குணசேகரன் உடல்நிலை குறித்து மருத்துவர் சொன்ன அதிர்ச்சி.. ஜீவானந்தத்தை சந்திக்க போகும் மருமகள்கள்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜூலை 27 ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
இதில் குணசேகரன் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அதே நேரத்தில் குணசேகரனை காப்பாற்றுவதற்காக ஜனனி மற்றும் நந்தினி, ஈஸ்வரி மூவரும் புது முடிவு எடுக்கின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் எதிர்பாராத அதிரடியான பல திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. ஏற்கனவே ஜீவானந்தம் பட்டமாளின் 40% சொத்தை கைப்பற்றி விட்ட நிலையில் அதை தெரிந்து ஜனனி மட்டுமல்லாமல் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
அதே நேரத்தில் ஜீவானந்தம் துப்பாக்கி காட்டி மிரட்டியதால் பயந்து போன குணசேகரன் தூங்க கூட முடியாமல் அதை நினைத்து தவித்துக் கொண்டிருக்கிறார். அதை நேரத்தில் ஏற்கனவே ஜனனியை வைத்து நான் என்னிடம் இருந்து ஜீவானந்தம் பிடுங்கிய சொத்துகளை மீண்டும் பெறுவேன் என்று பிளான் போட்டு இருக்கிறார். இதனால் குணசேகரன் நடிக்கிறாரா? என்றும் சந்தேகப்பட தோன்றுகிறது.

தன் வீட்டு பெண்களை ஏமாற்றி தனக்கு ஆதரவாக ஜீவானந்தத்திடம் சண்டையிட்டு சொத்தை மீட்டுக் கொண்டு வந்து விட வேண்டும் என்று புரியாதாக நாடகத்தை தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் ஆடிட்டர் வந்து குணசேகரன் இருக்கும் இந்த வீடும் கூட ஜீவானந்தத்தின் 40% சொத்தில் இருக்கிறது என்று சொல்ல, அதை கேட்டு அதிர்ச்சியான குணசேகரன் கதறி அழுது நெஞ்சு வலியில் துடிக்கிறார்.
இந்த நிலையில் தற்போது வெளியான ப்ரோமோவில் குணசேகரன் மருத்துவமனையில் இருக்கிறார். அப்போது ஹாஸ்பிடலில் இருக்கும் நந்தினி, ரேணுகா மற்றும் ஜனனியிடம் "இனி நாம போய் உருண்டு பிரண்டு ஜீவானந்தம் கிட்ட சொத்தை வாங்கிட்டு வரணும். அப்பதான் இவரு எந்திரிச்சு வருவாரு" என்று சொல்ல, அதற்கு ஜனனி "ஆமாக்கா அதைத்தான் செய்யணும்" என்று சொல்ல, ஈஸ்வரியும் வா ஜனனி போகலாம் என்று சொல்லி கிளம்புகின்றனர்.

அதே நேரத்தில் கரிகாலன் கதிரிடம், "மாமா நான் வேணும்னா ஐஸ் பெட்டிக்கு சொல்லிறவா..?" என்று கேட்க, கதிர் கரிகாலனை எட்டி மிதிச்சுருவேன் என்று கத்துகிறார். அதற்கு கரிகாலன்," நீ போட்ட சத்தத்திலேயே பாதி பேஷண்ட் செத்து போயிருவாங்க" என்று சொல்ல, அப்போது டாக்டர்கள் வந்து குணசேகரனின் ரிப்போர்ட் சொல்லிக் கொண்டு இருக்க, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வம் அதிகரிக்கிறது.












Click it and Unblock the Notifications