எதிர்நீச்சல்: ஜீவானந்தம் அபகரித்த அடுத்த சொத்து.. குடும்பத்தினருக்கு கதிர் கொடுத்த அதிர்ச்சி
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தம் குணசேகரன் இருக்கும் வீட்டிலும் தனக்கு பங்கு இருக்கிறது என்று சொல்ல குணசேகரனுக்கு நெஞ்சு வலி வருகிறது.
அந்த நேரத்தில் கதிர் யாரும் எதிர்பார்க்காத வகையில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்கிறார்.

இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியலில் அதிரடியான பல எதிர்பாராத திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். குணசேகரன் காலில் தன்னுடைய பக்கத்தில் இருந்த அனைவரையும் கிளம்புமாறு கூறிவிட்டு கதிரையும் கரிகாலனையும் மட்டும் தன்னுடைய தலை மற்றும் கால் பகுதியில் காவலுக்கு உட்கார வைக்கிறார்.

பிறகு "ஜீவானந்தம் வந்தா என் பக்கத்துல விட்டுறாதீங்கப்பா. அவன் கிட்ட இருந்து துப்பாக்கிய வாங்கிருங்க" என்று சொன்னதையே சொல்லி திரும்பத் திரும்ப சொல்லி புலம்பிக் கொண்டிருக்க, பிறகு கதிரும் கரிகாலனும் குணசேகரனுக்கு மாத்திரை கொடுத்து தூங்க வைக்கின்றனர்.
மறுநாள் காலையில் குணசேகரன் மற்றும் கரிகாலன், கதிர் மூவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கிச்சனில் ரேணுகாவும் ஈஸ்வரியும் சமைத்துக் கொண்டு இருக்க, நந்தினி மட்டும் யோசனையில் இருக்கிறார். அதை பார்த்த ரேணுகா நந்தினி இடம் என்ன ஆச்சு என்று கேட்டதற்கு நந்தினி," நேத்து மூத்தவர் செய்த கூத்த நினைத்து எனக்கு அடி வயிற்றிலிருந்து சிரிப்பு சிரிப்பாக வந்தது" என்று சொல்லி நேற்று நடந்ததை மீண்டும் ஒவ்வொன்றாக சொல்லி சிரித்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கு ஈஸ்வரி," அவர் மோசமான ஆள்தான் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் அவர் கஷ்டப்படுவது சிரிக்க வேண்டிய விஷயம் இல்லை" என்று சொல்லி, இனி ஜீவானந்தத்தை எப்படி எதிர்க்கிறது என்பதை பற்றி மட்டும் யோசி என்று கூறுகிறார். அந்த நேரத்தில் ஆடிட்டர் வீட்டிற்கு வருகிறார். ஆடிட்டரை கண்டதும் முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும் என்று நந்தினி, ரேணுகா, ஈஸ்வரி மூவரும் மாடிக்கு போகின்றனர் .
ஆடிட்டரிடம் குணசேகரன்," உங்க முழியே சரியில்ல, என்ன விஷயம் சொல்ல வந்தீங்களோ அதை சீக்கிரமா சொல்லுங்க" என்று கேட்க, அதற்கு ஆடிட்டர் 40% ஷேர்.. என்று இழுத்துக் கொண்டு இருக்க, அதை பார்த்து கடுப்பான கதிர் என்ன ஆச்சுன்னு சொல்லுங்க என்று கேட்க, அந்த லிஸ்ட்ல வேற என்னத்த சேர்த்து இருக்கான் குணசேகரன் கேட்க, இல்ல சார் இந்த வீடு என்று சொல்ல, எது அந்த பழைய வீடா? எனக்கேட்க, இல்ல நீங்க இருக்கிற இந்த வீடு என்று சொன்னதும் அதிர்ச்சியில் குணசேகரன நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே விழுந்து விடுகிறார்.
அப்போது குணசேகரன் நிலைமையை பார்த்த அனைவரும் கதறுகின்றனர். கதிர் குணசேகரனை தூக்கி தோள்மேல் போட்டுக்கொண்டு கொண்டு செல்ல முயற்சி செய்கிறார். அப்போது எல்லோரும் பக்கத்தில் வர முயற்சி செய்யும் போது, அனைவரையும் கதிர் திட்டுகிறார். ஈஸ்வரியை நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா? பொண்டாட்டினா கழுத்துல கிலோ கணக்குல தாலிய தொங்க விட்டா மட்டும் போதுமா? என்று திட்டிவிட்டு குணசேகரனை தோளில் தூக்கி போட்டு கொண்டு மாடியில் இருந்து வேகமாக கீழே வருகிறார்.

கீழே கார் எதுவும் இல்லாததால் பைக்கை எடுத்துக் கொண்டு குணசேகரனை தன்னுடைய பக்கத்தில் இருக்க வைத்து கரிகாலனை குணசேகரனை பிடித்துக் கொள்ளும்படி ஹாஸ்பிடலுக்கு வேகமாக கூட்டிக்கொண்டு செல்கிறார். அப்போது குணசேகரன் தலை தொங்கியபடி மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் குணசேகரனை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு கதிர் கிளம்பியதும் வீட்டில் இருந்த மற்றவர்களும் ஹாஸ்பிடலுக்கு போவதற்காக தெருவில் வந்து கொண்டிருக்கின்றனர். அப்போது ஹாஸ்பிடலில் கதிர் குணசேகரனை சேர்த்ததும் அங்கே அவருக்கு முதலுதவி நடக்கிறது. இவ்வாராக நேற்றைய எபிசோடு இருந்தது. இந்த நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்க்க வைக்கப்பட்டிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications