எதிர்நீச்சல்: ஜனனிக்கு எதிராக நிற்கும் கௌதம்.. குணசேகரனுக்கு வந்த மிரட்டல் போன்.. ஜனனி முடிவு..?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் பட்டமாளின் ஷேர் இன்னும் இரண்டு நாளில் ஜீவானந்தம் பெயருக்கு மாறிவிடும் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கு முழு வேலையும் கௌதம் தான் பார்க்க வேண்டும் என்று ஜீவானந்தம் அவருக்கு முதல் முறையாக வேலையை கொடுக்கிறார்.

இந்த நிலையில் கௌதம் ஜனனிக்கு எதிராக செயல்படுவாரா? அல்லது தன்னுடைய அமைப்பு முன்னேற வேண்டும் என்று அதற்கு உண்மையாக இருப்பாரா? என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் சற்றும் எதிர்பாராத பல திருப்பங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் வீட்டில் அமைதியாக இருந்த ரேணுகா முதல் முறையாக தன்னுடைய மகளுக்கு பிடிக்காத சடங்கு ஃபங்ஷனை நடத்த விட மாட்டேன் என்று குணசேகரன் இடம் கராராக பேசிக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் குணசேகரன், வீட்டுக்கு வந்தா ரேணுகா அம்மாவிடம் எப்படியாவது உன் மகளிடம் பேசி ஐஸ்வர்யாவுக்கு சடங்கு சுத்துற வேலையை பாரு. எப்படியாவது உன் மகள் ரேணுகாவை இதுக்கு சம்மதிக்க வச்சிரு என்று மிரட்டி விட்டு போயிருக்கிறார். ஆனால் ரேணுகா தன்னுடைய அம்மாவிடம் கண்டிப்பாக நான் சடங்கு வைக்க விட மாட்டேன் என்று கூறி அவரை கண்டமேனிக்கு திட்டி விடுகிறார்.
இந்த நிலையில் பட்டமாளின் ஷேர் இன்னும் இரண்டு நாளில் நம்முடைய பெயருக்கு மாறிவிடும் என்று ஜீவானந்தத்தின் பிஏ பர்ஹானா ஜீவானந்தத்திடம் கூற, இது நல்ல விஷயம் தான். ஆனால் நாம பட்டம்மாள் கைரேகை எடுப்பதற்கு முன்பு அவருடைய பேத்தியின் என்று ஒரு பொண்ணு கால் பண்ணிட்டே இருக்குமே அந்த பொண்ணு பெயர் என்ன? என்று கேட்க, அதற்கு பர்ஹானா "ஜனனி" என்று சொல்ல, கௌதம் அதிர்ச்சி அடைகிறார். பிறகு ஜீவானந்தம் நீ பட்டம்மாள் சொத்து நமக்கு வர்ற மாதிரி சீக்கிரமா வேலையை முடி என்று கௌதமுக்கு டாஸ்க் கொடுக்கிறார்.

இந்த நிலையில் வீட்டில் சண்டை போட்டுக் கொண்டிருந்த குணசேகரனுக்கு ஒரு போன் வருகிறது. ஒரு முக்கியமான விஷயத்தை பேச வேண்டும் நேரில் வாங்க என்று ஒரு நபர் கூப்பிட அவசர அவசரமாக குணசேகரன் கதிரை கூட்டிக் கொண்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில் ஐஸ்வர்யாவை ஆசிர்வாதம் செய்ய வேண்டும் என்று சக்தி ஞானத்தை கட்டாயப்படுத்தி கூட்டி கொண்டு வர ஞானம் கண் கலங்கியபடி ஆசீர்வாதம் செய்கிறார்.
பிறகு உனக்காக நான் எப்போதும் இருப்பேன் என்று ஞானம் ஐஸ்வர்யாவிடம் கூறிவிட்டு சென்று விடுகிறார். அந்த நேரத்தில் மறு வீட்டிற்கு வந்த கரிகாலனுக்கு நந்தினி ரசத்தில் வத்தல் பொடி கலக்கியதால் காரத்தில் கத்திக் கொண்டிருக்கிறார். அப்போ ஜான்சி ராணி வீட்டிற்கு வந்து வீட்டு மருமகனை இப்படியா கொடுமை படுத்துவீங்க? என்று அனைவரையும் அவமானப்படுத்தி திட்டிக் கொண்டிருக்கிறார்.

இதனால் கோபமான ஜனனி, ஜான்சி ராணியை முதல்ல வீட்டை விட்டு வெளியில் போங்க என்று திட்டுகிறார். இத்துடன் நேற்றைய எபிசோடு முடிவடைந்து இருந்த நிலையில், இன்றைய எபிசோடில் ஜீவானந்தம் பேச்சைக் கேட்டு கௌதம் நடந்து கொள்வாரா? அல்லது தன்னுடைய உயிர் தோழிக்காக அவருக்கு உதவுவாரா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் குணசேகரனுக்கு போன் செய்தது யார் என்ன பிரச்சனை என்பது பற்றியும் இன்றைய எபிசொட்டில் தெரியவரும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications