பீல் பண்ணி பேசியதை பார்த்து நாங்கள் இனி போராடி உங்களுக்கு ஜீவானந்ததிடம் இருந்து சொத்துக்களை வாங்கி தருகிறோம் என்று வாக்கு கொடுத்து இருக்கிறார்.

ஏற்கனவே ஆதிரை விஷயத்தில் நாங்க தோற்று விட்டோம். ஆனால் இந்த சொத்து விஷயத்தில் இனி தோற்க மாட்டோம் என்று கூறி குணசேகரனுக்கு ஆறுதல் கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில் குணசேகரன் தன்னை ஜீவானந்தம் சூட் பண்ணுவது போன்று கனவு கண்டு கதறி அழுது கத்துகிறார்.

குணசேகரன் கத்துவதை பார்த்து கதிர், சக்தி, ஜனனி, கரிகாலன் என அனைவரும் ஓடி வருகின்றனர். குணசேகரன் இருக்கும் நிலைமையை பார்த்து கதிர் பயப்படாதீங்க அண்ணே நான் இருக்கேன் என்று கூறி ஆறுதல் தெரிவிக்க, நந்தினி இப்படித்தான் சொல்லுவீங்க அங்க போயிட்டு அடி வாங்கிட்டு வருவீங்க என்று கதிரை கலாய்க்க கதிர் நந்தினியை முறைத்து பார்க்கிறார்.
அப்போது கரிகாலன் "சிங்கம் மாதிரி இருந்தீங்க மாமா, உங்களை இப்படி சரிச்சு போட்டுட்டாங்களே" என்று குணசேகரனை பார்த்து ஆறுதல் கூற, அதற்கு குணசேகரன் "நான் பிறந்தேன் மதுரையிலே" என்று ஒப்பாரி வைத்து பாடுகிறார். அதைப் பார்த்து மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி நிற்கின்றனர். இந்த நிலையில் இன்று என்ன நடக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications